உதயக் கதிர்
தலைப்பு 16 · 16 / 29
அதைப் போல கூவத்தில் எங்கேயோ மழையில் இரண்டு காங்கிரீட் ஸ்லாப் சரிந்து விட்டதற்கு கூவம் நாற்றம் அடிக்கிறது என்கிறார்கள். நாம் சில திட்டங்கள் போடுகிறோம். சில நேரங்களில் தவறுகள் ஏற்படுகின்றன. அதற்காக திட்டமே ஊழல், ஊழல் என்று பேசுவது முறையல்ல. வீடூர் நீர்த் தேக்கத் திட்டமே ஐந்தாறு ஆண்டுகளுக்குக்கூட நீடிக்காமல் போய் இருக்கிறது.
**க. ராமமூர்த்தி:** (காங்.) தலைவர் அவர்களே, வீடூர் நீர்த் தேக்கம் உடைந்தது, திட்டத்தில் ஏற்பட்ட குறையின் காரணமாக அல்ல. அதை சூபர்வைஸ் செய்த என்ஜினியர் செய்த தவறின் காரணமாகத்தான் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். (ஆளும் கட்சித் தரப்பில் சிரிப்பு.)
வீராணம்பற்றி விளக்கம்
**முதல்வர்:** அடுத்தபடியாக, வீராணம் திட்டத்தைப் பற்றி திரு. கே. விநாயகம் காரசாரமாகப் பேசினார். அதற்கு அமைச்சர் சாதிக் பாட்சா பதில் சொன்னார். வீராணம் திட்டத்தைப் பொறுத்த வரையில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் தருகின்ற பதில் இந்த மாமன்றத்திற்குப் பயன் உள்ளவையாக இருக்கும் என்று கருதுகிறேன்.
மூன்று நிறுவனங்கள், சுழற்சி முறையில் செய்யப்பட்ட பிரிஸ்ட்ரெஸ்ட் கான்கிரீட் குழாய்களையே தாங்கள் பயன்படுத்துவதாக டெண்டரில் குறிப்பிட்டிருந்தன. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் குழாய்கள்தான் உறுதியானவை என்பதும், நீடித்து உழைக்கக் கூடியவை என்பதும், நீர் அழுத்தத்தால் விரைவில் கெட்டுப் போகாதவை என்பதும் உலகறிந்த உண்மைகள். உலகெங்கும் இம்மாதிரியான நீர் கொண்டு வரும் திட்டத்திற்கு சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் குழாய்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அடுத்தபடியாக, கிடைக்கப்பட்ட டெண்டர்களில் மூன்று நிறுவனங்கள் கிடை நாற்றல் முறையையும், மற்ற இரண்டு நிறுவனங்கள் செங்குத்தாக வார்க்கும் முறையையும் பின்பற்றி குழாய்கள் தயாரிக்கின்றன. கூன்ய முறை கான்கிரீட் தண்ணீரை உறிஞ்சுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். இரண்டு பக்கமும் தகடு இருக்கும், உள்ளே கூன்யமாக இருக்கும். அப்படி பல பேர் எழுதியிருக்கிறார்கள். தண்ணீரை சிமெண்ட் பைப்பிலிருந்து உறிஞ்சி விடுவதற்கு, காய வைப்பதற்கு பதிலாக இது இருக்கும்.
இந்த வெற்றிட முறை தண்ணீரை உறிஞ்சுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது இது கூன்ய முறையாக இருப்பதால் தான் இதற்கு 'வேக்குவம்' என்று பெயரிட்டார்களேவொழிய, வேறு விதத்தில் இந்தக் குழாய்கள் தயாரிப்பதில் எந்த வித்தியாசமும் கிடையாது.
அப்படி தண்ணீரை உறிஞ்சுவதால் சீக்கிரமாக
