உதயக் கதிர்
தலைப்பு 23 · 23 / 29
வறட்சிக்குப் பிறகும்...
அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் அரசு, விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை, மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, என்.ஜி.ஓ.க்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். அவர்களுக்குப் பின்னாலே பேசிய அவர்களைச் சார்ந்தவர்களும் கேட்டார்கள். அதிக விவரங்கள் சொல்வதற்கு நேரம் இல்லாத காரணத்தால் சில விவரங்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 67-68-ல் 57.6 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி இடையில் ஏற்பட்ட பயங்கர வறட்சிக்குப் பிறகும் 69-70-ல் லட்சம் டன் உணவு அதிகமாக உற்பத்தியாகி இருக்கிறது.
அதன் காரணமாக உணவுக் கட்டுப்பாட்டை ரத்து செய்து இருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொன்னார்? இது ஒரு அரசியல் ஸ்டண்ட், இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்து விடுவார்கள் என்று சொன்னார்கள். நானும் சொன்னேன். அவசியம் ஏற்பட்டால் மீண்டும் வர வேண்டும் என்று சொன்னால் கொள்கைப் பிரச்சினையைப் பார்க்காமல் மீண்டும் கொண்டு வந்து விடுவோம் என்று சொன்னேன். கடவுள் கிருபையால் அத்தகைய நிலை ஏற்படவில்லை.
**கே. விநாயகம்:** உங்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதா?
**முதல்வர்:** பயப்பட வேண்டாம். கடவுள் உங்கள் பக்கத்தை விட்டு வெளியே போய் ரொம்ப நாள் ஆகிறது. கடவுளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோமோ என்பது பிரச்சினை இல்லை. எம்மை கடவுள் ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் பிரச்சினை.
**கருத்திருமன்:** அது கடவுள் பிரச்சினை.
**முதல்வர்:** கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிறாரா அல்லது நாம் கடவுளை ஏற்றுக் கொள்கிறோமா என்பதல்ல பிரச்சினை. கடவுள் ஏற்றுக் கொள்கிற வகையில் நாங்கள் காரியங்களைச் செய்கிறோம். உங்களை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை 67-லேயே பார்த்தோம்.
நிலவள வங்கிகள் மூலம், முன்னைவிட அதிகப்
பெருமானம் போட்டு அதிகக் கடன் உதவி கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே 10 ஆயிரம் பெறுமானம் உள்ளவர்களுக்குத்தான் கடன் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதை மாற்றி இப்போது 5 ஆயிரம் ரூபாய் பெறுமானம் உள்ளவர்கட்கும் கடன் கொடுக்கலாம் என்று உத்தரவு போட்டிருக்கிறோம். உணவுப் பொருள்கள் மூலமாக எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று கணக்குப் பார்த்து இந்த 75 சதவிகிதம் கடன் கொடுக்கப்படுகிறது.
