உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 8

பகுதி 4 · 4 / 7

9 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் பி.எச்.சி. மேனுபேக்சரிங் லிமிடெட் நிறுவனத்தின் கார் கதவுகள் தயாரிக்கும் தொழிற்சாலை.

43 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் டோங்கி விஷன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உலோகத் தகடு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

9 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் மோட்டார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் கார் எக்சாஸ்ட் (Car Exhaust) தயாரிக்கும் தொழிற்சாலை.

5 கோடி ரூபாய் செலவில் ஓசூரில் ப்ளூமிங் மெடோஸ் லிமிடெட் நிறுவனத்தின் மலர் வளர்க்கும் தொழிற்சாலை; அதாவது வெளிநாடுகளுக்கு மலரை ஏற்றுமதி செய்வதற்கான தொழிற்சாலை.

41 கோடி ரூபாய் செலவில் ஈரோடு அருகிலே உள்ள சோளங்கபாளையத்தில் S.K.M. Egg Products Limited நிறுவனத்தின் முட்டை பதப்படுத்தும் தொழிற்சாலை; அதைத்தான் மயில்சாமி கவுண்டர் ஆரம்பித்தார்; அந்தத் தொடக்க விழாவில் அவர் தன் சாதிப் பட்டத்தை விட்டார். இனிமேல் நான் மயில்சாமி கவுண்டர் அல்ல; சாமியையும் விட்டு விடுகிறேன்; மயிலானந்தம் என்று தன்னுடைய பெயரை அன்றைக்கு மாற்றிக் கொண்டார். அந்த முட்டை பதனிடும் தொழிற்சாலை 41 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.

5 கோடி ரூபாய் செலவில் காஞ்சிபுரம் அருகில் உள்ள செட்டிப்பாளையத்தில் பாரத் டெக்ஸ் பேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை.

300 கோடி ரூபாய் செலவில் கும்மிடிப்பூண்டியில் தாப்பர் டூபாண்ட் லிமிடெட் நிறுவனத்தின் நைலான் இழை தயாரிக்கும் தொழிற்சாலை. இதுகூட கடந்த ஆட்சிக் காலத்திலே தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல பிரச்சினைகளுக்கு இடையே, பிறகு இந்த ஆட்சிக் காலத்திலேதான் அந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

27 கோடி ரூபாய் செலவில் தாம்பரம் ஏற்றுமதி வளாகத்தில் ஆசியன் லைட்டிங் நிறுவனத்தின் உலோகக் குழல் விளக்கு தயாரிக்கும் தொழிற்சாலை.

4.5 கோடி ரூபாய் செலவில் கரூர் அருகிலே உள்ள அப்பர்பாளையத்தில் கரூர் யார்ன் லிங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நூலாடை தயாரிக்கும் தொழிற்சாலை.

10 கோடி ரூபாய் செலவில் ஓசூரில் டாரஸ் நாவல்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் டோலமைட், ஸ்டோன்வேர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

21 கோடி ரூபாய் செலவில் திருப்போரூரில் ஸ்ரீராம் ஆட்டோ காம்போனென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோ மொபைல் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

11 கோடி ரூபாய் செலவில் சென்னைக்கருகில் உள்ள மணலியில் ரமணசேகர் ஸ்டீல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உலோகச் சுருள்களைத் தகடாக மாற்றும் தொழிற்சாலை.

12 கோடி ரூபாய் செலவில் கோயம்புத்தூரில் இன்சில் இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை.

33 கோடி ரூபாய் செலவில் புழல் கிராமத்தில் செம்பவாங்-ஸ்ரீராம் நிறுவனம், சிங்கப்பூர் நிறுவனம் இது, இதன் பொருள் விநியோகத் தொழிற்சாலை.

500 கோடி ரூபாய் செலவில் சேலத்தில் சிஸ்கால் நிறுவனத்தின் எஃகுத் தொழிற்சாலை அண்மையிலே திறந்து வைக்கப்பட்டது. நான்கூட திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

756 கோடி ரூபாய் செலவில் சென்னை பேசின் பிரிட்ஜில் ஜி.எம்.ஆர். வாசவி நிறுவனத்தின் மின் திட்டம்.

மொத்த முதலீடு ரூபாய் 6,067 கோடி. இதில் நேரடியாக வேலை வாய்ப்பு 9,626 பேருக்கு; மறைமுகமான வேலை வாய்ப்பு 18 ஆயிரம் பேருக்குக் கிடைக்கும் என்பதையும் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இஃதன்னியில் இப்போது வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிற தொழில்கள் - அவை எவை என்று பார்த்தால், 450 கோடி ரூபாய் செலவில் திருப்பெரும்புதூரில் செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் மிதவைக் கண்ணாடி தயாரிக்கும்

தொழிற்சாலை அதனுடைய வேலை முக்கால் பகுதி முடிந்துவிட்டது. நேற்றுகூட நான் சமத்துவபுரம் திறப்பு விழாவிற்காக காஞ்சிபுரம் அருகே சென்றபோது அந்தத் தொழிற்சாலை வெகு வேகமாக தன்னுடைய பணிகளை நிறைவேற்றிக் கொண்டு இருப்பதைக் காண நேரிட்டது.

நீங்கள் யாராவது ஒரு முறை பெங்களூர் சாலையிலே காஞ்சிபுரம் வழியாகச் செல்லும்போது பார்த்தால், வழியின் இரண்டு புறமும் தொழிற்சாலை மயமாக இருப்பதைக் காண முடியும். அதுவும் ஹூண்டாய் தொழிற்சாலையைப் பார்த்தால் எவ்வளவு நீளத்திற்கு அது கட்டப்பட்டுள்ளது என்பதையும், அதைத் தொடர்ந்து அடுத்துள்ள இந்தக் கண்ணாடி தொழிற்சாலை எந்த அளவுக்கு, எவ்வளவு ரம்மியமாகக் காட்சியளிக்கிறது என்பதையும் காண முடியும். திரு.

சொக்கர் போன்றவர்கள், தொழிலிலே அக்கறை உள்ளவர்கள் போய் இதைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சொக்கரை அழைப்பதால் எதிர்க்கட்சித் தலைவரை அழைக்க வில்லை என்று அர்த்தம் அல்ல. எல்லோரும் போய்ப் பார்த்து, நீங்கள் அந்த உண்மையை உணர வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன். அவ்வளவு அற்புதமாக இருக்கிறது.

50 கோடி ரூபாய் செலவிலே இருங்காட்டுக்கோட்டையில் மார்க்யூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பேப்பர் போர்டு மிஷினரி தயாரிக்கும் தொழிற்சாலை.

44 கோடி ரூபாய் செலவிலே இருங்காட்டுக்கோட்டையில் கோவேமா உட்டிபிளாஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் ரிஜிட் பி.வி.சி பலகை தயாரிக்கும் தொழிற்சாலை.

5 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் ஆட்டோலெக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நீர் மற்றும் எண்ணெய் பம்ப் தயாரிக்கும் தொழிற்சாலை.

30 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் ரெனால்ட்ஸ் பென் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பால்பாயிண்ட் பேனாக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.