தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 8
பகுதி 3 · 3 / 7
ஓசூரில் 140 கோடி ரூபாயில் “டைட்டானியம் டை ஆக்ஸைடு” தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
சிப்காட் துணையோடு கடலூரில் 20 கோடி ரூபாய் முதலீட்டில் மரவள்ளிக்கிழங்கிலிருந்து இரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் “உஸ்தா-தே-பயோடெக்” தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
6 கோடி ரூபாய் செலவில் “டான்டெக் ஆக்ரோ” தொழிற்சாலை கடலூரில் தொடங்கப்பட்டது.
40 கோடி ரூபாய் முதலீட்டில் கடலூரில் “டங்ஸ்டன் மெட்டல் பவுடர்” தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
மணலியில் 189 கோடி ரூபாய் முதலீட்டில் “தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ்” தொழிற்சாலை 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களிலே தொடங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் மணலியில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “டி,பி, பெட்ரோ புராடக்ட்ஸ்” தொழிற்சாலை மற்றொன்று தொடங்கப்பட்டது.
மேலூருக்கு அருகில் நரசிங்கம்பட்டியில் ஏறத்தாழ 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை வைரம் தயாரிக்கும் தொழிற்சாலை 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் 10.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “தமிழ்நாடு மெக்னீசியம் மற்றும் மெரின் இரசாயனத் தொழிற்சாலை” தொடங்கப்பட்டது.
கடலூரில் 29.50 கோடி ரூபாய் முதலீட்டில் “தமிழ்நாடு புளோரின் மற்றும் சல்பைடு கெமிக்கல் தொழிற்சாலை” 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஓசூரில் 184 கோடி ரூபாய் முதலீட்டில் “டைட்டான்” கைக்கடிகார உறுப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
அதற்குப் பிறகு 1991-லிருந்து 1996 வரை, 5 ஆண்டுக் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் 21 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அதற்கான மொத்த முதலீடு 1.125 கோடி ரூபாய்
அதன் மூலம் நேரடி வேலைவாய்ப்பு 4,230 பேருக்கு. தி.மு.க. ஆட்சியில் இந்த மூன்று ஆண்டு காலத்தில் உற்பத்தியாகியுள்ள தொழிற்சாலைகளுடைய எண்ணிக்கை 28. 5 ஆண்டு காலத்திலே 21, மூன்று ஆண்டு காலத்திலே 28. (மேசையைத் தட்டும் ஒலி). அப்போது 5 ஆண்டு காலத்திலே மொத்த முதலீடு 1,125 கோடி ரூபாய். இப்போது மூன்று ஆண்டு காலத்திலே மொத்த முதலீடு 6,067 கோடி ரூபாய். (மேசையைத் தட்டும் ஒலி). அப்போது நேரடி வேலை வாய்ப்பு, அந்த 5 ஆண்டு காலத்திலே, 4,230 பேர்.
இப்போது மூன்று ஆண்டு காலத்திலே 9,626 பேர். (மேசையைத் தட்டும் ஒலி).
இஃதன்னியில் ஏறத்தாழ உற்பத்திப் பணி தொடங்கக் கூடிய சூழ்நிலையிலே உள்ள தொழிற்சாலைகள் இந்தக் குறிப்பிட்ட 28 அன்னியில் மேலும் 28 தொழிற்சாலைகள் அதற்கு முதலீடு 22,946 கோடி ரூபாய். (மேசையைத் தட்டும் ஒலி) அதன் மூலமாக வேலைவாய்ப்பு பெற இருப்போர் 11 ஆயிரம் பேர். (மேசையைத் தட்டும் ஒலி).
1996 முதல் 1999 வரை தமிழ்நாட்டிலே தொடங்கப்பட்ட புதிய தொழிற்சாலைகள், காஞ்சிபுரம் செல்கின்ற வழியிலே இருங்காட்டுக் கோட்டையில் 1,829 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது, தொழில் வளர்ச்சிக்காக, பல தொழில்களைத் தொடங்க வேண்டும் என்பதற்காக, இந்த மூன்று ஆண்டுக் காலத்தில்.
2,450 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக் கோட்டையில் “ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்” நிறுவனத்தினுடைய கார் தொழிற்சாலை.
320 கோடி ரூபாய் செலவில் திருவள்ளூரில் “மிட்சுபிஷி லேன்சர்” கார் தொழிற்சாலை.
1,700 கோடி ரூபாய் செலவில் மறைமலை நகரில் அமைக்கப்பட்ட “ஃபோர்டு மோட்டார்ஸ்” நிறுவனத்தினுடைய கார் தொழிற்சாலை.
40 கோடி ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக்கோட்டையில் “இல்ஜின் இண்டஸ்ட்ரியல்” நிறுவனத்தின் ஆட்டோமொபைல் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.
23 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் “டைனமாடிக் குருப் கம்பெனிகள்” நிறுவனத்தின் ஆட்டோமொபைல் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.
44 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் போஸ் ஹூண்டாய் ஸ்டீல் மேனுபாக்சரிங் லிமிடெட் நிறுவனத்தின் காயில் சென்டர் (Coil Centre) தொழிற்சாலை.
27 கோடி ரூபாய் செலவில் மறைமலை நகரில் வாலியோ பிரிக்ஷன் மெட்டீரியல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நான்-ஆஸ்பெஸ்டாஸ் பிரிக்ஷன் மெட்டீரியல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை; காரின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கின்ற தொழிற்சாலை.
30 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் மேண்டோ பிரேக் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஹைட்ராலிக் பிரேக்கிங் சிஸ்டம்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை.
59 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் மிட்சுபிஷிடா ஏர்கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஏர்கண்டிஷனர்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அறைகளுக்கு வைக்கக்கூடிய ஏர்கண்டிஷன் இயந்திரங்களைத் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலை.
8.6 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் லுமெக்ஸ் சாம்லிப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோ மோடிவ் லைட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை.
45 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் ஜே.பி.எம். சங்ஊ லிமிடெட் நிறுவனத்தின் தகடு உலோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.
17 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் ஜே.கே.எம். டேரியம் ஆட்டோ மோடிவ் லிமிடெட் நிறுவனத்தின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.
