உதயக் கதிர்
தலைப்பு 12 · 12 / 29
**முதல்வர்:** நான் சொன்னது 'அலாட்மெண்ட்' தான். இனிமேல் வேண்டுமானால் வாங்காமல் இருங்கள். அது வேறு.
**வி. கே. கோதண்டராமன்:** நீங்கள் சொன்னது வாங்கியிருப்பது, வாங்கியிருப்பது என்று.
**முதல்வர்:** அலாட்மெண்ட் எப்படி போடப்பட்டது என்று சொன்னேன். நாங்கள் வலுவிலேயா போட்டோம். நீங்கள் கேட்டுத்தானே அலாட்மெண்ட் போடப்படும். கேட்காமலே போடுவார்களா கேட்கப்படுகிறது. அதற்கு அலாட்மெண்ட் போடப்படுகிறது.
இன்னொரு குற்றச்சாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார்கள். அனுமதி பெறாமலே விற்று விடுகிறார்கள் என்று. 15 எம்.எல்.ஏக்கள் மறுபடியும் விற்பதற்கு அனுமதி கேட்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி விநாயகம் கூட விற்பதற்கு அனுமதி...
**கே. விநாயகம்:** நான் விற்க மாட்டேன் என்று இன்னும் வைத்திருக்கிறேன். வெளியே போய்ப் பாருங்கள் இருக்கிறது. (சிரிப்பு)
**முதல்வர்:** அனுமதி கேட்டிருக்கிறார், ஆகவே அனுமதியில்லாமல் விற்று விடுவதாக குற்றம் சாட்டப்பட்டதால், விநாயகம் கூட அனுமதி கேட்டிருக்கிறார் என்று உங்களைக் காப்பாற்றும் அளவில் சொல்கிறேனே அல்லாமல் வேறில்லை.
**கே. விநாயகம்:** அன்பளிப்பு பற்றித்தான் இப்பொழுது கேள்வி.
**முதல்வர்:** பொது மக்கள் கொடுத்த பணத்தில் கார்கள் வாங்குகிறார்கள். திருவெறும்பூர் சுவாமிநாதனுக்குக் கூட ஒரு கார் பொது மக்கள் கொடுத்து, காமராஜ் அவர்களால் அளிக்கப்பட்டிருக்கிறது. பரிசு அளிப்பாக. அவர்களாக வாங்க முடியாதவர்கள், "ஏதோ பெரும் பணக்காரர்கள், எம்.எல்.ஏவாக இருக்கிறார்கள். சொந்தப் பணத்தில் வாங்குகிறார்கள்."
நாங்களெல்லாம் எங்கள் தரப்பில் இருக்கிறவர்கள் ஏழை, எளியவர்கள்; ஆகவே, பொது மக்கள் பணம் வசூலித்துக் கொடுத்து கார் வாங்குகிறார்கள்.
