தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 4
பகுதி 2 · 2 / 4
14-ஆவதாக, Sterling Dungston Products கடலூரில் ரூ. 45 கோடி செலவில் கூட்டுத் துறையில் தொடங்கப்படுகின்ற தொழிற்சாலை ஆகும். டங்ஸ்டன் பெளடர் பாதுகாப்புத் துறைக்குப் பெரிதும் பயன்படுகின்ற ஒன்று. கொரிய நிறுவனம் ஒன்றோடு தொழில் நுட்ப ஒப்பந்தத்திற்கான பேச்சுக்கள் விரைந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட இருக்கின்றது, ரூபாய் 45 கோடி முதலீட்டில்.
இது தவிர, அண்மையில் மேலும் 3 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பெரிய தொழில் திட்டங்கள்.
அனிலைன் திட்டம் - ரூபாய் 110 கோடி செலவில் இராணிப் பேட்டையில் கூட்டுத் துறையில் அனிலைன், நைட்ரிக் அமிலம், அமோனியம் நைட்ரேட் போன்ற இரசாயனப் பொருள்களைத் தயாரிக்கின்ற தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலைக்காக சில இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
16-ஆவதாக “மினரல்செபரேஷன் பிளாண்ட்” என்ற தொழிற் சாலை ரூபாய் 20 கோடி முதலீட்டில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நடத்தும் தொழிற்சாலை. சிதம்பரனார் மாவட்டம், குதிரைமொழித்தேரியில் அமையும் தொழிற்சாலை இது. தோரியம், இல்லுமினேட் போன்ற பொருட்கள் இதில் உற்பத்தியாகும்.
மத்திய அரசின் நிறுவனமான இந்தியன் ரேர் எர்த்-உடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
17-ஆவதாக டைடானியம்-டை-ஆக்ஸைடு என்ற தொழிற் சாலை, ரூபாய் 140 கோடி செலவில், கூட்டுத் துறையில், அதே குதிரைமொழித்தேரியில் தொடங்கப்பட இருக்கிறது.
ஆக, 15 மாத காலத்தில் 15 தொழிற்சாலை வந்ததா என்ற கேள்விக்கு, அறிவித்து, நடைமுறையிலே இல்லாத தொழிற்சாலைகளையும், அறிவித்து உடனடியாகத் தொடங்கிய தொழிற்சாலைகளையும், இந்த ஆண்டு உற்பத்தி தொடங்குகிற தொழிற்சாலைகளையும், உற்பத்தி அடுத்த ஆண்டு தொடங்குவதாக இருந்தாலும் இந்த ஆண்டு கட்டுமானப் பணிகள், இயந்திரங்கள் இறக்குமதி செய்கிற பணிகள் இவைகள் எல்லாம் முடிவுறுகின்ற பணிகளுமாக 17 தொழிற்சாலைகளுக்கான பட்டியலைத்தான் இந்த மாமன்றத்திலே உங்கள் முன்னால் நான் வைத்திருக்கிறேன்.
அடுத்து, இங்கே பேசிய மாண்புமிகு உறுப்பினர் மணி அவர்களும், மற்றவர்களும் மத்திய அரசு சார்பிலே அதனுடைய அனுமதியைப் பெற்றும், மத்திய அரசு முதலீடு செய்கின்ற வகையிலும் பல தொழிற்சாலைகளை நாம் தமிழகத்திற்குப் பெற்றாக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். மத்திய அரசு முதலீடு செய்கின்ற பல தொழிற்சாலைகள் தமிழகத்திற்குப் பெற்றாகவேண்டுமென்ற கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள், அதிலும் இந்த அரசு மெத்தனமாக இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய துணைத்தலைவர் அவர்கள் பேசும்போது கூட, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் - குறிப்பாக, நாகையிலே அந்தப் பகுதியிலே அமைய வேண்டுமென்ற கருத்தை எடுத்துச் சொன்னார்கள். நேற்றும், இன்றும் பேசிய கட்சிகளின் தலைவர்களும், கட்சிகளின் உறுப்பினர்களும் தமிழகத்திலே எங்கெங்கே, இந்த மாநிலம் முழுவதும் தொழில்கள் பொங்கிப் பெருகவேண்டுமென்ற சாத்தியக் கூறுகளையெல்லாம் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
நாம்
ஒவ்வொரு தொழிலுக்கும் மத்திய அரசினுடைய உதவிகளைப் பெறவேண்டிய தொழில்களாக இருந்தாலும், அனுமதியைப் பெற வேண்டிய தொழில்களாக இருந்தாலும், அதுகுறித்து கவலைப்படாமலேயோ, அல்லது சோர்வாகவோ, அலட்சியமாகவோ, அக்கறையற்ற தன்மையிலோ இருந்திடவில்லை என்பதை நான் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், சதர்ன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமும் ஆகிய இரண்டும் இணைந்து உருவாக்கியுள்ள ‘நாட்கோ’ நிறுவனம், மணலியில் 1356 கோடி ரூபாய் செலவில், பெட்ரோலிய ரசாயனப் பொருட்களைத் தயாரிக்கும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தக் கருதி, அதற்கான நிலத்தையும் கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாகிவிட்டது. அது குறித்து தொடர்ந்து மத்திய அரசோடு நேரிலும், நாங்கள் கலந்து பேசுகிறோம், கடிதம் மூலமாகவும் அவர்களுக்கு எழுதுகிறோம்.
