உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 15
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 15 · 15 / 29

எடுத்துக் கொண்ட வேலைகள் தீட்டிய திட்டப்

பிரகாரம் செவ்வனே நல்ல கண்காணிப்புடன் நடந்து கொண்டிருக்கின்றன.

வரும் ஜனவரி வரையில் கூவம் வேலையைக் கைவிட அரசு உத்தரவு அனுப்பியுள்ளது என்று சொல்வது சரியல்ல.

திட்டத்தின் மதிப்பீடு 1 கோடியே 10 லட்சம் ரூபாய். இது 2 கோடி ரூபாய் வரையில் நீளும் என்று சொல்வதும் உண்மையல்ல.

இப்பொழுதுகூட 500, 600 வேலையாட்கள் மும்முரமாக கூவம் ஆற்றில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். மழை பெய்ததன் காரணமாக இரண்டொரு இடங்களில் கரைகளில் போடப்பட்டிருந்த ஸ்லாப்புகள் விழுந்து விட்டன. இரண்டொரு இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டன. இதற்கு 2 கோடி ரூபாய், 3 கோடி ரூபாய் அளவில் செலவாகியிருக்கிறது என்று தவறான பிரசாரம் செய்கிறார்கள். நாம் போட்ட திட்டம் 1 கோடியே 10 லட்சம் ரூபாய். நாம் இதுவரைக்கும் செலவு செய்தது 81 லட்சம்தான்.

கூவம் ஊழல், கூவம் ஊழல் என்று சொல்வது அவர்களுடைய அரசியல் பேச்சுக்கு தொடர்பாக இருக்கும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

வீடூர் அணைத்தகதி

கூவம் திட்டத்தினைப் பற்றி இப்படிப் பேசுகிறீர்களே, உங்களுடைய ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வீடூர் நீர்த் தேக்கத் திட்டம் என்ன வாயிற்று 1959-ம் ஆண்டு 89 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் தேக்கம் கட்டப்பட்டது. 1966-ம் ஆண்டு பெய்த மழையில் அது உடைந்து, மேற்கொண்டு 22 லட்சம் செலவிட்டு புதுப்பிக்கப்பட்டது. அது உடைந்ததால் 20 ஏக்கர் 30 ஏக்கர் வரையிலும் மணல் மேடிட்டுப் போன காரணத்தினால் அந்த நிலங்களின் சொந்தக்காரர்களுக்கெல்லாம், இந்தப் புதிய அரசு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நஷ்ட ஈடாகக் கொடுத்திருக்கிறது.