உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 17
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 17 · 17 / 29

குழாய்களை அவற்றின் வார்ப்படங்களிலிருந்து எடுத்து விடலாம் என்றும் அப்படி தயார் செய்யப்பட்ட குழாய்கள் 11 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதம் கூடுதலாக உறுதியானவை என்றும் செய்முறையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் சுழற்சி முறையில் தயார் செய்யப்பட்ட குழாய்கள்தான் உறுதியானவை, நீடித்து உழைக்கக் கூடியவை. உலகெங்கும் இம்மாதிரியான குழாய்கள்தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது உண்மைக்குப் புறம்பானது.

வேக்குவம் முறையைக் கையாண்டு தயாரித்த குழாய்களும் நீர் கொண்டு வரும் திட்டங்களில் ஏராளமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஈரானிலும், சார்டினியாவிலும், கிரேக்க நாட்டிலும் இப்பேர்ப்பட்ட குழாய்கள் அநேக வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இன்றைக்கும் நமக்கு வேண்டிய குழாய்களை விட பெரிய விட்டமுள்ள குழாய்கள் டெஹ்ரானிலும், சார்டினியாவிலும் இந்த முறையை யொட்டி தயார் செய்து உபயோகிக்கிறார்கள். பெரிய விட்டமுள்ள குழாய்கள் தயாரிக்க மேலே சொல்லப்பட்ட செங்குத்தான முறையையே கையாள வேண்டும் என்பது நிபுணர்களது கருத்து.

இரண்டு விதங்களையும் பயன்படுத்தலாம், அவைகளில் வித்தியாசம் ஒன்றுமில்லை. இரண்டு விதத்திலும் தயார் செய்த குழாய்கள் திருப்திகரமானவையே என்கிற உண்மை நமது வெளிநாட்டு சுற்றுப் பிரயாணத்திலிருந்து தெரிகிறது.

அடுத்த குற்றச்சாட்டு என்னவென்றால், மற்ற நிறுவனங்களுக்கு எவ்வளவு தொகைக்கு டெண்டர் கொடுத்தார்கள் அவை ஏற்கப்படாத காரணம் என்ன? ஏற்றுக் கொள்ளப்பட்ட டெண்டர்களுக்கும், நிராகரிக்கப்பட்ட டெண்டர்களுக்கும் தொகையில் இருந்த வித்தியாசம் என்ன என்று கேட்டார்கள். இதையெல்லாம் வெளியிட வேண்டுமென்ற அவசியம் இல்லை.

குழாய்கள் பற்றிய விவரம்

அதற்குப் பதில் "நாம் ஏற்றுக் கொண்டுள்ள டெண்டர் அதற்கு அடுத்துள்ள டெண்டரைவிட ரூபாய் ஒரு கோடியே இருபத்து நான்கு லட்சம் குறைந்தது. இது மிகமிக கணிசமான தொகை. குறைந்த தொகையைக் கேட்டுள்ள கான்ட்ராக்டர்கள் தயார்செய்யப் போகும் குழாய்கள் தரத்திலும் வலுவிலும் உயர்ந்த

தவை. நீடித்து உழைக்கக் கூடியவை. இதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். இதை நிரூபிக்க ரோமாபுரியிலிருந்தும், டெஹ்ரானிலிருந்தும் நற்சாட்சிப் பத்திரங்கள் கிடைக்கப் பெற்றன. அயல்நாடுகளுக்குச் சென்று திரும்பிய நமது குழுவும் இதைப் பற்றிப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.

அதற்கடுத்த குற்றச்சாட்டு 'குறைவான டெண்டர் கொடுத்தவர்களிடம் மட்டும்தான் அரசாங்கம் பேச்சு வார்த்தையே நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. அதிகத் தொகைக்கு டெண்டர் கொடுத்தவர்கள் உபயோகிப்பதாகச் சொன்ன சுழற்சிக் குழாய்களின் தரம் பற்றியும் நீடித்த உழைப்பு பற்றியும் அரசு அக்கறை காட்டவில்லை' என்பதாகும்.