அண்மையில் கூட, 2-4-1990-ல் இந்தியப் பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில், இந்த National Aromatics and Petrochemicals Corporation சார்பாக அமைய வேண்டிய தொழிற்சாலையைப் பற்றி - எழுதும்போது, "While the feasibility report was submitted in July 1989, the capacity of the project was enhanced to 2 lakhs tonnes of P.P.A. as per Government Policy, and the report was revised with a total investment cost of Rs.
1,356 Crores in September 1989. Environmental Clearances both from State and Central Governments have been obtained and the project is pending before the P.I.B. for clearance என்று குறிப்பிட்டுவிட்டு, உடனடியாக அதற்கான அங்கீகாரத்தை வழங்கவேண்டுமென்று நான் கேட்டு, "As the project does not depend on the Government of India for financed and as it is, a major venture in our State after more than a decade, I would be grateful, if you could use your good offices for the early clearance of the said project by the P.I.B.
and others, without further postponement which would only result in avoidable cost escalation. . . . . என்றும் பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு “உடனடியாக அது கவனிக்கப்படும்” என்று பதில் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது.
அதைப்போல, எரிவாயு பற்றி காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். நேற்றைய தினம் நம்முடைய வெள்ளிங்கிரி அவர்களும் அதைப்பற்றிக் குறிப்பிட்டார்கள். இங்கே பேசிய உறுப்பினர்கள் யாரும் அதைக் குறிப்பிடத் தவறவில்லை. எரிவாயுவினுடைய பயன்களையும், அதை நாம் பெற எடுத்துக்கொள்ளவேண்டிய முயற்சிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலே பல்வேறு பெட்ரோலிய ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளை அமைப்பதற்கு ஏதுவாக, தென்னகத்திற்கான எரிவாயு இணைப்பு வேண்டுமென்று, ஏற்கெனவே ராஜீவ் காந்தி அவர்களுடைய ஆட்சிக்காலத்திலேயே, அந்தத் துறையினுடைய அமைச்சர் இங்கே ஒரு விழாவிற்கு வந்தபோது, நானும் அதில் கலந்துகொண்டபோது, அதைக் குறிப்பிட்டு “நல்ல யோசனை, அதைப் பற்றி நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்கள்.
தொடர்ந்து அந்த ஆட்சி மாறி, தேசிய முன்னணி ஆட்சி வந்த பிறகும் கூட, அதை நாங்கள் நினைவுபடுத்தி, திரு. குருபாதசாமி அவர்களை டெல்லியில் சந்தித்துப் பேசியபோதும், பிறகு அவர் சென்னைக்கு வந்தபோது என்னைச் சந்தித்தபோதும் அதை வலியுறுத்தியதன் அடிப்படையில், அவர் 6-4-1990-ல் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், "Please refer to your D.O. letter, dated 22-2-1990 regarding the laying of a Southern Gas pipeline from Bombay High.
I am glad to inform you that we have decided to constitute and Inter-Ministerial Committee to examine the issues pertaining to the construction of Southern Gas Grid. We are anxious that the available gas is utilised as quickly as possible. This matter would therefore continue to receive our highest priority என்று - அவர்கள் உடனடியாக பதில் - எழுதியிருக்கிறார்கள். நான், பதில் எழுதியதற்காகப் பாராட்டுகிறேன்.
உடனடியாக முயற்சிகளைத் தொடர்ந்து செய்து நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு மத்திய அரசின் அமைச்சர்களும் ஆவன செய்ய வேண்டும் என்று இந்த மாமன்றத்தின் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.
