உதயக் கதிர்
தலைப்பு 14 · 14 / 29
பிரபாகர் ஐ.ஏ.எஸ். ராமநாதபுரம் - மதுரையில் 4 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதைத் தவிர, 1960 முதல், 1967 வரையில், காங்கிரஸ் ஆட்சியில், போலீஸ் துறையில் பல அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பதவியில் நீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அப்படியிருந்தவர்கள் 10 அதிகாரிகள்; அவ்வாறு ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் நீடிக்கப்பட்டிருப்பவர்கள் ஏழு பேர்கள் தான்.
ஆனால் அந்தக் கால அளவில் ஏறக்குறைய 19 அதிகாரிகள் காங்கிரஸ் ஆட்சியில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அதிகாரிகளைப் பற்றிக் கூறிய குற்றச்சாட்டு ஒன்றும் பிரமாதமானதல்ல: நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர இது ஏற்றது அல்ல என்பது அவருக்கே தெரியும். பல குற்றச்சாட்டுகளில் இது ஒரு சிறிய குற்றச்சாட்டு என்றுதான் எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் கருதுவார் என்று கருதுகிறேன்.
கூவம் திட்டம் கைவிடப்பட்டதா?
அடுத்தபடியாக கூவம் நதித் திட்டத்தைப் பற்றிப் பேசினார்கள். டாக்டர் ஹாண்டே கூட, தற்போது வழக்கமாகப் படிக்கும் பத்திரிகையைப் பார்த்து விட்டுப் பேசினார். கூவம் சீரமைப்புத் திட்டத்தைப் பற்றி ஒருவர் சொல்லியிருக்கிறார். "இது ஒரு நல்ல திட்டம். 70 ஆண்டுகளுக்கு முன்னால் இன்னும் 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர்கள் அந்தத் திட்டத்தை உருவாக்க முனைந்து அது இயலாத திட்டம் என்றே எண்ணவோ அதை விட்டு விட்டார்கள்.
1958-ல் நாடு சுதந்திரம் அடைந்து 11 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்தத் திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று 114
லட்சம் ரூபாய் அளவில் ஒரு திட்டம் போட்டு 1962-ல் செயல்படுத்தக்கூடிய திட்டமென்று ஆகி, பிறகு 1968-69ல் தொடங்கப்பட்டுள்ளது என்றும் இதனுடைய வரலாற்றைப் பற்றி தலைமைப் பொறியாளர் கூறினார். இது ஒரு நல்ல திட்டம், நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆர். கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் மேலவையில் கூறியிருக்கிறார்கள்கள்கள்கள். இதைத்தான் 'மணக்கிறது, மணக்கிறது கூவம் மணக்கிறது' என்று நாம் சொன்னோம்.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சற்று அழுத்தமாக, 'கூவம் மணக்கிறது, மணக்கிறது' என்று சொன்னார்கள். அது பலருடைய மூக்கைப் பொறுத்த விஷயம். (சிரிப்பு)
கூவத்திலுள்ள பழைய நாற்றம் அப்படியே இருக்க வேண்டுமென்று யாராவது சொல்வார்களா? கூவம் நதியை சீர்திருத்தம் செய்ய வேண்டுமா, வேண்டாமா? கூவம் நதியிலே ஆண்டாண்டுக் காலமாக குடியிருந்த கொசுக்கள்தாம் இந்தச் சீர்திருத்தத்தை வேண்டாமென்று சொல்லும்.
அடுத்தபடியாக 'கூவம் நதித் திட்டத்திலே ஊழல், வீராணம் திட்டத்திலே ஊழல், எங்கும் ஊழல், எதிலும் ஊழல், ஃபைல்களைக் கொண்டு வா' என்றெல்லாம் பேசினார்கள். கூவம் நதித் திட்டத்தைப் பற்றி வந்திருக்கின்ற குற்றச்சாட்டுக்களை பத்திரிகையில் மிகப் பயங்கரமாக எழுதுகிறார்கள். டாக்டர் ஹாண்டே அவர்கள் கூட அதைப் பார்த்து விட்டுத்தான் இப்படிப் பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன்.
'மிகப் பயங்கரமான ஊழல் நாற்றமெடுக்கும்கூவம் சீரமைப்புத் திட்டத்தைக் கைவிட்டு விட திராவிட முன்னேற்றக் கழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன் உதாரணமாக வரும் ஜனவரி வரையில் கூவம் வேலையைக் கைவிட்டு விட அரசு உத்தரவு அனுப்பியுள்ளது. 1 கோடியே 36 லட்சம் ரூபாய்க்குத் திட்டம் என்று கூறி, பின் 2 கோடி ரூபாய் வரையில் நீளும் என்ற நிலையிலுள்ள சென்னை-கூவம் சீரமைப்புத் திட்டம் என்பது ஒரு மாபெரும் ஊழல் களஞ்சியமாகும்' என்று ஒரு பத்திரிகை எழுதியதை வைத்து டாக்டர் ஹாண்டே பேசுவது முறையல்ல.
கூவம் சீரமைப்புத் திட்டத்தைக் கைவிட்டு விட அரசு முடிவு எடுத்துள்ளதாகச் சொல்லுவது உண்மையல்ல.
