உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பள்ளி வாழ்க்கை

பகுதி 6 · 6 / 15

அந்தக் காலத்திலே, ஏகலவன், என்ற ஒரு வேடன் இருந்தான். அவன் வில்வித்தை கற்க விரும்பி, வில்வித்தையில் தேர்ச்சிபெற்ற துரோணரிடம் சென்று தனக்கும் விற்பயிற்சி அளிக்குமாறு வேண்டினான்.

அரச பரம்பரைக்கன்றி, கேவலம் ஒரு வேடனுக்குத் தாம் பயிற்சி அளிக்க முடியாது என்று துரோணர் கூறி, மறுத்துவிட்டார்.

மனம் உடைந்து திரும்பிய ஏகலவன், மீண்டும் மனந்தேறி துரோணரைப்போலச் சிலை ஒன்று செய்து வைத்து, அதனைத் தினமும், வணங்கி, தானே வில்வித்தை பயின்று, பலவகையிலும் தேர்ச்சிபெற்று வந்தான். துரோணர் நேரில் இருந்து தனக்குப் பயிற்சி அளிப்பதாகக் கருதி, அந்த ஏகலவன் எல்லா முறை

விற்பயிற்சிகளிலும் வல்லவனென்று பாரதக் கதை கூறுகிறது.

இப்படி இருக்கையில், ஒருநாள் பாண்டவர்கள் ஒருவனை அர்ச்சுனன் தனது ஆசிரியரான துரோணருடன் காட்டிற்கு வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் அவனது நாய் ஒன்று ஏகலவன், அமைத்திருந்த துரோணர் சிலையை அசுத்தம் செய்ததாம். அதைக்கண்ட ஏகலவன், தனது வில்லைபூட்டி, நாணேற்றி ஒரு அம்பைத் தொடுத்தான், அந்த நாயைக் குறி வைத்து. அந்த அம்பு அந்த நாயின் உடலெல்லாம் மாறி மாறிப் புகுந்து, பல இடங்களிலும்புகுந்து வெளி வந்து துளைத்துத் துளைத்துத் திரும்பி வந்துவிட்டதாம்.

நாய் அலறிக் கத்தி அர்ச்சுனனிடம் சென்று ஓடியடைந்தது! அர்ச்சுனன் நாயின் நிலை கண்டு, கதறினன், கண்ணீர் விட்டான். அடுத்த விநாடி, அவன் ஆத்திரமடைந்தான்; ஆச்சரியப்பட்டான். ஆர்வத்தோடும், ஆவேசத்தோடும் தனது குருநாதரிடம் ஓடினன். நாயைக் காண்பித்தான். அவரும் பரிதாபப்பட்டார்.

அர்ச்சுனன் அத்துடன் நிற்கவில்லை. “குருவே, ஒரு அம்புவிட்டால், அந்த ஒரே அம்பு ஒரு உடம்பின் பல பாகங்களிலும் புகுந்து புகுந்து வெளிவந்து துளைத்துத் திரும்பும் வித்தையை, விற்பயிற்சியை; என் ஒருவனுக்குத் தவிர வேறு எவருக்கும் சொல்லித்தரவில்லை யென்று கூறினீரே, இதோ பாரும், இந்த நாயை, அதன்

உடலில் உள்ள காயங்கள் காட்டுவதென்ன?” என்று கேட்டான்.

குருநாதர் கண்டார், நாயை, குருதிவடிந்தோடும், பல காயங்களைக் கண்டார். காண்டவன் கூறுவது உண்மைதான் என்பதை கண்ணுறக் கண்டார். பின்னர், “அர்ச்சுன, இது ஏதோ, புரியாத புதிராக இருக்கிறது, நான் உன்னைத் தவிர வேறு எவருக்கும் இதனைக் கற்றுத் தரவில்லை என்பது உறுதி, உண்மைதான், இதனை ஆராய்ந்து, தெரிந்து வரலாம்” என்று புறப்பட்டுக் கடைசியாக ஏகலவன் இருக்குமிடத்தை வந்து சேர்ந்தார்.

