தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 7
பகுதி 4 · 4 / 6
மகாராஷ்டிரா, Objective-ல் 1, Perception-ல் 1, Rank-ல் 1: குஜராத் Objective-ல் 3, Perception-ல் 2, Rank-ல் 2; தமிழ்நாடு Objective-ல் 2, Perception-ல் 3, Rank-ல் 3: ஆனால் உண்மையிலேயே நாம் இரண்டாவது இடத்திலே இருக்கிறோம். முதல் இடத்திற்குச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).
அயல்நாட்டினுடைய நேரடி முதலீடுகளின் காரணமாக இருக்கக்கூடிய சாதக பாதகங்கள் இவைகளைப் பற்றி நம்முடைய கிருஷ்ணசாமி அவர்கள்கூட இங்கே பேசினார்கள். அதிகமாக நாம் அவர்களிடத்திலே பலியாகி விடக்கூடாது என்பது போன்ற கருத்துக்களையெல்லாம் இங்கே எடுத்துரைத்தார். அணுகுண்டு சோதனை பற்றி எடுத்துரைத்தார். அயல்நாடுகளெல்லாம் எந்த அளவுக்கு இந்தியாவை இன்றைக்கு எச்சரித்துக் கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.
ஆனால் கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, 1996ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை உத்தேசிக்கப்பட்டுள்ள மற்றும் செயலாக்கத்திலே உள்ள அயல் நாட்டு நேரடி முதலீடுகளின் அளவு மொத்தம் 43,515 கோடி ரூபாய் ஆகும். இதில் காலகட்டத்திலே கணக்கு முடிக்கப்பட்டவை, கைவிடப்பட்ட முதலீடு இவைகளின் அளவுகளையெல்லாம் கழித்தால், 8,522 கோடி ரூபாய் கழிக்கப்பட்டால் 1998ஆம் ஆண்டு ஜனவரி வரை 34,993 கோடி ரூபாய்.
அது அப்ரூவ்டு முதலீடு. இதற்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இந்த 34,993 கோடி ரூபாய்க்குள் பல தொழில்கள் இங்கே முதலீடு செய்வதற்கும், வருவதற்குமான வாய்ப்புக் கூறுகள் நிறைய இருக்கின்றன. அப்படி வருகின்ற தொழில்கள் என்னென்ன என்று பார்த்தால், அடிப்படை இரசாயனத் தொழில் 16,329 கோடி ரூபாய், பெட்ரோலியப் பொருள்
2,264 கோடி ரூபாய், உரம் 1,125 கோடி ரூபாய், உலோகம் அல்லாத கனிமப் பொருள் 936 கோடி ரூபாய், தொழில் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழில் 913 கோடி ரூபாய், மின்னணுத் தொழில் 242 கோடி ரூபாய், போக்குவரத்துச் சாதனத் தொழில் 1,157 கோடி ரூபாய், கனிமத் தொழில் 412 கோடி ரூபாய், மின் உற்பத்தித் திட்டம் 18,392 கோடி ரூபாய், இரயில்வே தொழில்களில் 765 கோடி ரூபாய் சாலைகள் மற்றும் பாலங்கள் 480 கோடி ரூபாய், தொலைத் தொடர்புத் தொழில்கள் 100 கோடி ரூபாய். அயல்நாட்டு நேரடி முதலீட்டால் ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் என்னவென்று பார்த்தால், இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவில் அயல்நாட்டு நேரடி முதலீடு ஏறுமுகமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
அயல்நாட்டு நேரடி முதலீடு உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் நவீன தொழில் நுட்பத்தை மாநிலத்திற்குக் கொண்டுவர உதவுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. அந்த நுட்பம்கூடத் தேவையில்லை என்கின்ற அளவிற்கு இன்றைக்கு அரசியல் வட்டாரத்திலே சில பகுதிகளிலே பேசப்பட்டாலும்கூட, அந்தத் தொழில்நுட்பம் இன்றைய விஞ்ஞான உலகத்தில், வளரும் விஞ்ஞான உலகத்தில் எவ்வளவு தேவை என்பதை அதிலும் இந்தியா போன்ற வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்ற ஒரு நாட்டு மக்கள், அதிகம் பேர் அடங்கிய நாட்டுக்கு எவ்வளவு தேவை என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை.
