பள்ளி வாழ்க்கை
பகுதி 7 · 7 / 15
பெருவிரல், இதோ, காணிக்கையாக, குருதேவா,” என்று கொடுத்துவிட்டான்.
இது பாரதக் கதையில் ஒரு நிகழ்ச்சி! குரு—சீட தத்துவத்தை விளக்கிடும் பக்திக்கு எடுத்துக் காட்டு!
இத்தகைய குரு குணம் படைத்த குருவும், கண் மூடிச் சீடருமா, இந்தக் காலத்திற்கு, எதிர்காலத் தமிழருக்குத் தேவையான பாடங்கள், போதனைகள், எடுத்துக்காட்டுகள்! முன்மாதிரிகள்! கூடவே கூடாது!
இந்தக் காலத்திலே ஏமாந்த ஏகலவர்களும் கிடையாது, தேவையுமில்லை. அதேபோன்று, குரு குணம் படைத்த துரோணாச்சாரியார்களும் இல்லை, இருக்கத் தேவையே இல்லை!
இதே போன்று, தேவகுரு, பிரகஸ்பதியின் மனைவி தாரை, பிரகஸ்பதியின் சீடனை சந்திரனை மயக்கி, தன் ஆசை நாயகனுக்கிக்கொண்ட கதை ஒன்றும் இருக்கிறது, காவியாசிரியோடு குழைத்தும் தரப்படுகிறது! தேவையா? இத்தகைய அருவருப்பான, ஆபாசப் புராணங்கள்?
சீடனென்றும் பாராமல், சந்திரனச் சல்லாபத்திற் குழைத்த தாரைகளும், குருபத்தினியென்றும் எண்ணிடாது, கடிக்குலவின சந்திரனைப் போன்ற சீடர்களும், இவ்வளவும் நடக்கவிட்டுப் பின்னர் சாபந் தந்த
பிரகஸ்பதி பகவான்களும், அவர்களைப்பற்றிய பதிகங்களும் நாட்டு நலனைப் போக்கிட முடியுமா? எதிர்கால மக்களாகிய, மாணவருக்கு, இவையெல்லாந் தேவைத்தானா? இல்லையே!
இயற்பகை நாயனார், என்ற ஒரு நாயனரைப் பற்றிப் பெரிய புராணத்தில் கூறப்படுகிறது, பெரிய புராணம் இலக்கியத்துள் ஒன்று என்று கருதப்பட்டு, பாடமாகப் போதிக்கப்பட்டு வருகிறது, மாணுக்கர்களுக்கு!
சிவனார், ஒருநாள் திடமென்று புறப்பட்டார், பூலோகம் நோக்கி. எதற்கு?
பூலோக வாசிகளேப் பஞ்சம், பசி, பட்டினி, இன்ன பிற இடுக்கண்களிலிருந்து விடுதலைத் தடுத்தாட் கொள்ளவா? இல்லவே இல்லை! பின், எதற்கு?
தடுத்தாட் கொள்ளத்தான் பூலோகம் சென்றார், உமையொருபாகனார். இயற்பகை என்ற தமது பக்தனைப் பரிசோதித்துத் தடுத்தாட் கொள்ளப் பூலோகம் சென்றார்.
சிவனார், தமது உருவை மறைத்து, மாறுவேடம் பூண்டார். சிவனடியார் போன்று, சிவனார் மாறினார். மாறி இயற்பகையின் இல்லம் சென்றார்.
இயற்பகை என்பான் ஒரு சிவத்தொண்டன்.
சிவனடியார் கேட்டவற்றை யெல்லாம், இல்லையென்று கூறாது, வாரி வழங்கிவந்தான். சிவனடியார்க்குச் செய்யுந்தொண்டே சிவத்தொண்டு; சிவனருக்குச் செய்யப்படும் திருத்தொண்டு என்ற மனநிலை படைத்தவர். அவ்விதமே நடந்தும் வந்தவர், அவர்.
எம்பெருமான், திருக்கைலாயபதி, ஈசன் அவர்கள் சிவனடியார் உருவத்திலே, இயற்பகையின் இல்லம் ஏகி, ‘இல்லையென்று ஈயும் இயற்பகை நீதானே? இல்லையென்று தருவீரோ, கேட்டவற்றை” என்று கேட்டார்.
