உதயக் கதிர்
தலைப்பு 25 · 25 / 29
நேற்றைய முன் தினம் ஹவுஸ் சர்ஜன்களுடைய பிரச்சினைகளையும், அவர்களோடு ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாடி அவர்களுடைய கோரிக்கைகளும் கூடுமான வரையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கொடுக்க வந்த போது அதற்காக அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்ட போது அவர்களுடைய கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
புகுமுக வகுப்பு வரையில் இலவசக் கல்வி என்று ஆக்கியிருக்கிறோம். பின்தங்கிய மாணவர்களுக்கு 50 சதவிகிதம் மார்க்கு வாங்கியிருந்தால் தான் உதவிப்பணம் மற்றும் ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்பதை மாற்றி 45 சதவிகிதம் மார்க்கு வாங்கினாலே அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்று ஆக்கியிருக்கிறோம். அதைப் போலவே மிகவும் பின்தங்கிய வகுப்பில் உள்ளவர்களுக்கு 45 சதவிகிதம் என்று இருந்ததை 40 சதவிகிதம் என்று மாற்றியிருக்கிறோம்.
இதனால் அரசுக்கு 2 கோடி ரூபாய் அதிகச் செலவாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து ஆசிரியர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது அகவிலைப்படி மற்றவர்களுக்கு அளிக்கப்படும் போது எல்லாம் ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. நகர ஈட்டுப் படித் திட்டம் மானியம் பெற்று வரும் பள்ளியாசிரியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அவ்வப்போது அளிக்கப்பட்ட வீட்டு வாடகைப்படி உள்ளாட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. மானியம் பெறும் பள்ளியாசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்புப் பெற வசதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு
நிலையான பதவியில் உள்ள ஆசிரியர் ஒருவர் ஈட்டிய விடுப்பு பெறும் வகையில் விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் இல்லாத சலுகை இது. ஒவ்வொரு ஆண்டும், ஹையர் கிரேடு பதவிகளை செகண்டரி கிரேடு பதவிகளாக மாற்றி வேலை வாய்ப்பை அதிகரிக்கின்றது. 67-68-ல் 5,000 ஆசிரியர்களுக்கும் 68-69-ல் 3000 ஆசிரியர்களுக்கும், 69-70-ல் 3000 ஆசிரியர்களுக்கும் இந்த பயன் கிட்டியுள்ளது.
ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் கொடுக்கும் விஷயத்தில் 55-ம் ஆண்டிலிருந்து ஒரு தேதி நிர்ண
யித்து, முன்பிருந்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கும் மாத்திரமே இந்த ஊதியம் உண்டு என்றிருந்தது. இதனால் அந்தத் தேதிக்கு முன்னால் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். அந்தத் துயரைத் துடைக்கும் வகையில் புதிய அரசு 1968-ம் ஆண்டு, 1955-க்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியத் திட்டம் என்று வரையறுத்தது.
குடும்பப் பென்ஷன் திட்டம் 1-4-69-க்கு பிறகு தனியார் துறையைப் பற்றி ஆசிரியர்களுக்கும் விரிவாக்கப்பட்டது. பி.டி. ஆசிரியர்களுக்கு, செகண்டரி கிரேடு ஆசிரியர்கள் இவர்கள் மேல் படிப்புப் பட்டங்கள் பி.ஏ., பி.டி., எம்.ஏ.எம்.லிட். போன்ற பட்டங்கள் பெற்றால் அவர்களுக்கு இரண்டு அட்வான்ஸ் இன்கிரிமெண்ட் கொடுக்கும் திட்டம் இந்த புதிய அரசில் அமுலுக்கு வந்துள்ளது.