மாநிலத்தினுடைய சொந்த நிதி ஆதாரத்திற்குக் கூடுதலாக கணிசமான வெளிநாட்டு நிதியாதாரங்களை இந்த அயல்நாட்டு மூலதனம் மூலமாகக் கொண்டுவர முடிகிறது. வெளிநாட்டின் சிறந்த வர்த்தகத்தையும், நிர்வாகத் திறமையையும் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனங்கள் தங்களுடைய தொழிலைத் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய முடிகிறது. பல்வேறு நிலையிலே உள்ள நம்முடைய பொறியாளர்கள், இளநிலை மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் போன்றவர்களின் தொழில் திறமைகள் மற்றும் தொழில் அறிவுத் திறமைகள் கணிசமாக உயர்வடைகின்றன.
அவர்களது மதிப்பும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கின்றன. மாநிலப் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்தமான உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு, ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிகோலப்படுகிறது.
வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்கள் மாநிலத்திற்கு வருவதன் காரணமாக, அவர்களுடைய உறைவிடம், உணவு, பொழுதுபோக்கு முதலிய தேவைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இன்றைய தேதியில் சென்னையில் மாத்திரம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கியிருக்கின்றார்கள். இத்தாலி, மெக்சிகோ, ஜப்பான், தாய்லாந்து, மற்றும் கொரியா உணவு வகைகளைத் தயாரிக்கும் பலதரப்பட்ட உணவகங்கள் சென்னையிலே தொடங்கப்பட்டு, நல்ல வர்த்தகங்கள் புரிந்து வருகின்றன.
வெளிநாட்டினருடைய தேவைகளைப் பூர்த்திச் செய்ய மிகச் சிறந்த உறைவிடங்கள் தோன்றியுள்ளன. பன்னாட்டுப் பாடத் திட்டங்களை அளிக்கும் புதிய பள்ளிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மாநிலத்திலே வசிக்கும் வெளிநாட்டினருடைய பயண விருப்பம் காரணமாக சுற்றுலாத் துறையும் பயனடைகிறது. சுற்றுலா விரிவடைந்தால், அதன்மூலமாக அன்னியச் செலாவணி அதிகமாக ஒரு நாட்டுக்குக் கிட்டும் என்பது அனைவரும் அறிந்த பொருளாதார இலக்கணம். வெளிநாட்டு நேரடி முதலீட்டால் அதிக அளவில் வேலைவாய்ப்புகள், அதிகம் உற்பத்தி, பொருளாதாரம், உள்ளூர் பணியாளர்களுடைய திறமை உயர்வு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ஆதாரங்கள் மேம்பாடு ஆகியவை பெருகிட வாய்ப்பு ஆகிறது.
இவ்வளவு சீலங்களையும் சொல்கின்ற காரணத்தால் சிக்கிக் கொள்வீர்களா என்று திரு. சுப்பராயன் கேட்கத் தேவையில்லை. சிக்கிக் கொள்ளாமலேதான் இவற்றையெல்லாம், இந்தப் பயன்களையெல்லாம் நாம் அனுபவிக்க இருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மின் திட்டங்களைப் பற்றி இங்கே திரு. சுப்பராயன் அவர்கள் சொன்னார்கள். மற்றவர்களும் அதைப்பற்றிப் பேசியிருக்கின்றார்கள். 900 கோடி ரூபாய்த் திட்ட மதிப்பீட்டில் சேலம் உருக்காலையிலே அமைய இருக்கின்ற ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய எஃகு அமைச்சகத்தினுடைய அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகின்றோம்.
