உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 8
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 8 · 8 / 29

கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உண்மை என்ன? கேரளத்தில் இடதுசாரி கம்யூனிஸ்டு ஆண்ட நேரத்திலும் கேட்கிறேன், வலதுசாரி கம்யூனிஸ்டுகள் ஆண்ட நேரத்திலும் கேட்கிறேன், அங்கே உள்ள நிலமை என்ன? அங்கே விதிவிலக்கு நிலங்களுக்கு உண்டு. கோவில்கள், மடங்கள், மசூதிகள் இவைகளின் நிலங்களுக்கு உச்ச வரம்புச் சட்டத்தில் அங்கே விதிவிலக்கு உண்டு. தனிப்பட்டவர்களுடைய காடுகளுக்கு விதிவிலக்கு உண்டு. ஆலைகளின் நிலங்களுக்கு விதிவிலக்கு உண்டு.

மலித் தோட்டங்களுக்கு விதிவிலக்கு உண்டு. பொது டிரஸ்டுகளுக்கு அங்கே விதிவிலக்கு உண்டு. ஆனால் இங்கே மாத்திரம் நாங்கள் விதிவிலக்கு இருப்பதை எதிர்த்துத்தான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம், நடத்துகிறோம் என்று கூறுவது முறையல்ல என்பதை நான் இந்தக் கிளர்ச்சி இப்பொழுது முடிவுற்று விட்டாலும் கூட, நினைவு படுத்த விரும்புகிறேன்.

நீதிவிசாரணை செய்து பரிகாரம் காண்கிறோம்

ஒவ்வொரு கிளர்ச்சியின் போதும் நடைபெற்றிருக்கிற போலீஸ் நடவடிக்கை மீது இந்த அரசு உரிய நடவடிக்கை 3, 3½ ஆண்டு காலமாக எடுத்திருக்கிறதா, இல்லையா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கீழ் வெண்மணி சம்பவம் கொடுமையான சம்பவம். அந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டு நாட்களுக்கு உணவு கூட அருந்தாமல் உறங்காமல் அவர்கள் இருந்த காட்சியை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம். அவர்களோடு பேசிய மதிப்பிற்குரிய திரு.

ராமமூர்த்தி எம்.பி. அவர்கள் அண்ணா அவர்களைக் கண்டபோது ஆறுதல் கூறுகிற அளவு அன்று அவர்கள் சோர்ந்து கிடந்ததை யாரும் மறந்துவிடக்கூடாது.

அப்படிப்பட்ட கீழ்வெண்மணி சம்பவம் முன்னேற்றக் கட்சி சம்பவம் என்று கூட சொல்கிறார்கள். அதற்காக காங்கிரஸ் ஆட்சியிலே கண்டனத் தீர்மானம் கொண்டு வந்த நேரத்தில் திரு. சங்கரய்யா அவர்கள் அந்தக் கண்டனத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. காங்கிரஸ் அதை கொண்டு வந்திருப்பது அரசியல் லாபத்திற்கே தவிர, வேறு அல்ல, கண்டனத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று திரு.

சங்கரய்யா அவர்கள் கூறியது எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. அதை அன்றைக்கு கூட அவர்கள் நினைவுபடுத்தினார்கள்.

ஆகவே, அரசியல் லாபத்திற்கு வெண்மணி சம்பவத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது. அது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுவிட்ட ஒரு சம்பவம். அந்த சம்பவத்தை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் அமைதி நிலவு வேண்டும் என்ற அடிப்படையில் அங்கே கணபதியாபிள்ளை கமிஷன் நியமிக்கப்பட்டது. கீழ்வெண்மணியில் நடைபெற்றது முடிந்த காரியம் என்று நாங்கள் சும்மா இருந்து விடவில்லை. உடனடியாக, பிரச்சினையைக் கவனித்து, ஆராய்ந்து தஞ்சைத் தரணியில் அமைதி நிலவு என்ன வழிகளைக் காணலாம் என்பதற்காக கணபதியாபிள்ளை கமிஷன் நியமிக்கப்பட்டது.

அந்தக் கமிஷன் தந்த பரிந்துரையின் படி நியாயக் கூலி நிர்ணயிக்கப்பட்டு, இன்றைக்கு தஞ்சை மாவட்டத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகி இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

துப்பாக்கிப் பிரயோகம் எதுவாக இருந்தாலும், அதில், நீதிவிசாரணை வைக்க இந்த அரசு தயங்கியதில்லை என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு. அரவங்காடு துப்பாக்கிப் பிரயோகம் குறித்து நீதிவிசாரணை வைக்கப்பட்டு மாவட்ட நீதிபதி திரு. கணேசன் அவர்கள் அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு, அவரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.