உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 20
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 20 · 20 / 29

நீலகண்டன் பிரதர்ஸ் ரூ. 23,03,94,156-க்கு டெண்டர் கொடுத்தார்கள். அந்நியச் செலாவணி ஏதும் கோரவில்லை.

என்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் கொடுத்த டெண்டர் ரூ. 12,64,85,844. இவர்கள் ஸ்டீல் எஃகு தகடு விலை தவிர குழாய்கள் மட்டும் என்பதற்கு ரூ. 40,00,000 அந்நியச் செலாவணி கோரினார்கள்.

ஸ்டூவர்ட்ஸ் அண்டு லாயிட்ஸ் கொடுத்த டெண்டர் ரூ. 52,44,000 ஆகும். வளையல்கள் மாத்திரம் தான் இவர்கள் கொடுத்தது. அந்நியச் செலாவணி ஏதும் இல்லை.

இவற்றை எல்லாம் கேட்ட பிறகு நீங்களே நாங்கள் எந்த டெண்டரைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அடுத்த குற்றச்சாட்டு குறைந்த டெண்டர் கொடுத்தவர்களுக்கும் அதைவிட அதிகமான டெண்டர் கொடுத்தவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத் தொகை சில லட்சங்கள் தான் என்பது. முன்பே நான் சொன்னேன். அது சரியல்ல. ஒன்றேகால் கோடி வித்தியாசம் இருந்திருக்கிறது. இது கணிசமான தொகை. மேலும் வாக்கம் குழாய்கள் உறுதியானவை என்பதற்குப் போதுமான நற்சான்றிதழ்கள் இருக்கின்றன என்றும் சொன்னேன்.

அடுத்து முற்றிலும் புதியதான ஒருவருக்கு இந்த காண்டிராக்டை விடுவானேன் என்று கேட்கப்படுகிறது. சத்தியநாராயண பிரதர்ஸ் எங்களுக்கு ஒன்றும் வேண்டியவர் அல்ல. மேலும் புதியவரும் அல்ல. பழைய காங்கிரஸ் ஆட்சியிலேயே பலதரப்பட்ட க்வார்டர்ஸ் ஆவடியில் கட்டுவதற்காக 6 கோடி செலவில் அவருக்கு காண்டிராக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிறகு ஸ்மால் ஆர்ம்ஸ் ப்ராஜக்ட் கட்டுவதற்கு 50 லட்சத்தில் ஒரு வேலை, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்.

மருத்துவமனை கட்ட 50 லட்சம், சென்னை, திருச்சியில் தானியக் கிடங்கு கட்ட ஒன்றேகால் கோடி இப்படி 45 வேலைகள் சுமார் 21 கோடி ரூபாய்க்கு பழைய ஆட்சியிலேயே கொடுக்கப்பட்டு இவர்கள் அந்த வேலைகள் எல்லாம் முடித்திருக்கிறார்கள்.

வேண்டியவரல்ல!

சத்தியநாராயண பிரதர்ஸ் கொடுத்த டெண்டர் பதினாறு கோடியாக இருக்க தாராப்பூர் அண்டு கம்பெனி கொடுத்த டெண்டர் பதினெட்டரை கோடிக்கு மேல் இருந்தாலும் அவர்களுக்குக் கொடுத்திருந்தால் அப்போது என்ன சொல்வார்கள்? எதற்காக தாராப்பூர் கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டது. இவரை விடக் குறைந்த டெண்டர் கொடுத்தவர் இல்லையா! இந்த தாராப்பூர் கம்பெனி முன்பே சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை என்பதாக ஹைக்கோர்ட்டில் ஜட்ஜ்மெண்ட் வழங்கப்பட்டிருப்பது தெரியாதா என்றெல்லாம் கேட்டார்கள்.

குற்றம் சாட்டுவீர்கள்.