குறுகிய காலத்திலே மின்சார உற்பத்தி செய்யும் 20 மின் திட்டங்களைத் தமிழகத்திலே அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்த அவையிலே ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட செய்திதான். இவற்றிலே தூத்துக்குடியிலே இரண்டு திட்டங்கள், எண்ணூர், கள்ளிக்குடி, ஓசூர் ஆகிய இடங்களில் மூன்று திட்டங்கள், ஆக மொத்தம் ஐந்து மின் திட்டங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கிட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஐந்து மின் திட்டங்களின் மூலம் மொத்தம் 480 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
ஏறத்தாழ 2,300 மெகாவாட் திறனுள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எஞ்சிய 15 திட்டங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படுவதில் மத்திய அரசின் அனுமதி தாமதமாகிக் கொண்டே வருகிறது. இப்பொழுது மாத்திரம் அல்ல, கடந்த ஐக்கிய முன்னணி ஆட்சியிலேகூட பலமுறை வலியுறுத்தியும், பிரதமரிடத்திலே நான் சென்று வலியுறுத்தியும், மின்சாரத் துறை அமைச்சர் சென்று வலியுறுத்தியும், அங்கிருந்த நம்முடைய அமைச்சர்கள் எல்லாம் வலியுறுத்தியும்கூட, இந்த ஐந்து திட்டங்களுக்கு மேல் அங்கிருந்து நமக்கு அனுமதி கிடைக்கவில்லை.
மற்ற 15 திட்டங்களுக்காக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த 15 திட்டங்கள், துவாக்குடியிலே பிரிஸ்டன் ஸ்ட்ரக்சர் கம்பெனி. இந்தத் திட்டம் நிறைவேறினால் 102 மெகாவாட்ஸ். இராணிப்பேட்டையில் என்சோன் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன், திட்டம் நிறைவேறினால் 242 மெகாவாட்ஸ், மணலியில் பி.டி.விஷ்மக்கார்ய பிரசட்யா, திட்டம் நிறைவேறினால் 138 மெகாவாட்ஸ், சிறுமுகையில் டி.சி.எம். ஸ்ரீராம் கன்சாலிடெட் லிமிடெட், திட்டம் நிறைவேறினால் 103 மெகாவாட்ஸ், வாடிப்பட்டியில் பாலாஜி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டம் நிறைவேறினால் 118 மெகாவாட்ஸ், திருப்பெரும்புதூர்-1-இல் சாம்சங் கார்ப்பரேஷன், திட்டம் நிறைவேறினால் 109 மெகாவாட்ஸ், திருப்பெரும்புதூர்-2-இல் சாம்சங் கார்ப்பரேஷன், திட்டம் நிறைவேறினால் 109 மெகாவாட்ஸ், கும்மிடிப்பூண்டியில் டி.என்.பி.
என்ஜினியரிங் அண்டு கன்சல்டன்சி எஸ்.டி.என்.பி.எச்.டி., திட்டம் நிறைவேறினால் 162 மெகாவாட்ஸ், செங்கல்பட்டில் டி.எல்.எப். பவர் லிமிடெட், திட்டம் நிறைவேறினால் 53 மெகாவாட்ஸ், கும்மிடிப்பூண்டி-2-இல் அசோக் லேலண்டு, திட்டம்
நிறைவேறினால் 225 மெகாவாட்ஸ், செங்கல்பட்டு-1-இல் அசோக் லேலண்டு, திட்டம் நிறைவேறினால் 231 மெகாவாட்ஸ், பெருந்துறையில் டி.என்.பி. என்ஜினியரிங் அண்டு கன்சல்டன்சி எஸ்.டி.என்.பி.எச்.டி., திட்டம் நிறைவேறினால் 154 மெகாவாட்ஸ், கடலூரில் அசோக் லேலண்டு, திட்டம் நிறைவேறினால் 225 மெகாவாட்ஸ், அரக்கோணத்தில் ஸ்ரீராயலிசிம்தா ஐ டிரான்ஸ் ஐப்போ லிமிடெட், திட்டம் நிறைவேறினால் 118 மெகாவாட்ஸ், பள்ளிப்பாளையத்தில் அசோக் லேலண்டு, திட்டம் நிறைவேறினால் 219 மெகாவாட்ஸ், ஆக, 15 மின் திட்டங்களிலும் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ள மின்சாரம் 2,307 மெகாவாட்ஸ் ஆகும்.
இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசினுடைய ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வலியுறுத்துவோம். இதுவரையிலும் ஐந்து திட்டங்களுக்கான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். அந்தப் பணியை முடுக்கிவிட்டு, விரைவிலே முடிப்போம். இந்தத் திட்டங்களுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள, நம்முடைய அமைச்சர், சமீபத்திலேகூட டெல்லிக்கு சென்று மின்சாரத் துறை அமைச்சர், மாண்புமிகு குமாரமங்கலம் அவர்களைச் சந்தித்துப் பேசி வந்திருக்கின்றார்.
விரைவிலே இந்தத் திட்டங்களுக்கு எல்லாம் மத்திய அரசு அனுமதியைத் தரவேண்டுமென்று இந்த அவையிலே உங்கள் அனைவரின் மூலமாகவும் நான் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) இதிலே அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு, கட்சி மாறுபாடுகளுக்கு இடமில்லாமல் பணியாற்றுவேன் என்று எனக்கு குமாரமங்கலம் அவர்கள் எழுதிய கடிதத்திலேகூட குறிப்பிடப்பட்டிருக்கின்றார்கள். அதை அவர் நிறைவேற்றுவார் என்று நான் நம்புகின்றேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிப்காட் நிறுவனம் செய்துகொண்ட தொழில் ஒப்பந்தங்களை மாத்திரம் இங்கே வரிசைப்படுத்த விரும்புகின்றேன். என்னென்ன தொழில் என்ற பட்டியலை திரு. ரங்கநாதன் அவர்கள் கேட்டார்கள். ஆகவே, அவற்றை மாத்திரம் நினைவுபடுத்துகின்றேன்.
யூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், கொரியா நாட்டைச் சேர்ந்த மோட்டார் நிறுவனம் கார் தொழிற்சாலை ஒன்றை நிறுவ, 18-7-1996 அன்று சிப்காட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. 18-7-1996-லே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தாரா,
இல்லையா என்பது எனக்குத் தெரியாது. திரு. சுந்தரம்தான் சொல்ல வேண்டும். என்னவோ, “நாங்கள்தான் கொண்டு வந்தோம்; நாங்கள் சமைத்து வைத்தோம்; நீங்கள் சாப்பிட்டு விட்டீர்கள்” என்று சொன்னார்கள். யாரோ சமைத்ததை யாரோ சாப்பிடுகின்ற நிலை இன்றைக்கு இல்லை. 18-7-1996 அன்று சிப்காட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டு, யூண்டாய் மோட்டார் நிறுவனம் கார் தொழிற்சாலையை நிறுவியது.
இருங்காட்டுக்கோட்டை 'சிப்காட்' வளாகத்தில், 543 ஏக்கர் பரப்பில் அமையும் 'யூண்டாய்' கார் தொழிற்சாலை, 2,450 கோடி ரூபாய் மூலதனத்தோடு அமைக்கப்படுகிறது. தொழிற்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து, 1998 ஜூன் திங்களில் சோதனை அளவில், கார் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது. அக்டோபர் திங்களில், வணிக முறையிலான கார் உற்பத்தி தொடங்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
இதனால், ஏறத்தாழ 2,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
Integrated Iron and Steel Plant தொழிற்சாலை. இத்திட்டத்தை, 'டிட்கோ' நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த Rynex International என்ற நிறுவனத்தோடு இணைந்து, இணைத் துறையில் சுமார் 3,300 கோடி ரூபாய் செலவில், சேலத்தில் நிறுவ உள்ளது. தொழில் முனைவோருக்கான ஒப்பந்தம், 3-3-1997 அன்று கையெழுத்தானது. அதுவும் எங்கள் ஆட்சியில்தான். திரு. சுந்தரம் சொன்னதுமாதிரி, அந்த ஆட்சியில் அல்ல. இந்தத் திட்டத்திற்கான ஆய்வு அறிக்கையை 'Mega' நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தத் தொழிற்சாலை மூலம் 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், சுமார் 3,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
Fenner Refineries Limited தொழிற்சாலை. ஹைதராபாத்திலுள்ள நாகார்ஜுனா குரூப் நிறுவனத்தினை சக தொழில் முனைவோர்களாகக் கொண்டு, 6 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் ஒன்றை, இணைத் துறையிலே 'டிட்கோ' நிறுவி வருகிறது. தொழில் முனைவோர்களுக்கான ஒப்பந்தம்,
9-1-1998 அன்று கையெழுத்தாகியுள்ளது. இத்தொழில் பிரிவு, கடலூர் மாவட்டம் திரிச்சுவபுரம் கிராமத்தில் நிறுவப்பட்டு வருகிறது. முதற் கட்டத்திற்குத் தேவையான நிலத்தை வாங்கும் பணி, முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டம் ஏறத்தாழ 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்படுகின்ற ஒரு திட்டமாகும். இத்திட்டத்திற்குத் தேவையான கட்டட வேலை, வரும் ஜூன் மாதம் தொடங்கும்.