சேலம் இரும்பாலை பற்றிக்கூட இங்கே அனைவரும் கேட்டிருக்கிறார்கள். காலையில் நம்முடைய திரு. ரமணி அவர்கள் இங்கு பேசினார்கள். திரு. பாண்டியன் அவர்கள் இங்கே பேசினார்கள். நம்முடைய காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் அவர்கள் பேசினார்கள். எல்லோருமே பேசியிருக்கிறார்கள். சேலம் இரும்பாலைத் திட்டத்திற்காக இந்த ஆட்சி தொடர்ந்து வாதாடிக் கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி இந்தத் திட்டத்திற்காக வாதாடவில்லை என்ற ஒரு தவறான பிரச்சாரம் சில ஏடுகளில் இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சேலத்திலே இரும்பாலை வேண்டும் என்பதற்காக வாதாடி, போராடி, அதிலே வெற்றி பெற்று அன்றைக்கே 1971-ஆம் ஆண்டிலேயே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை யாரும் மறந்திருக்க இயலாது. ஆனால் அன்றைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த சேலம் இரும்பாலை நாம் நினைத்தவாறு அமையாமல் வேறுமாதிரி அமைந்துவிட்டது. எனவேதான் இப்போதுகூட நான் இந்தியப் பிரதமர் மாண்புமிகு திரு. வி. பி. சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
"Dear Prime Minister,
On the basis of the representation made by me to the late Thirumathi Indira Gandhi, the Salem Steel Plant was approved in 1970. Accordingly in original detailed project report it envisaged the manufacture of stainless steel, cilicon steel and special steel and installation of hot rolling and cold rolling facilities. However only a cold rolling complex for the production of 32,000 tonnes of stainlees steel sheet were commissioned in 1981 in the first stage.
The original conception of an integrated steel plant has thus been grossly diluted and what has been installed in Salem is largely in the nature of a Stainless Steel Rolling Mill. Our Government has been representing from time for the setting up hot rolling facilities to enable the upstream integration of this plant. We are aware that considerable investment is taking place in North India in
regard to modernistion of steel plant and a case for further investment in the existing facilities in Salem in order to realize the original conception should not be delayed any further. The Durgapur Steel Plant has been modified at a considerable cost to make stainless steel continuous cast slabs which are now being sent all the way to Finland for rolling into hot roll coil. With the setting up of hot rolling facilities at Salem, there is scope for considerable saving of foreign exchange.
The project will provide direct employment to 2500 persons and will also generate considerable indirect employment in the ancilary and tertiary sectors. I will be grateful if you can give this your sympathetic consideration and have the project included in the Eighth Plan. On our part we shall take all steps to meet the additional power requirement for the project once the detailed time-schedule is worked out."
என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அவர் துறையினுடைய அமைச்சருக்கு அனுப்பி கலந்து பேசி அந்தத் துறையினுடைய அமைச்சர் திரு. தினேஷ் கோஸ்வாமி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், "Please refer to your letter of January 22, 1990 in regard to the establishment of hot rolling facilities at Salem Steel Plant. I appreciate and share your concern in the matter. The growth of Salem Steel Plant has been engaging the attention of the Government.
While the work of doubling the capacity of the Plant by installation of a second Spensioner Mill is currently in progress, the question of installing hot rolling facilities at Salem as well as the proposal to include it in the Eighth Plan are also under the active consideration of the Government. We shall keep in mind your concern in coming to a final decision."
என்று அந்தத் துறையினுடைய அமைச்சர் எழுதியிருக்கிறார். அதைப் போலவே, மணலி உரத்தொழிற்சாலையினுடைய விரிவாக்கத்திற்காகவும் நான் மத்திய அரசுக்கு, வேளாண்மைத்துறை அமைச்சருக்கு, துணைப் பிரதமர் திரு. தேவிலால் அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு, 10-4-1990-ல் அவர் எழுதிய பதில் கடிதத்தில் "Please refer to your letter, dated 22nd February, 1990 regarding the Schemes of Madras Fertilisers Limited. As regards the expansion of the
existing Fertilisers Plant of M.F.L., the Company was advised to prepare a detailed project report for its revamping modernisation and also for its replacement by a new Plant. In this context a detailed project report for revamping modernisation of the existing plant of M.F.L. has been received. It contains two alternatives. While the first alternative is intended to prolong the life of the existing plant at an investment of Rs.105 crores approximately, the second alternative involving an expenditure of about Rs.
