உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 6

பகுதி 4 · 4 / 5

கிரானைட் கற்களைப் பயன்படுத்தி கூட்டுத் துறையில் 4 புதிய திட்டங்கள் - ஒவ்வொன்றும் 50 ஹெக்டேர் பரப்பளவில், இந்த நான்கும் சேர்ந்து 200 ஹெக்டேர் பரப்பளவில் கிரானைட் கற்களைப் பயன்படுத்தி நடத்துகின்ற தொழில்களைத் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்குரிய விலைப்புள்ளிகள் விரைவில் முறைப்படி கோரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. சுப்பராயன் பேசும்போது குறிப்பிட்டார்கள், ஒவ்வொரு தொழிலும் தொடங்கும்போது சுற்றுப்புறச் சூழல் எப்படி அமையும் என்பதைக் கருத்தில் கொண்டு தொடங்க வேண்டும்; இல்லாவிட்டால், தொடங்கிய பிறகு பிரச்சினைகள் உருவாகும் என்பதை இங்கே எடுத்துக்காட்டினார். அதற்கு ஏற்ப தோல் பதனிடும் தொழில், சாயத் தொழில், உருக்குத் தொழில், கல் உடைக்கும் தொழில் முதலிய பல தொழில்கள் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக் குறித்த கவலையின்றி, கழிவுப் பொருள்களைத் தாறுமாறாகத் தொடர்ந்து வெளியேற்றி வந்தன.

இதனால் ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் கேடுகள் தொடர்பாக அண்மையில் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பையொட்டி, இத்தொழில்களைத் தொடர்ந்து நடத்துவதில் சில சிரமங்கள் தோன்றியுள்ளன. இச்சிரமங்களைக் களைந்து மீண்டும் இவ்வகைத் தொழிற்சாலைகள் திறம்படச் செயல்பட உதவும் வகையில் புறநகர்ப் பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தொழில் வளாகங்கள் அமைத்திட அம்மையங்களில் தோல் பதனிடும் பூங்கா வளாகம், சாயத் தொழில் பூங்கா வளாகம், தோல் பொருள் தொழில் பூங்கா வளாகம், உருக்குத் தொழில் பூங்கா (பவுண்டரி) வளாகம் எனத் தனித்தனிப் பிரிவுகளை அமைத்திடவும், அந்தந்த தொழில்களுக்கு ஏற்ப கழிவுப் பொருள் சுத்திகரிப்பு வசதிகளைச் செய்து கொடுத்திடவும் இந்த அரசு திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்னணுப் பூங்காக்கள் மின்னணுப் பூங்காக்கள் என்று சொல்லும் போது, நந்தவனம் என்று கருதிக்கொள்ளக் கூடாது. அதைத் தொழில் பார்க் என்றும் அழைப்பது உண்டு. அந்த

அளவிலே மின்னணுப் பார்க், மின்னணுத் துறையிலே ஏற்பட்டு வரும் தீவிர வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் சென்னையில் கேளம்பாக்கத்திலும், கோவையிலும் தொழில்நுட்பப் பூங்காக்களை (Technology Parks) நிறுவிட விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அதேபோல சென்னைக்கு அருகில் ஒன்றும் மதுரையில் ஒன்றுமாக இரண்டு இடங்களில் மென்பொருள் நுட்பவியல் பூங்காக்களை (Software Techno Parks) நிறுவுவதற்கும் இந்த அரசு திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய தொழில் மையங்கள். வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகளை கருதி இளைஞர் சமுதாயத்திற்கு முறையான வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டுமென்ற நிலையில், சென்னை புறநகர்ப் பகுதியிலும், விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும், கோவை மாவட்டத்திலும், தர்மபுரி மாவட்டத்திலும், புதிய தொழில் மையங்களைத் தொடங்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி).

தமிழ்நாட்டின் எதிர்கால மின்சாரக் கனவுகள் அனைத்தும் பெரிய அளவிலேயே நம்பியிருப்பது, L.N.G. (Liquified Natural Gas) என்ற எரிவாயுத் திட்டம். அந்த எல்.என்.ஜி. திட்டத்திற்கு, எண்ணூரில் ஒரு எல்.என்.ஜி. டெர்மினல் அமைக்கப்பட்டு, கப்பலில் கொண்டுவரப்படும் 2 மில்லியன் டன் திரவமயமாக்கப் பட்ட எரிவாயு அங்கே சேமித்து வைக்கப்படும். அதன் அருகிலே, முதல் கட்டமாக 2,500 மெகாவாட் திறனுள்ள ஒரு மின் நிலையம் அமைக்கப்பட்டு, திரவ நிலையிலே உள்ள எரிவாயுவை மீண்டும் வாயு நிலைக்கு மாற்றி, குழாய்கள் மூலம் அதனை மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பி, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும்.

இந்த பிரமாண்டமான திட்டத்திற்கான முதல்கட்ட செலவு ரூ. 12,000 கோடி ஆகும். இந்த 12,000 கோடி ரூபாய்க்கு பொதுத் துறையிலே எங்கே போக முடியும்? எனவேதான், அதற்காக விடப்பட்ட டெண்டர்களை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த, அந்த

ஒப்பந்தங்களுக்குத் தயார் என்று முன்வந்திருக்கிறவர்கள் எத்தனை பேர் என்றால், -

1. மொபில் எல்.என்.ஜி., அமெரிக்கா.

2. ஷெல் இன்டர்நேஷனல் காஸ், இங்கிலாந்து.

3. கோஸ்டல் காஸ் கார்ப்பரேஷன், அமெரிக்கா.

4. அமோகா பவர் ரிசோர்சஸ் கார்ப்பரேஷன், அமெரிக்கா.

5. பிலிப்ஸ் பெட்ரோலியம் கம்பெனி, அமெரிக்கா.

6. ஆக்ஸிடெண்டல் நிறுவனம், அமெரிக்கா.

7. காஸ் டி'பிரான்ஸ், பிரான்ஸ்.

8. டோடல், பிரான்ஸ்.

9. நிசோ இவாய், ஜப்பான்.

10. மருபேனி கார்ப்பரேஷன், ஜப்பான்.

11. க்ளெனக் இன்ஜினியரிங் குரூப், ஆஸ்திரேலியா.

12. இம்ப்பீரியல் எஸ்டிஎன் பிஎஹெச்டி, மலேசியா.

13. ரிலையன்ஸ் பவர் லிமிடெட், மும்பை.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதிலே, ஒப்பந்தத்தில் கலந்து கொள்வதிலே, ஆர்வத்தோடு அவர்கள் முன்வந்திருக்கின்றார்கள். அவர்களில் யாருக்காவது ஒருவருக்கு இந்தத் திட்டம் கிடைக்கும். ஒரு பிரமாண்டமான திட்டத்தைத் தமிழ்நாடு விரைவிலே அடைய இருக்கின்றது என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த அவையிலே தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

சென்னையைச் சுற்றியே பல பெருந்தொழில் திட்டங்கள் உருவாகி வருகின்றன என்ற ஒரு குறைபாடு இருந்து வருகின்றது. இட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தொழில் துறையின் சார்பில், ஹூண்டாய் கார் தொழிற்சாலை அமையும் திருப்பெரும்புதூருக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பில் ஒரு துணை நகரமும், போர்டு கார் தொழிற்சாலை அமையும் சிங்கப்பெருமாள்கோவில்