உதயக் கதிர்
தலைப்பு 19 · 19 / 29
மற்ற டெண்டர் கொடுத்த நிறுவனங்கள் எவ்வளவு அந்நியச் செலாவணி கேட்டார்கள், அவர்கள் டெண்டர் தொகை எவ்வளவு என்று கேட்கப்பட்டது, அந்த விவரங்களையும் நான் இப்போது கொடுத்துவிட விரும்புகிறேன்.
குறிப்பிட்ட டெண்டரை ஏற்காதது ஏன்?
இந்திய ஹ்யூம் பைப் நிறுவனம் கொடுத்த டெண்டர் தொகை ரூ. 17,79,17,785. அவர்கள் கேட்ட அந்நியச் செலாவணி 80 லட்சம்.
கேரளா பிரேமா பைப் நிறுவனம் கொடுத்த டெண்டர் ரூ. 18,57,47,674. அந்நியச் செலாவணி ஏதுமில்லை.
சத்தியநாராயண பிரதர்ஸ் ரூ. 16,55,87,300-க்கு டெண்டர் கொடுத்தார்கள். இவர்கள் கோரிய அந்நியச் செலாவணி ரூ. 1,20,00,000.
தாராப்பூர் அண்டு கம்பெனி கொடுத்த டெண்டர் ரூ. 18,60,07,009. இவர்கள் கோரிய அந்நியச் செலாவணி 1,50,00,000.
யுனிவர்சல் பைப்பிங் கன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்த டெண்டர் ரூ. 21,02,24,327. இவர்கள் கோரிய அந்நியச் செலாவணி 80,95,374.
