உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 21
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 21 · 21 / 29

ஆகவே தான் குறைந்த டெண்டர் எதுவோ அது தான் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவரும் முன்பே பல வேலைகளை எடுத்து முடித்துக் கொடுத்திருக்கிற திறமை வாய்ந்தவர்கள்தான். எங்களுக்கும் அவர்

களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை கூறிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்படி நான் பொதுவாகக் கூறப்பட்ட பெரிய குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் விளக்கம் தந்திருக்கிறேன் மற்றவற்றுக்கு அவ்வப்போது அமைச்சர்கள் எடுத்துக் கூறுவார்கள்.

தொழிலாளர்களுக்குரிய சாதனைகளைப் பற்றி சங்கரய்யா பேசினார். அவர்களது பேச்சில் பெரும் பகுதி போலீஸ் துறையைப் பற்றிய கண்டனம் இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் கொள்கை சரியாக இல்லை என்று எடுத்துச் சொன்னார்கள்.

தொழிலாளர்களைப் பொறுத்த வரையிலும் இந்த அரசு வேலை வாய்ப்பை அளிப்பதில் 69-ம் ஆண்டில் மின்வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் 430 பேருக்கு வேலைகள் அளித்திருக்கிறது.

கழக அரசின் தொழிலாளர் கொள்கை

1967-ம் ஆண்டில் 44,875 பேர்களுக்கும், 68-இல் 41,581 பேர்களுக்கும், 69-இல் 42,770 பேர்களுக்கும் தொழில் தேடித்தரும் ஸ்தாபனத்தின் மூலம் வேலைகள் வாங்கித் தரப்பட்டு இருக்கின்றன. இவர்களில் 5,024 பேர்கள் டிப்ளமா பெற்றவர்கள். 2315 பேர் எஞ்ஜினியரிங் பட்டதாரிகள். 8739 பேர் சிறு தொழில் கற்றவர்கள்.

தொழில்துறையில் மூடப்பட்டிருந்த 35 ஆலைகளில் 17 ஆலைகளை இந்த அரசு 1969-ஆம் ஆண்டில் மீண்டும் திறந்துள்ளது. இதில் நான்கு ஆலைகள் தமிழ்நாடு பஞ்சாலை கழகமே மேற்கொண்டுள்ளது. இதனால் பத்தாயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு வசதி கிட்டியுள்ளது என்பதில் இருந்தே திராவிட முன்னேற்றக் கழக அரசு தொழிலாளர் அரசுதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். வளர்க தொழில், வாழ்க தொழிலாளர் என்பதும், தொழிலாளர், அரசு, தொழில் அதிபர்கள் பேச்சு வார்த்தை மூலம் குறைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் தான் இந்த அரசின் கொள்கையாகும்.