240 crores will improve the existing capacity and production. Both the alternatives are being examined. Devi Lal - என்று அவர் கடிதம் எழுதியிருக்கிறார். இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டு தமிழகத்தின் தொழில் வளம் இந்த வயதான காலத்தில் நம்முடைய ராஜேந்திரன் அவர்கள் சொன்னதைப் போல, அவரைப் போல, இளைஞராகவும் இல்லாமலே, முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்டத்தான் மத்திய அரசோடு தொடர்ந்து நேரிலும், கடிதப் போக்குவரத்து மூலமாகவும், மத்திய அரசினுடைய அனுமதியை, இங்கே பெரும் தொழில்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றும், மத்திய அரசு மூலதனத்தோடு இங்கே பல தொழில்கள் உருவாக வேண்டும் என்றும் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.
அதைப் போலவே, கரும்புச் சக்கையைப் பயன்படுத்தி ஆண்டு தோறும் ஒரு இலட்சம் மெட்ரிக் டன் செயற்கைத்தாள் மற்றும் ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எழுது காகிதமும் செய்கின்ற திட்டம் ஒன்றை, தென்னாற்காடு மாவட்டத்திலே நிறுவுவதற்கான ஒரு முயற்சி இருப்பதை நான் கொள்கைக் குறிப்பிலே குறிப்பிட்டிருக்கிறேன். இப்போதும் அதைப்பற்றி கூறவிரும்புகிறேன். நம்முடைய நண்பர் திரு. உகம்சந்த் அவர்கள் சொன்னார்கள், 240 கோடிக்கு அப்போது தொழிற்சாலை வைத்தபோது அவ்வளவா என்று கேட்டார்களே, இப்போது 800 கோடி ரூபாயா என்று கேட்டார்.
இடையில் 10 ஆண்டுக் காலம் உருண்டோடி விட்டதை மறந்து விடக்கூடாது. நம்முடைய எம்.எல்.ஏ-க்களுடைய சம்பளமே எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று எண்ணிப் பார்த்தால் பணவீக்கம் எந்த அளவுக்கு நம்மைப் பாதித்து இருக்கிறது, என்பதை நாம் உணர வேண்டும். (குறுக்கீடு) சிரிப்பு.
அதை சட்டமன்ற விவாதத்தின்போது, அவை முன்னவருக்கு விட்டு விடலாம். (சிரிப்பு).
எனவே, 10 மடங்கு, 20 மடங்கு இன்றைக்கு செலவுகள் மதிப்பீடுகள் உயர்ந்திருக்கிற காரணத்தினாலேதான், அன்றைக்கு 240 அல்லது 250 கோடி ரூபாயிலே ஒரு தொழிற்சாலை உருவானது என்றால், இன்றைய தினம் 800 கோடி ரூபாய் அதற்குத் தேவைப்படுகிறது. இந்தத் தொழிற்சாலை, தென்னாற்காடு மாவட்டத்திலே, எந்தப் பகுதியில், எந்த இடத்திலே என்று இன்னமும் நாம் நிர்ணயிக்கவில்லை. அதற்குரிய ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மத்திய அரசோடும் அதற்கான தொடர்புகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம். எனவே ஒரு பெரிய காகிதத் தொழிற்சாலை, தென்னாற்காடு மாவட்டத்திற்குத் தேவை என்பதையும், அதை விரைந்து முயற்சி செய்து ஓரிரு ஆண்டுகளிலே, அந்த மாவட்டத்திலே அமைப்போம் என்பதையும் நான் இந்த மாமன்றத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்க்கரை ஆலைகளைப் பற்றி இங்கே பேசப்பட்டது. நம்முடைய இலக்கியச் செல்வர் அவர்கள் கூட சொன்னார்கள். நீங்கள் கூட்டுறவுத் துறை “கோவாப்ரேடிவ் செக்டார்” என்று வைத்துவிட்ட காரணத்தால், தனியார்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று விடுகிறார்கள் என்று சொன்னார்.
குறிப்பாக தமிழ்நாட்டிலே, போதுமான அளவிற்கு சர்க்கரை ஆலைகள் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஓரிரு ஆலைகள் தனியார் ஆலைகள், வெளியே சென்றால்கூட, கவலை இல்லாத அளவுக்கு, பொதுத் துறையிலும், தனியார் துறையிலும், கூட்டுறவுத் துறையிலும், இங்கே சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன இப்பொழுதே மொத்தமுள்ள சர்க்கரை ஆலைகள் 29. தனியார் துறையிலே 14 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. கூட்டுறவுத் துறையில் 12 ஆலைகள் இருக்கின்றன.
