சட்டமன்ற மேலவையில்
பகுதி 2 · 2 / 3
திரு மோகன் குமாரமங்கலம் அவர்கள் இங்கே வந்தார்கள். வந்தவர், நிலக்கரி கேட்டார்கள், அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார்;—கேட்டார்கள், அனுப்பி வைத்தேன் என்பது அவருக்குப் பெருமைதான். அதோடு முடித்திருக்கலாம். தமிழ் நாட்டில் நிலக்கரி தேவை என்று பத்திரிகையில் பார்த்தேன். உடனே அனுப்பச் சொன்னேன் என்று அவர் செய்தி தந்துவிட்டுப் போகிறார்.
மக்கள் என்ன கருதுகிறார்கள்? “இந்த அரசாங்கம் எந்த விதமான பொறுப்பையும் எடுத்துக்கொள்ளவில்லை, பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்துவிட்டு நம்முடைய திரு மோகன் குமாரமங்கலம் எவ்வளவு தாராள மனத்தோடு இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்” என்று மக்கள் எண்ணுகிறார்கள்.
திரு மோகன் குமாரமங்கலத்திற்குப் பெருமை வருகிறது. நமக்குச் சிறுமை வருகிறது என்றுகூட நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு பெரிய பிரச்சினையைப் பற்றி இந்த அரசு எந்தவிதமான கவனமும் செலுத்தாமல், பத்திரிகையைப் பார்த்து ஒரு மத்திய அமைச்சர் தெரிந்து
கொள்கிற அளவுக்கு நிலைமை வளர்ந்துவிட்டதே என்கிற அளவுக்கு ஒரு தவறான எண்ணம் மக்களிடத்தில் வந்தால், அதைக் கொண்டு அரசியல் இலாபம் தேட முனைவோர் அவர்கள் கிளம்பிவிட்டால், நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதி கெடுவதற்கான சூழ்நிலைகள் தன்னால் பிறந்து விடுகின்றன.
நான் சட்ட மன்றத்திலும், பேரவையிலும் அதுபற்றி மறுத்து அறிக்கை வெளியிட்ட பிறகும் கூட, எந்தத் திருத்தமோ அல்லது விளக்கமோ இதுவரை மத்தியிலிருந்து வரவில்லை. திடீரென்று ஒரு நாள் மத்திய அமைச்சர் திரு சி. சுப்பிரமணியம் அவர்கள், தமிழ் நாட்டிற்காக ஒதுக்கிய கைத்தறி நூல் இன்னும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டார்கள். நம்முடைய தொழில் அமைச்சர் திரு மாதவன் அவர்கள், அப்படி எதுவுமில்லை.
அவர்கள் ஒதுக்கவுமில்லை, நாம் எடுத்துக்கொள்ள மறுக்கவுமில்லை என்று பேரவையில் பதில் அளித்தார்கள். நான் இங்கேயும் அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறேன். அதற்குப் பிறகும் அவர்கள் அதற்கு ஒரு திருத்தம் சொன்னார்களா, விளக்கம் அளித்தார்களா என்றால் கிடையாது.
ஆருடம் பார்க்க முடியுமா?
இன்று காலையில் பத்திரிகையில் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடக் குறிப்பிட்டார்கள்; முழுமையாகக் குறிப்பிடவில்லையென்று நினைக்கிறேன்; அவர்கள் கூடச் சொன்னார்கள்; நம்முடைய மதிப்பிற்குரிய திரு சி. சுப்பிரமணியம் அவர்கள் நாடாளு மன்றத்தில் என்ன பேசுகிறார்கள்? சமயநல்லூர் அனல் மின் நிலையத்தை எடுக்காமல் இருந்திருந்தால் இந்த நிலைமைகள் ஏற்பட்டிருக்காதென்று சொல்கிறார். எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு விவரங்கள் தெரியாமல் இருக்கக்கூடிய நிலைமைகள் உண்டு.
ஆளும் கட்சியில் இருப்பவர்; அதுவும் அமைச்சராக இருப்பவர்; தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்தவர்; நாடாளு மன்றத்தில் ஒன்றைச் சொல்கிறார் என்றால்; வேண்டுமென்றே சொல்கிறாரோ, இங்கே தன் கட்சிக்கு அரசியல் இலாபம் தேடச் சொல்கிறாரோ என்று நான் சந்தேகப்பட்டால் அது என்னுடைய குற்றமல்ல; அவருடைய குற்றமே தவிர வேறு யாருடைய குற்றமுமல்ல. சமயநல்லூர் அனல் மின் நிலையத்தை விற்றுவிட்டார்கள். இந்த நிலையைக் எதிர்பார்த்திருக்க வேண்டுமென்று சொல்கிறார்.
சமயநல்லூரில் அந்த அனல் மின் நிலையத்திற்கு கடைசியாக டெண்டர்களை முடிவுக்கு விடப்பட்டது 1972 பிப்ரவரி மாதம். இப்பொழுது 1973 மார்ச் மாதத்திலே நாம் இருக்கிறோம். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்காலம் பரிபூரண
மாக முடிந்துவிட்டது. 1972 பிப்ரவரியில், இப்படி மழை தட்டுப்பாடு வரும்; தென்மேற்குப் பருவக் காற்று மோசம் செய்யும்; ஆகவே குந்தா போன்ற நீர் மின் நிலையங்களில் நமக்குத் தண்ணீர் கிடைக்காது; பல்லாயிரக் கணக்கான இலட்சம் கன அடி தண்ணீர் இருக்க வேண்டிய குந்தாவில் 1,000, 1,500 இலட்சம் கன அடி தண்ணீர்தான் கிடைக்கும் என்றெல்லாம் ஆருடம் தெரியுமா? ஜோஸியம் பார்க்க முடியுமா? அப்படியானால் சொல்லவேண்டியதுதானே முன்கூட்டியா?
