உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 8

பகுதி 6 · 6 / 7

"The States of Tamil Nadu, Andhra Pradesh, Maharashtra and Manipur have recorded the highest credit-deposit ratio (CDR) in the country, according to the latest data available."

அண்மையில் கிடைத்த புள்ளிவிவரப்படி தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் நாட்டிலேயே கடன்தொகை வைப்புத் தொகை விகிதாச்சாரத்தில் (Credit-deposit Ratio) உயர் நிலையில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

Against all-India average CDR of 55.5 per cent of all scheduled Commercial Banks (as on the last Friday of December 1997), Tamil Nadu's CDR was an astounding 92.3 per cent.

1997-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கடைசி வெள்ளிக் கிழமை நிலவரப்படி அனைத்து வர்த்தக வங்கிகளின் ஒட்டுமொத்த அனைத்திந்திய சராசரி கடன் தொகை வைப்புத் தொகை விகிதாச்சாரம் 55.5 சதவிகிதம் என்றால், தமிழகத்திலே அப்போதைய விகிதாச்சாரம் 92.3 சதவிகிதம் என்கிற வியப்புக்குரிய செய்தி கிடைக்கிறது என்று அந்த ஏடு எழுதிக் காட்டுகிறது.

Andhra Pradesh recorded the second highest CDR of 74.2 per cent followed by Maharashtra's 68.7 per cent and Manipur's 59 per cent. The National Capital Territory (NCT) of Delhi registered a CDR of 70.9 per cent, close to the Union Territory of Chandigarh's 69.1 per cent.

அதற்கடுத்து, ஆந்திர மாநிலம் 74.2 சதவிகிதம் பெற்று இரண்டாம் நிலையிலும், அதைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் 68.7 சதவிகிதம் பெற்றுள்ளது; மணிப்பூர் 59 சதவிகிதம் பெற்றுள்ளது என்று குறிப்பிடுகிறது.

சி.டி.ஆர். என்பது வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரித்துக் கொள்வது என்பதாகும். அது அதன் திறமையைப் பொறுத்துள்ளது. அதே சமயம் அந்த வங்கிகளின் உள்கட்டமைப்பு, அந்தப் பகுதியில் கடன் வசூல் செய்யும் திறன், முதலீட்டிற்காக உதவும் தன்மை, வங்கிக் கடன் வசூல் செய்யப் போதுமான வசதிகள் ஆகிய அனைத்தையும் சார்ந்தும் அது இருக்கும். அதுதான் சி.டி.ஆர். என்பதாகும். அதிலும் நாம் தலைமை இடத்தில் இருக்கிறோம் என்பதை இந்தப் புள்ளிவிவரம் விளக்குகிறது.

18-12-1998 நாளிட்ட ‘எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையில் இலண்டன் மாநகரத்தைச் சேர்ந்த சர்வதேச ரியல் எஸ்டேட்ஸ் (International Real Estates) என்னும் நிறுவனத்தின் ஆலோசகர் ஜோன்ஸ் லாங் ஊட்டன் (Jones Long Wootten) சொல்லியிருக்கிறார் "Chennai - சென்னை என்றே சொல்லியிருக்கிறார் பாருங்கள். நாம்தான் இன்னும் ‘மெட்ராஸ்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் - "Chennai has distinct strength over other Cities for attracting investments."

அதாவது, முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலே பல நகரங்களைவிட சென்னை சிறப்பான வளங்களைப் பெற்று முன்னணி இடம் பெற்றுள்ளது என்று ஜோன்ஸ் லாங் ஊட்டன் பாராட்டியுள்ளார்.

விகடன் பத்திரிகையில் 13-9-1998 ஒரு தலையங்கம். “தீர்க்கதரிசனத்துடன், நாளைய சவால்களுக்கு நாட்டைத் தயார்படுத்துவதுதான் ஆளுவோரின் இலட்சியமாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய தகவல் தொழில்நுட்ப தொழிலதிபர்கள் கூட்டம் மிகவும் முக்கியமானது. விப்ரோ, பெண்டாஃபோர், டாடா கன்சல்டன்சி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து முன்னணித் தொழிலதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தால்தான் மற்ற தொழில்களும் நன்கு வளரமுடியும் என்பதை அரசு உணர்ந்து காரியத்தில் இறங்கியிருப்பது பாராட்டத்தக்கது,” என்று விகடன் பத்திரிகை தலையங்கம் மூலமாகக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தத் தகவல் தொழில் நுட்ப மையத்தை இந்த அரசு தமிழகத்தில் விரிவாகச் செய்ய வேண்டும் என்பதற்காக எடுத்துள்ள முயற்சிகளைப் பற்றி எல்லாம் பலமுறை இந்த அவையிலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். எழுபதுகளிலே வெறும் கருத்துப் படிவமாக மாத்திரமே கருதப்பட்டிருந்த தகவல் தொழில் நுட்பம் இன்றைக்கு எங்கும் நிறைந்த பொருளாக ஆகிவிட்டது என்பதை அவை உறுப்பினர்கள் மிக நன்கு அறிவீர்கள். தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு பிரிவும் தகவல் தொழில் நுட்பத்தால் பின்னிப் பிணைக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றது.