உயர்தர தொழில்நுட்பத் தொழில் பூங்கா - Hi-Tech Technology Industrial Park (TNFAC) - மற்றும் Axes Technologies ஆகிய அமெரிக்க நிறுவனங்களோடு, 'டிட்கோ' இணைந்து, தனியார் ஏற்றுமதி வளாகப் பூங்கா ஒன்றை, நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில் நிறுவி வருகிறது. 800 கோடி ரூபாய் முதலீட்டில் இப்பூங்காவிற்குத் தேவையான நிலம், அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும். இப்பூங்காவில் அமையவிருக்கும் தொழில் நிறுவனங்களின் மொத்த முதலீடு, சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்.
இத்திட்டத்தின் தொழில் முனைவோருக்கான ஒப்பந்தம் 24-2-1998 அன்று கையெழுத்தாகியுள்ளது. சுமார் 2,500 ஏக்கர் நிலம், ஜூன் மாதத்தில், ஆர்ஜிதம் செய்வது முடிவடையும். 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆட்டோ உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் Mahindra Industries Park Limited தொழில் வளாகம். இத்தொழில் வளாகத்தை 'Mahindra Reality and Infrastructural Development Limited' என்ற நிறுவனம் மற்றும் ILFS நிறுவனம் ஆகியோருடன் இணைந்து உருவாக்க, 'டிட்கோ' நிறுவனம், 12-6-1997 அன்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இத்தொழில் வளாகம். சென்னையை அடுத்த மறைமலை நகரில் 1,200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இத்தொழில் வளாகத்தில், மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படவுள்ளன. 3,000 பேருக்கு நேரடியாகவும், 5,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். நடப்பாண்டு இறுதியில், இவ்வளாகத்தின் பணிகள் முடிவடையும்.
'செயின்ட் கோபைன்' கண்ணாடித் தொழிற்சாலை, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 'செயின்ட் கோபைன்' கண்ணாடித் தொழிற்சாலையோடு, இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம், 6-1-1997 அன்று நடைபெற்றது. 450 கோடி ரூபாய் முதலீட்டில் அமையும் இந்தக் கண்ணாடித் தொழிற்சாலை திருப்பெரும்புதூர் தொழில் வளர்ச்சிப் பூங்காவில் அமைகிறது. 1999ஆம் ஆண்டு இறுதியில் இது உற்பத்தியைத் தொடங்கும்.
பி.வி.சி. ரெக்ஸின் தொழிற்சாலை, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 'நார்த் சைட்டோ' நிறுவனத்தினரின் பி.வி.சி. தொழிற்சாலை திட்டத்தை, எண்ணூர் பெட்ரோலியம் தொழில் வளாகத்தில், இணைத் துறையில் அமைக்கும் திட்டத்திற்கான ஆய்வறிக்கை 'டிட்கோ'-விடம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் டன் எடையுள்ள பி.வி.சி. பொருள்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள்களை, இத்தொழிற்சாலை உற்பத்தி செய்யும்.