பொதுத் துறையிலே 3 ஆலைகள் இருக்கின்றன. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 9 ஆலைகளில் 5 தனியார் ஆலைகளையும், 4 கூட்டுறவு ஆலைகளையும் அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு, முடிவும் மேற்கொள்ளப்பட்டது. இந்த 5 தனியார் ஆலைகளில், சக்தி சர்க்கரை ஆலை, சிவகங்கை, தரணி சர்க்கரை ஆலை, வாசுதேவநல்லூர் இப்போது சொன்னார்களே - யாரோ “என்.ஆர்.ஐ.”
பெர்சன்களையெல்லாம்
துரத்துகிறோம் என்று - அந்த பெரியசாமி அவர்கள் நடத்துகின்ற ஆலைதான் தரணி சர்க்கரை ஆலை. நியாயமாக நடத்தினால் அதில் தலையிடமாட்டோம். அநியாயமாக நடைபெற்றால் அங்கே இந்த அரசுத் தலையிட தயங்காது என்பதற்கு இது ஓர் உதாரணம். பெரியகுளம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, திருவாரூரான் சர்க்கரை ஆலை, பூண்டி சர்க்கரை ஆலை போன்ற தனியார் ஆலைகளுக்கு அனுமதிக்கப்பட்டும் அவை இன்னும் ஆரம்பமாகவில்லை என்பதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அதுபோல 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள். சிதம்பரத்தில் சேத்தியா தோப்புக்கு ஒன்று, எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பெயரில் அது தொடங்கியிருக்கிறது. அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இன்னும் சில நாட்களில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த மே 13 ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டு விழாவிற்குச் செல்ல விருக்கிறேன். அதற்கான ஒப்பந்தங்கள் எல்லாம் செய்யப்பட்டு அந்த ஆலை தொடங்குகிற நிலைக்கு இன்றைக்கு வந்திருக்கிறது.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நவம்பர் 1990-ல் தொடங்கும். அறந்தாங்கி கூட்டுறவு சர்க்கரை ஆலையைப் பற்றிக் கேட்டார்கள். அங்கு தண்ணீர்ப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிற காரணத்தால் அது குறித்து ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும், தொடர்ந்து அம்பாசமுத்திரம், சின்ன சேலம், போளூர், கும்பிடிப்பூண்டி போன்ற வட்டங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நிறுவ மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது, என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து, மின்சார உற்பத்தியைப் பற்றி பலரும் இங்கே பேசினார்கள், நீண்டநேரம் காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்கள் இங்கே பேசினார்கள். இந்த ஆண்டு நிச்சயமாக மின்சாரத் துறை குறித்த நிதிநிலை அறிக்கை அல்லது ஓர் அறிக்கை இந்த அவையிலே வைக்கப்பட்டு விவாதிக்கப்பட இருப்பதால் அதிலே அப்போது விரிவாகப் பேச முடியும். என்றாலும் மாண்புமிகு உறுப்பினர் பேராசிரியர் பொன்னுசாமி அவர்கள் அன்றைக்கு ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார்கள்.
நாம் மின்சாரத்திற்கு ஒதுக்கியுள்ள தொகை கடந்த ஆண்டுகளை விட
மிகக் குறைவானது என்று குறிப்பிட்டார்கள். 1987-88 ஆம் ஆண்டில் மின்சாரத்திற்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 407.63 கோடி என்று இருந்தது. ஆனால் செலவிடப்பட்ட தொகை ரூ. 372.29 கோடிதான். 1988-89 ஆம் ஆண்டில் அப்போது திட்டத்திலே, இந்த அரசின் அப்போதைய ஆண்டு திட்டமே 1,457 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்புக்குள்ளே அடங்கியதாக மின்சாரத்திற்கு ரூ. 502 கோடி என்று சொல்லப்பட்டது. ஆனால் 1457 என்ற திட்டமே கூட 1202 கோடி ரூபாய்க்கு சுருங்கிவிட்ட காரணத்தால் இந்த 502 கோடி ரூபாய் மின்சார ஒதுக்கீடு கூட 352.53 கோடி ரூபாய் என்ற அளவு சுருங்கிவிட்டது.
