உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 26
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 26 · 26 / 29

என். ஜி. ஓ.-வினருக்கு...!

அதைப் போலவேதான் என்.ஜி.ஓ.க்களுடைய ஈட்டுப்படியை அரசு வழங்கியுள்ளது. சம்பள ஆய்வுக் குழு ஒன்றை நியமித்தது. அரசுப் பணியாளர்களின் இரகசியக் குறிப்பேடு முறையை மாற்றி பகிரங்கக் குறிப்பேடு முறையை அமுல் படுத்த இந்த அரசு முடிவெடுத்துள்ளது. அரசுப் பணியாளரது மகன், மகள் ஆகியோரது திருமணங்களுக்கென அரசுப் பணியாளர்களுக்கு முன்பணம் வழங்கும் திட்டம் ஒன்றை அமுலாக்கியுள்ளது.

அரசுப் பணியாளர்கள் மேற்கொண்டும் சட்டக் கல்லூரியில் மாலை நேர வகுப்புகளில் படிப்பதற்காக வருங்கால வைப்புநிதியிலிருந்து தொகை பெறுவதற்கு அரசு அனுமதித்துள்ளது.

மாதம் ரூ.250-க்கு மேற்பட்டு சம்பளம் பெறும் அரசுப் பணியாளர்களுக்குப் பட்டினப்பாக்கம் பீட்டர்ஸ் சாலைக் குடியிருப்பில் அரசு வாடகை வீட்டு மனைகளைக் கட்டியுள்ளது.

கீழ்நிலை எழுத்தர்கள் விரும்பியவாறு அவர்களது பதவிப் பெயரை இளநிலை உதவியாளர்கள் என மாற்ற அரசு ஆணையிட்டுள்ளது. போலீசார் நலனுக்கென போலீஸ் ஆணைக்குழு ஒன்றை நியமித்திருக்கிறது.

பின்தங்கியோர் நலன்கள் அறிய ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது ஊதியக் குழு

அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் விரைவினில் எதிர்பார்க்கப்படுகின்றது.

1972-ம் ஆண்டுக்குள் மின்வெளி இல்லா தமிழகமே இருக்கக்கூடாதுன்னு தீவிரமாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.