உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 10
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 10 · 10 / 29

**கருத்திருமன்:** நான் அன்று ஆளும் கட்சி கொறடாவாக இருந்தேன். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது தி.மு.க. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தார்களா என்று கேட்க விரும்புகிறேன். இப்பொழுது இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு அவர்களுக்கு பரிந்து பேசுகின்ற முதல் அமைச்சர் அவர்கள் அப்பொழுது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து, ஓட்டுப் போட்டிருக்கலாமே அவர்கள் அப்பொழுது அப்படிச் செய்யவில்லையே!

**முதல்வர்:** நீதி விசாரணை வைத்தார்களா என்றுதான் நான் கேட்டேன். உங்களிடத்திலே பெருந்தன்மை காட்டி, காமராஜ் அவர்களின் மீது மாத்திரம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இருக்கிற காரணத்தினால், அண்ணா அவர்கள் சொன்னார்கள், அப்பொழுதே சொன்னார்கள். "நான் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆகவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நடுநிலைமை வகிக்கிறேன்" என்று குறிப்பிட்டு, இறுதியாக பேசும் பொழுது நீதி விசாரணை வேண்டும் என்று கேட்டார்கள்.

அப்பொழுது நீதி விசாரணை நீங்கள் என்னவைக்கவில்லை என்று நான் கேட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டுப் அளிக்கவில்லையே என்று கருத்திருமன் கேட்டுகிறார் நீதி விசாரணை இல்லை என்ற விவாதத்தைச் சொல்லுகிறேன் நான்.

**கருத்திருமன்:** முறைப்படி நீதிவிசாரணை வேண்டும் என்று சொன்னால் அப்பொழுது நீங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பேரில் ஓட்டுப் போட்டிருக்க வேண்டும். நீதிவிசாரணை கேட்டது என்றால், அவர்கள் எடுத்த நிலை என்ன? யாராக இருந்தாலும் சரி, ஏற்கனவே சொன்னார்கள். குழப்பம் இருந்தாலும் சரி, சர்க்காரில் தவறுகள் நடந்தாலும் சரி, அதைத் தடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். இன்று அச்சுத மேனன் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பரிதாபப்படுவார்கள் அன்று ஏன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பேரில் ஓட்டுப் போடவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி.

**முதல்வர்:** இந்த சட்ட சபை நடவடிக்கைகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் என்ன பேசினார்கள்? எப்பொழுது வெளிநடப்புச் செய்தார்கள் என்று கேட்டுகிறேன்.

கண்டனத் தீர்மானத்தின் கருத்துக்களை வற்புறுத்துகிறோம். அதன் பிறகு நான் கேட்டது அந்தப் பிணங்கள் சார்பாக, தேவராக இருந்தாலும் சரி, ஹரிஜன ஏழை மக்களாக இருந்தாலும் சரி, பிணங்களின் சார்பிலே கேட்கப்பட்ட நீதிவிசாரணை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டைச் சொல்லுகிறேன். வேறொன்றுமில்லை. துப்பாக்கிச் சூடு நடக்கலாம். சந்தர்ப்பங்களைப் பொறுத்து நடக்கலாம். தவறுகள் நடக்கலாம். அதைக் கேட்டால், அப்படித்தான் நடப்போம் என்று சொல்லிய ஆட்சி அப்போது இருந்து, ஐயோ, நடந்து விட்டதே, நீதிவிசாரணை நடத்துவோம் என்கிற ஆட்சி இப்போது இருக்கிறது என்று அந்த வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.

வேறில்லை.

போலீஸ் காவலில் இறந்தவர்கள் பற்றியெல்லாம் கூறப்பட்டது. உள்ளபடியே போலீஸ் துறையினிடத்தில் மிகுந்த கடுமையான எண்ணத்தோடு இருக்கிறேன் பலமுறை கண்டித்திருக்கிறோம். போலீஸ் லாக் அப்பில் இறந்து போவதை எதிர்க்கட்சியில் இருந்த போதும், இப்பொழுது ஆளும் கட்சியில் இருக்கும் போதும் கண்டிக்கிறோம். ஆளும் கட்சியில் வந்த பிறகு போலீஸ் லாக் அப்பில் செத்துவிடலாம் என்று அனுமதிகொடுத்து உத்தரவு போடப்பட்டதா? ஒரு பெண் கைது செய்யப்பட்டால்; உடனடியாக போலீஸ் லாக் அப்பில் வைக்கக் கூடாது, சப்-ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று போட்டிருக்கும் உத்தரவு பற்றி திரு.

சங்கரய்யா பேசும் போது நினைவு படுத்தினார்.

ஐலா அம்மையார் வழக்கின் காரணமாக போலீஸ் அதிகாரிகள் இப்பொழுது வேலையில் இல்லாமல், ஸஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். மாயவரத்தில் ராகவன் என்பவர் இறந்தார். உடனடியாக தஞ்சாவூரில் இருக்கின்ற மருத்துவப் பேரவிசாரணை நடத்தினார். அதற்குப் பிறகு தவறு இருப்பதைக் கண்டு,

போலீஸ் அதிகாரி ஸஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.