இந்த 352 கோடி ரூபாயோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது நாம் 1990-91-ல் மின்சாரத்திற்கு என 457 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது அதிகமானது என்கிற உண்மை தெளிவாகத் தெரியும். அது மாத்திரமல்லாமல், 1990-91-ல் கூடுதலாக 287 மெகாவாட் உற்பத்தி செய்ய நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு 1989-90-ல் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திட்டங்களின் வாயிலாக 235 மெகாவாட்ஸ், மத்திய அரசு செயல்படுத்துகின்ற திட்டங்களின் வாயிலாக 118 மெகாவாட்ஸ், ஆக மொத்தம் 353 மெகாவாட்ஸ் உற்பத்தித் திறனை அதிகரித்தும், 1988-89 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி மற்றும் இதர நிலையங்களிலிருந்து பெறப்பட்ட மின்சாரம் எல்லாவற்றையும் சேர்த்து, மொத்தம் 17,585 மில்லியன் யூனிட்தான் வழங்கப்பட்டது.
1989-90-ல் பல இடையூறுகளுக்கு இடையிலே 18,672 மில்லியன் யூனிட் என்ற அளவுக்கு அதனை உயர்த்தினோம். 1990-91-ல் 21,089 மில்லியன் யூனிட் என்ற அளவுக்கு அது எட்டும் என்று எதிர்பார்க்கின்றோம். 8-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 300 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திறனை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அவை உறுப்பினர்கள் அனைவருக்கும், ஒன்று நன்றாகத் தெரியும், வடசென்னை மின் நிலையம் அறிவிக்கப்பட்டு, இடத் தகராறு காரணமாக அது தொடங்கப்படாமல் இருந்தது. 500 கோடியிலே ஆரம்பிக்கப்பட வேண்டியது அந்தத் திட்டம். அந்த இடத்தகராறை இந்த அரசு வந்த பிறகுதான் தீர்த்து, இப்போது 700 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கின்ற
ஒரு நல்ல சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தும் குடியரசுத் தலைவர் அதைத் தொடங்கி வைக்க வந்ததும் உங்கள் அனைவருக்கும் மிக நன்றாகத் தெரியும். அதிலே இப்போது 420 மெகாவாட் மின்திறன் கொண்ட முதல் இரண்டு பிரிவுகளின் பணிகள் வேகமாக நடைபெற இருக்கின்றன. மேலும் 210 மெகாவாட் திறன் கொண்ட மூன்றாவது பிரிவை அமைப்பதற்கு இந்த ஆசியன் வளர்ச்சி வங்கியின் உதவியும் நாடப்பட்டுள்ளது. இந்த மின்நிலையம் இறுதியாக 2,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் உடையதாக இருக்கும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
(மேசையைத் தட்டும் ஒலி).
அடுத்து, நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்கள் டாமினைப் பற்றியும், கிரானைட்டைப் பற்றியும், அதிலே நடைபெற்ற தவறுகள் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன். எனவே, சுருக்கமாகத்தான் சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக மாண்புமிகு உறுப்பினர் திரு. பி. எச். பாண்டியன் அந்த அதிகாரியை இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களே, ஏன் என்று எல்லாம் கேட்டார்கள். தவறு எப்படி நடந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மாண்புமிகு உறுப்பினர் திரு. வெள்ளிங்கிரி பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். இந்த ஆண்டு நீங்கள் ஈட்டியிருக்கிற லாபம் உற்பத்தியால் வந்ததல்ல, விலையை உயர்த்தியதால் வந்தது என்றார்கள், அதிலே ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. ஆம், விலையை உயர்த்தினோம், எப்படி? வேண்டுமென்றே விலையைக் குறைத்து, தனியார் தருகின்ற விலையை விட அரசு நிறுவனம், பொது நிறுவனம், டாமின் நிறுவனம் விலையைக் குறைத்து அதன் காரணமாக ஊழல்கள் நடைபெற்ற காரணத்தால் அதற்கு ஓர் அதிகாரி அன்றைக்குக் காரணமாக இருந்த காரணத்தினால் பெரும் நஷ்டத்திற்கு இந்த நிறுவனம் உள்ளானது.
அந்த விலைகளை எல்லாம் சரி பார்த்து, கவர்னர் ஆட்சிக் காலத்திலே நடவடிக்கை எடுக்கப்பட்டது. கவர்னர் ஆட்சிக் காலத்திலே அந்த அதிகாரியினுடைய சுய உருவம் நவம்பர் மாதத்திலேதான் தெரிந்தது. நவம்பரிலே தெரிந்தவுடன், கவர்னர் ஆட்சியிலே நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்ன நடைபெற்றதென்றால், 1983-84 ஆம்