ஏகலவன் தனது குருவாகப் பாவித்து வந்து துரோணரைக் கண்டதும், ஓடோடி வந்து வணங்கி, வாழ்த்தி, வரவேற்று உபசரித்தான்.

வணங்கி நின்ற, ஏகலவனைப் பார்த்து, இந்த நாயைக் காயப்படுத்தியது யார்? என்று கேட்டார்.

“நான்தான் நாயைக் காயப்படுத்தியவன்” என்று ஏகலவன் பதிலளித்து, நின்றான்.

“இந்த முறையில் பாணந் தொடுக்க எங்கு பழகினாய், எவர் கற்றுத் தந்தது?” என்று மேலும் கேட்டார்.

“எனது குருவாகிய தங்களிடந்தான் நான் இந்த

முறையைப் பழகிக் கொண்டேன்; இந்த முறையைக் கற்றுக் கொடுத்தவர், தாங்கள் தான்.” என்று ஏகலவன் விடையளித்தான்.

“என்ன? நானா? உனக்கா, இதனைக் கற்றுக் கொடுத்தேன்,” என்று மறுபடியுந் துரோணர் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார்.

இதற்கு ஏகலவன், தான் துரோணரிடம் சென்று, வில்வித்தை கற்றுத்தரக் கேட்டதையும், அதற்கு அவர் மறுத்ததையும், பின்னர், அவரை குருவாக மதித்து, அவரது உருவத்தை வைத்து; வணங்கி அதன் முன்னர் தானே வில்வித்தை பழகித் தேர்ச்சி பெற்றதையும், கூறித் தன்னுடைய குருநாதர் அவரேதான் என்றும், தன்னை ஏற்றுக்கொள்ளும்படியும் வேண்டி நின்றான்.

இதைக் கண்ட துரோணர் யோசித்தார். அரச பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சுனனுக்கு மட்டுமே தெரிந்த அஸ்திரவித்தை, காட்டிலே திரியும் வேடன், ஏகலவனுக்குத் தெரிந்துவிட்டதே, என்று எண்ணினார். அர்ச்சுனன் மன வேதனையைப் போக்க ஒரு வழி, உபாயம் கண்டுபிடித்துவிட்டார்.

“ஏகலவா, நீ எனது மாணவன், ஆகவே எனக்குக் குரு தட்சிணை, தரவேண்டுமே, தருகிறாயா?” என்று கேட்டார் துரோணர்.

இதைக் கேட்ட ஏகலவன் உள்ளம் பூரித்து “ஆகா,

அப்படியே தருகிறேன், சுவாமி, எது வேண்டும், கேளுங்கள், தருகிறேன், தடையேதுமின்றி” என்று கூறிக் களித்துக் கூத்தாடினன்!

ஏகலவனை மறுபடி துரோணர் பார்த்து “ஏகலவா, எது கேட்டாலும், தருகிறேன் என்கிறாயே, அப்படியே செய்வாயா? செய்ய முடியுமா? தருவாயா, எதைக் கேட்டாலும்? தட்டாது உடனே!” என்று வினவினர்.

“குருதேவா, தாங்கள் எதைக் கேட்டாலும் தட்டுத் தடங்கலின்றி, உடனே தருகிறேன்” தயங்காது பதிலளித்து “என்ன கேட்பாரோ என்று ஏங்கி நின்று கொண்டிருந்தான், ஏகலவன், துரோணரின் வாய்மொழி மேல் விழி வைத்து.

“ஏகலவா, உனது வலதுகைப் பெருவிரலை வெட்டித்தா, குரு காணிக்கையாக,” என்று கேட்டு விட்டார்.

ஏகலவன் ஏதும் யோசிக்கவில்லை, சிந்திக்கவும் இல்லை! எந்த வில்வித்தைக்காக இவ்வளவு துடித்தானோ, அந்த வில்வித்தைக்கே, ஆதாரமான, மிகமிக அவசியமான வலதுகைப் பெருவிரலைக் கேட்கிறாரே, காணிக்கையாக, குருதேவர், என்று சஞ்சலமோ, சலிப்போ அடையவில்லை.

வாளை எடுத்தான், பெருவிரலைத் துண்டித்தான், பெற்றுக்கொள்ளுங்கள், பெருவிரல், வலதுகைப்