இத்திட்டத்தின் முதலீடு 350 கோடி ரூபாய். இத்திட்டத்திற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் 10-3-1997 அன்று நடைபெற்றுள்ளது.
பிஸ்-பினால்-ஏ இரசாயனத் தொழிற்சாலை. புது டில்லியிலே உள்ள மோடி கார்ப் நிறுவனம், 'டிட்கோ'-வுடன் சேர்ந்து ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் பிஸ்-பினால்-ஏ என்ற இரசாயனத்தை உற்பத்திச் செய்யக்கூடிய தொழிற்சாலை ஒன்றை கடலூர் மாவட்டத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்திற்கான தொழில் முனைவோருக்கான ஒப்பந்தம் 16-7-1997 அன்று கையெழுத்தாகியுள்ளது. 250 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு நேரடியாகவும் 500 பேர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இத்தொழிற்சாலை அமையும்.
ஜப்பானிய தொழில்நுட்பத்தோடு இணைத் துறையில் தொடங்கப்படவுள்ள இந்தத் தொழிற்சாலை இரண்டு ஆண்டுகளில் உற்பத்தியை தொடங்கும்.
தமிழ்நாடு சாலை மேம்பாடு மற்றும் வரிவசூல் நிர்வாகத் திட்டம், Tamil Nadu Toll Road Management Company Ltd., நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் குறுக்கு வழிச்சாலைகள்
ஆகியவற்றை அமைக்க 'டிட்கோ' ஐ.எல்.எப்.எஸ். மற்றும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த டிரான்ஸ்ரூட் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் சி.சி.எஃப். நிறுவனம் ஆகியோரை சக முனைவராகக் கொண்டு இணைத் துறையிலே இந்தத் திட்டத்தை நிறுவி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தொழில் முனைவோருடனான ஒப்பந்தம் 21-1-1998 அன்று கையெழுத்தாகியுள்ளது. முதல்கட்டமாக 160 கோடி ரூபாய் செலவில் சென்னைத் துறைமுகத்திலிருந்து எண்ணூர் செல்லும் சாலையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஃபையாக்சிலி ஓரியண்டட் பாலிப் புரொஃபிளின் தொழிற்சாலை. புதுடில்லியிலே உள்ள திருவாளர்கள் மோடி கார்ப் நிறுவனமும், இத்தாலியிலே உள்ள விபாக் நிறுவனமும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 15,000 டன் உற்பத்தி செய்யக்கூடிய திட்டத்தை டிட்கோவுடன் இணைத் துறையிலே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விபாக் நிறுவனம் உலகில் இத்தொழிலில் மூன்றாம் இடத்திலிலுள்ளது. இத்திட்டத்திற்கான தொழில் முனைவோர் ஒப்பந்தம் 16-7-1997 அன்று கையெழுத்தாகியுள்ளது. இத்திட்டத்திற்கான தொழில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதற்கு 150 கோடி ரூபாய் முதலீடு.
இல்ஜின் ஆட்டோமோட்டிவ். உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை. கார்களுக்கு வேண்டிய பாகங்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைப்பதற்காக கொரியாவைச் சேர்ந்த இல்ஜின் தொழிற்சாலை நிறுவனம் சிப்காட்டோடு 2-7-1997 அன்று ஒப்பந்தம் செய்துகொண்டது. 40 கோடி ரூபாய் செலவிலே அமையும் இந்தத் தொழிற்சாலைக்கு ஒரு ஏக்கர் நிலம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்திலே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
மகுஸ்த்தா ஏர்கண்டிஷன் இந்தியா தொழிற்சாலை. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மகுஸ்த்தா எலக்ட்ரிக்கல் தொழிற்சாலையும் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீதூத் வாணிப நிறுவனமும் இணைந்து 59.40 கோடி ரூபாய் முதலீட்டில் மகுஸ்த்தா ஏர்கண்டிஷன்
