தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 5
பகுதி 3 · 3 / 5
Chief Minister of Tamil Nadu,
Republic of India.
Excellency,
Thank you for letter, dated 2nd July 1996. Please accept
my congratulations on your appointment as Chief Minister of
Tamil Nadu. Our closed historical and cultural ties make for
strong, mutual trust and confidence which are fundamental for
good rapport between our businessmen. I welcome your
interest to strengthen Singapore-Tamil Nadu economic relations.
Your letter to me is a strong assurance to Singapore of your
commitment to bring Tamil Nadu closer to Sigapore. Since
India's economic liberalisation in 1991, Singapore has been
taking an active interest in Tamil Nadu. One of our three
Singapore Trade Development Board Offices in India is based
in Madras. Today, the Foreign Investment Promotion Board
(FIPB) has approved 215 Singapore economic projects, of which
36 are joint ventures with the Tamil Nadu based companies.
Your determination to put in place pro-business and investors-
friendly economic policy will encourage not only Singapore
Companies, but more international investors to put a higher
stake in Tamil Nadu's economic development.
I look forward to closer relations between Singapore and
Tamil Nadu for the mutual benefit of our two people.
Sd/- GOH CHOK TONG,
Prime Minister of Singapore.
என்று நாம் மகிழத்தக்க ஒரு கடிதத்தை சிங்கப்பூர் பிரதமர் நமக்கு எழுதியிருக்கிறார் என்றால் பிரதமர் கடிதம் எழுதினார் என்பது அல்ல, இந்த 2 மாத காலத்தில் 3 மாத காலத்தில் - தொழில் வளம் மிக்க வளமான தமிழகம் வலிவான இந்தியா என்று முழங்குகின்ற மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நினைவூட்டுகிறேன் - வளமான தமிழகமாக தமிழகத்தை ஆக்குவதற்கு எவ்வளவு முயற்சிகளில் எல்லாம் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டத்தான் இந்தக் கடிதத்தை நான் இங்கே படித்துக் காட்டினேன். (மேசையைத் தட்டும் ஒலி).
'பிலினெஸ் இந்தியா' என்று ஒரு பத்திரிகை. அது ஒரு கட்டுரை ஜூன் மாதம் 94 ஆம் ஆண்டு எழுதியது. அதிலே முகப்பில் - அந்தக் கட்டுரையின் முகப்பில் குறிப்பிடுவது : அதை தமிழிலேயே சொல்கிறேன். அமைப்பு ரீதியாகப் பார்த்தால் தொழில்
தொடங்க நாட்டிலேயே தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலம் ஆகும். சாலைகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. 4,010 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இரண்டு பன்னாட்டுத் துறைமுகங்கள் உள்ளன. ஒரு பன்னாட்டு விமான நிலையமும். 5 உள்நாட்டு விமான நிலையங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. அதுமட்டுமல்ல, 4366 வங்கிக் கிளைகள் தமிழகத்தில் உள்ளன. 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. (இது 72-ஆம் வருடமே சாதிக்கப்பட்ட ஒரு காரியம் ஆகும்).
நகர்ப்புற வளர்ச்சி 36 சதவிகிதமாக உள்ளது என்று சொல்லிவிட்டு இவ்வளவுக்கும் மேலே ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட் என்ன சொன்னார் என்பதைத்தான் பத்திரிகை எழுதுகிறது. Says one well-known Industrialist, "We do not mind corruption so long as it delivers the goods. In the case of the AIADMK Government, the irritant is that it fails to honour its commitment for which we have already paid a fee."
கரப்ஷனைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை; கொடுத்து காரியம் நடக்கவில்லையே என்பதுதான் கஷ்டமாக இருக்கிறது என்று ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட் சொன்னார் என்பதாக பிலினெஸ் இந்தியா எழுதுகிறது.