சிவ நேசச் செல்வரை, சிவனடியாரைக் கண்ட இயற்பகை, இறும்பூதெய்தி, அவரை வரவேற்று, “என்னவேண்டும், அடியவரே, அடியேன் அளிக்கத் தவறேன்,” என்று அன்பொழுகக் கேட்டார்.
இவ்வாறு கேட்ட இயற்பகையை நோக்கி, “அப்பனே, எமக்கு உனது மனைவியைத்தா, அவள் எம்முடன் அனுப்பிவிடு,” என்று கேட்டருளினார், சிவனடியார் வேடத்திலே இருந்த, அர்த்தநாரீசுவரர்.
“மணந்த மனைவியைத்தா, கட்டிய மனைவியைக் கூட்டியனுப்பு, உடன்”, என்றதும் இயற்பகை நாயனார் பதை பதைத்து சீறிச் சினந்து “என்ன கொடுமதி உமக்கு அடாததைக் கேட்கிறீர், படாததையெல்லாம் படப்போகிறீர், சிவநேசர் உருவில் வந்து, சிற்றிடையாளைத் தேடுகிறீர்;
அடியவர் வேடத்திலே வந்து அடுத்தவன் பெண்டாட்டியைக் கூட்டியனுப்பு, என்னோடு, என்று துணிவுடன் கேட்கிறீர்,” என்றெல்லாம் கனல் தெறிக்கப் பேசியிருப்பார், கோபத்தின் எல்லையையும் தாண்டியிருப்பார் என்றெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம்!
“உன் மனைவி வேண்டும், உன் மனைவியை என்னோடு அனுப்பவேண்டும்” என்று கேட்ட சிவனடியாரைக் கோபிக்கவில்லை, இயற்பகையார்; கோபிக்காது மட்டுமல்ல, அந்த அடியவரைக் கைகூப்பி வணங்கி, அவருடன் தமது மனைவியைக் கூட்டியுமனுப்பினார், இயற்பகை நாயனார்.
இந்த அடாத செயல், தகாத முறையை, கேடான நடத்தையைக் கண்ட, கேட்ட அக்கம் பக்கத்தினரும், சுற்றாரும் மற்றோரும் சூழ்ந்து சென்று தடுத்தனர்.
“யார் தடுத்தாலென்ன? சிவனடியாருக்குச் சேவை செய்வதே, சிவத்தொண்டு, சிவனருக்குத் திருப்தி தரும் தொண்டு, அடியவர் யாசிப்பதை, கேட்பதை, விரும்புவதைத் தரத்தவற மாட்டேன், என்னைத் தடுக்காதீர்,” என்று கூறி மறுத்து, தமது மனைவியான, இல்லக் கிழத்தியை, வீட்டின் விளக்கை, வழியே வந்த விழுச்சாமியாருடன் அனுப்பிவிட்டார், இயற்பகை நாயனார்!
ஊரார், “அடுக்குமா? இந்த அக்கிரமம்” என்று ஆர்ப்பரித்துக் கிளம்பினர். சுற்றத்தினர் “சுயமரியாதையற்ற
செயல், சும்மாவிடக்கூடாது, அந்தச் சூதுக்காரச் சாமியை,” என்று சுடுசொற்களை வீசிப் புறப்பட்டனர், தீனதயாளன் திருத்தொண்டர் (!) சென்ற திக்கு நோக்கி!
இயற்பகையின் இல்லக் கிழத்தி உடன்வர, அரனடியார் உருவிலே வந்த ஆலகால விஷமுண்ட நீலகண்டனார் போய்க்கொண்டிருந்தார், இயற்பகையின் இல்லத்தை விட்டு!
“மனைவியை மற்றவனுடன் அனுப்பிடும் மானங்கெட்ட செயலைத் தடுத்து நிறுத்தியே தீருவோம்,” என்று சென்ற மக்கள், சிவனடியாரை வழியில் மறித்து நிறுத்தி, இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்தச் செய்தியை, இயற்பகை கேட்டு, பதை பதைத்து துடித்தெழுந்து ஓடிச்சென்று உற்றாரையும், உறவினரையும், உபதேசம் செய்த ஊராரையும் எதிர்பேசிக் கடிந்து, தாக்கி, தன்மனைவியோடு சென்ற மகேஸ்வரன் அடியாரைப் பாதுகாப்புடன் அனுப்பமுனைந்தான்.