உலகப் பொருளாதாரத்தோடு இணைந்துவிட்ட ஒன்றாகத் தகவல் தொழில் நுட்பம் உருவாகி வருகிறது. தகவல் தொழில் நுட்பம் இல்லாத எந்தத் தொழிலும் முன்னேற்றம் அடையாத பழைய தொழிலாகவே இப்பொழுது கருதப்படுகிறது.

21ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தகவல் தொழில் நுட்பம் விளங்கப்போகிறது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதனால்தான், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காகவும், அதன் பயன்கள் கிராமப் பகுதிகளிலும் ஊடுருவி, சாமானியர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், அரசு தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழ்நாட்டிலே ஆண்டுதோறும் புதிது வெளியே வரும் 23 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளில், 13 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மேலாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதன் தொடர்பான கல்வியைப் பெற்று இப்பொழுது வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்றைய அளவில் தமிழகத்தில் 22 ஆயிரம் பேர்களுக்கு மேலாக மென்பொருளை வாழ்க்கைத் தொழிலாக - Software Professionals - கொண்டிருக்கிறார்கள்;

தகவல் தொழில் நுட்பத்திற்கென்றே, சென்னை தலைமைச் செயலகத்தில் தனியாக ஒரு துறை, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தலைமையின்கீழ் 5-10-1998 முதல் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ச்சி அடையவும், அதற்கான அணுகுமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்தவும், முதலமைச்சர் தலைமையிலே I.T. Task Force ஒன்று உருவாக்கப்பட்டதையும் உறுப்பினர்கள் அறிவீர்கள்.

அரசு தகவல் தொழில் நுட்பத்திற்கென்று, தனியே கொள்கை (I.T.Policy) ஒன்றை உருவாக்கி அறிவித்துள்ளது. இக்கொள்கை, தகவல் தொழில் நுட்பத் தொழில் முனைவோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பழைய மாமல்லபுரம் சாலையில் சிறுசேரி என்ற இடத்தில் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள் (Software) வளர்ச்சிக்கு பன்னாட்டுத் தரத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் உருவாக்கிக் கொண்டு வருகிறது. சென்னையில் தரமணியிலிருந்து பழைய மாமல்லபுரச் சாலை வரையிலான பகுதி, தகவல் தொழில் நுட்ப நெடுஞ்சாலையாக (I.T. Super Highway) விரைந்து முன்னேறி வருகிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்தில் சோழிங்கநல்லூரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்னும் நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் மையத்தைத் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற மிகப் பெரிய நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் மற்றும் போலாரிஸ் ஆகியவை தங்களது மையங்களை அந்தப் பகுதியிலே நிறுவி வருகின்றன.

“வேர்ல்ட்டெல்” நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு நாம் ஆற்ற இருக்கின்ற அந்த அரும்பணியின் மூலமாக இலட்சத்து ஐம்பதாயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு தமிழகம் முழுவதும் கிடைக்கும் என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். அது, எந்த நிறுவனத்தின் சார்பாக இருந்தாலும்கூட, அதை விரைவுபடுத்தி, இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவதையும், தமிழகம் முழுவதும் இணைய மயமாக ஆகின்ற அந்த விஞ்ஞானப் புதுமையையும் இந்த அரசு உங்கள் ஆதரவோடு செய்து காட்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

(மேசையைத் தட்டும் ஒலி).

கணினிப் பயன்பாடுகளில் உலக அளவில் போதுமான தமிழ் குறியீடுகள் இல்லாத குறையைப் போக்குவதற்காகத்தான் “தமிழ்நெட் 1999” என்ற ஒரு மாநாட்டை நாம் நடத்தினோம். அதிலே உலகத்தின் பல பகுதிகளிலேயிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். அரிய கருத்துக்களையெல்லாம் வழங்கினார்கள். எல்லோரும் சேர்ந்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டு அந்த மாநாட்டிலே தமிழ் வடிவமைப்புகள் எப்படி வெளியிடப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்து, அவைகளெல்லாம் இன்னும் இரண்டொரு மாதங்களிலே - அந்த வடிவமைப்புகள், அந்த இணையத்திற்கான வடிவமைப்புகள் - வெளியிடப்பட இருக்கின்றன.

அதற்கு அமெரிக்காவிலுள்ள யூனிகோட் கன்சோர்ட்டியம் என்னும் மையத்தில் தமிழ்நாடு ஒரு கூட்டு அங்கத்தினராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே தமிழ் மாநிலம் மாத்திரம்தான் இப்படி அந்த யூனிகோட் கன்சோர்ட்டியத்தோடு தன்னைப் பதிவு செய்து கொண்டிருக்கிற ஒரேயொரு மாநிலம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

ஜூலை மாதத்தில் முடிவான தமிழ் வடிவமைப்புகள் வெளியிடப்பட்டவுடன், யூனிகோடிற்கு ஏற்கெனவே இருக்கும் தமிழ் வடிவமைப்புகளை மாற்றி அமைப்பதற்குரிய செயற்குறிப்புகளை அரசு அனுப்பி வைக்கும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிறகு Tamil Virtual University ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் எல்லாம் செயல்முறைக்கு வரும்போது இணையம் மற்றும் தகவல் தொழில் நுட்பப் பயன்கள் அனைத்தும் தமிழகம் மாத்திரமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் சென்றடையும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலம் முழுவதுமுள்ள 1,200 மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் கணினிப் பயிற்சி பெறவும்,