உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 7
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 7 · 7 / 29

அது மாத்திரம் அல்ல, அந்த இயக்கத்திலே ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் யாராவது பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு, பஞ்சாயத்து யூனியன் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட இருந்தாலும் ஓட்டளிக்க வேண்டியவர்களாயிருந்தாலும், இந்த அரசு அவர்களை வர ஓட்டாமல் செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தால் அவர்கள் வெளியே விடாமல் செய்து இருக்க முடியும். ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் நாங்கள் அந்தத் தேர்தலில் அவர்கள் ஈடுபட வழி வகை செய்து இருக்கும் அத்தனை பேரையும் விடுதலை செய்தோம்.

தேர்தலில் கலந்து கொண்டார்கள். கைது செய்யப்பட்ட காரணத்திற்காக, சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட காரணமாக அந்த யூனியன் தலைவர் தேர்தலில் யாரும் தோல்வி அடையவில்லை. அவர்கள் குறித்து வைத்த இடங்களில் நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

கேரளத்தில் நடந்தது என்ன?

இந்த இயக்கத்தை இங்கே நடத்துவதற்கு எத்தனையோ விவாதங்களை எடுத்துச் சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் இந்த இயக்கம் கேரளத்தில் நடைபெற்ற போது என்ன முறைகள் கையாளப்பட்டன, காவல் துறையினர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று மிகத் தாழ்மையோடு அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன், தோழமை கட்சி என்ற முறையோடு நான் கேட்டுகிறேன்.

கேரளத்தில் புதிய நிலச்சீர்திருத்தச் சட்டம் ஜனவரி முதல் தேதியன்று அமலுக்கு வந்துள்ளது. அங்குள்ள இடது கம்யூனிஸ்டுகள் தாங்களாகவே நிலங்களை கைப்பற்றிக் கொண்டு குடிசைகளைப் போட்டார்கள். அவர்களைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி கைது செய்தது. இது இரண்டாம் தேதி நடைபெற்றது. பிறகு ஜனவரி நான்காம் தேதி ஆலப்புழை மாவட்டத்தில் புறம்போக்கு நிலத்தில் போடப்பட்ட 700 குடிசைகளை கேரள போலீஸ் பிரித்தெறிந்தது. இதுபோல் இங்கு நடைபெற்றால் எத்தனை பத்திரிகைகளில் எத்தனை விதமான படங்கள் வெளிவந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஜனவரி மூன்றாம் தேதி யன்று எர்ணாகுளம் திருவாணியூரில் மார்க்சிஸ்டு ஆகிர

மிப்பாளர்கள் நடத்திய கிளர்ச்சியில் போலீசார் தடியடி நடைபெற்றது. 7 பேர்களுக்கு பலத்த காயம்.

பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று கேரளச் சாலைப் போக்குவரத்து கார்ப்பரேஷன் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். 1300 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். அச்சுத மேனன் ஆட்சியில். அச்சுத மேனன் அவர்கள் என்ன சொன்னார்கள்? துரதிருஷ்டவசமான நிகழ்ச்சிகளின் காரணமாக போலீசார் சில இடங்களில் தடியடிப் பிரயோகத்தையும், துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொள்ள நேர்ந்தது. ஏதேனும் ஒரு அரசியல் கட்சி வன்முறையில் ஈடுபடும்படி வேண்டுகோள் விட்டால் அதற்குத் தலைமை தாங்கவும் செய்தால் அதை அரசாங்கம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று சொன்னார் கேரளாவின் முதல் அமைச்சர்.

வலதுசாரி கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் அங்கே அப்படிச் சொல்கிறார்.

ஆனால் இங்கே இருக்கிற வலதுசாரி கம்யூனிஸ்டு நண்பர்கள் நாங்கள் வன்முறையில் ஈடுபட்டால் எங்களை அடக்கலாமா, ஒடுக்கலாமா என்று கேட்டிருக்கிறார்கள். அது மாத்திரமல்ல. குடிகிடப்புக்காரர்கள் ஆளுக்கு 10 செண்டு நிலத்தை வேலி போட்டுக் கொண்டார்கள், ஆளுக்கு 10 செண்டு நிலத்தை எடுத்துக் கொண்டார்கள் இது கம்யூனிஸ்டுகள். அந்த ஆட்சி எப்படி அணுகியிருக்கிறது? 50,000 வழக்குகள் பதிவு. இங்கே 10,000 பேர்கள் என்று சொன்னார்கள்.

திரு. நல்லசிவம் அவர்கள் அதில் 3000 பேர்கள் அவர்களே அல்ல, வேறு சாலையில் இருந்தவர்களை பிடித்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். சரியாக கணக்குத் தெரியாது. 10,000 பேர்கள் என்று அவர்கள் பெருமையோடு சொன்னார்கள். 50,000 பேர்களின் மீது வலதுசாரி கம்யூனிஸ்டு ஆட்சி வழக்குப் போட்டது. 1200 பேர்கள் போலீஸ் அடக்கு முறைக்கு ஆளானார்கள். போலீஸ் முகாமில் 200 பேர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள். இவைகளை எல்லாம் இங்கிலிருந்து வெளியிடப்படுகிற தீக்கதிர் என்ற பத்திரிகை 23-8-70 அன்று எழுதியிருக்கிறது என்பதையும் நான் கம்யூனிஸ்டு கட்சி நண்பர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

"ஏதோ தமிழ்நாட்டில் விதிவிலக்குகள் எல்லாம் ரத்து செய்யவில்லை. தமிழ்நாட்டில் நிலப்பிரபுக்களின் உடைய பக்கத்தில் தி.மு.க. அரசு ஒடிக் கொண்டிருக்கிறது. விதிவிலக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று சாதாரண பாமர மக்களிடையே நீங்கள் பேசிக்