அப்படி ஆருடத்தில் சொன்னாலும் நம்பிக்கை கொண்டிருக்க முடியுமா?
30 மெகாவாட் அல்ல: 14 மெகாவாட்
எதிர்பாராத வகையில் ஒன்று ஏற்பட்டது. 55 இலட்சம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு சமயநல்லூர் அனல் மின் நிலையத்தில் நஷ்டம் ஏற்பட்டது. 1968-ஆம் ஆண்டு அதை என்ன செய்யலாமென்று ஆராய ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அந்த நிபுணர் குழு அதை மூடி விடலாமென்று யோசனை கூறியது. 55 இலட்சம் ரூபாய் அவசியமாகச் செலவாகிறது; 14 மெகாவாட் அதிகபட்சம் அங்கே கிடைக்கிறது; அந்த 14 மெகாவாட் மின்சாரம் என்பது ஒரு நாளைக்கு 1 இலட்சம் யூனிட்டுத்தான்.
225 இலட்சம் யூனிட் தேவையப்படுகிற தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு அந்த ஒரு இலட்சம் யூனிட்டைப் பற்றிக் கருதிப்பார்க்க முடியாது. ஒரு ஆண்டுக்கு முன் நடைபெற்ற காரியம் அது. வேறு எந்தத் தவறும் நடைபெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் தனியாருக்குக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை கூட அல்ல. 1970-ஆம் ஆண்டில் கூட்டுப் பஞ்சாப் மாநிலத்தினுடைய மின் வாரியத்திற்கு அதை நாம் தந்துவிடச் சம்மதித்தோம். அவர்களும் பெற்றுக்கொள்ளச் சம்மதித்தார்கள்.
முதலில் 40 இலட்சம் ரூபாய் என்று பேசி முடித்து, 42 இலட்சம் ரூபாய்க்கு எடுத்துக்கொள்ளுங்களென்று கேட்டோம். பஞ்சாப் மின் வாரியத்திலிருந்து 9—7—1970-ல் சொன்னார்கள்.
என்று 9—9—70-ல் பஞ்சாப் மின் வாரியம் கடிதம் எழுதியது. பிறகு அவர்களே, 6—8—71-ல் இன்னொரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில்,
என்பதாக அவர்கள் எழுதிவிட்டார்கள். தனியார் யாருக்கும் தர வேண்டுமென்ற எண்ணம் நமக்குக் கிடையாது. அதற்குப் பிறகு டெண்டர்கள் விடப்பட்டது. டெண்டர்கள் விட்டதில் நாம் அதற்குப் போட்ட ‘புக் வேல்யூ’ இருக்கிறதே. அதை எட்டுகின்ற அளவுக்கு டெண்டர்கள் வரவில்லை. மறுபடியும் டெண்டர்கள் விடப்பட்டு, 59 இலட்சம் ரூபாய் டெண்டர்—அதுதான் உயர்ந்த டெண்டர்—அவருக்குத் தரப்பட்டது. திரு சி. சுப்பிரமணியம் என்ன சொல்கிறார்?
14 மெகாவாட் அதிகபட்சம் தரக்கூடிய அந்த அனல் மின் நிலையம் 30 மெகாவாட் தரக்கூடியது; பல இலட்சம் யூனிட்டுகளை தரக்கூடியதென்று அவர் சொல்லியிருக்கிறார். இப்படிச் சொல்வதன் மூலமாகப் பிரச்சினையை அணுகுவதற்கு அக்கறை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, மக்களைத் திசைதிருப்பி விடுவதற்கு அக்கறை எடுத்துக் கொள்கிறாரோ என்பதற்காகத்தான் நான் வருத்தப்படுகிறேன். மத்தியிலிருந்து இப்படி, அமைச்சர்கள் இங்கு வந்தாலும், வர நேரம் இல்லாவிட்டால் அங்கேயே உட்கார்ந்துகொண்டும் தமிழ் நாட்டில் தங்கள் பேச்சின் மூலமாக ஒரு கலவரச் சூழ்நிலையை, மக்களுக்கு இந்த அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்த வேண்டுமென்று முனைவது உள்ளபடியே வருந்தத் தக்கதென்று இதுவரை சொன்னேன்;
இப்போது சொல்கிறேன்; அவைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதென்று நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
விசாரணைக் குழு
இந்த அவையில் கடைசியாகப் பேசிய நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர்களும், நேற்றைய தினம் பேசிய சில உறுப்புச் செல்வர், தமிழரசுக் கழகத்தின் தலைவர், இந்த மேலவையினுடைய துணைத்தலைவர், திரு ம. பொ. சி. அவர்களும், நண்பர் திரு ஈஸ்வரமூர்த்தி அவர்களும், திரு சுவாமிநாதன் அவர்களும் விசாரணைக் குழு பற்றி இங்கே பேசினார்கள். விசாரணைக்குழு பற்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் பல கருத்துக்களைச் சொன்னார்கள்; திரு சுவாமிநாதன் அவர்களும் சொன்னார்கள்.
நான் முதலில் அவர்களைக் கேட்க விரும்புவதெல்லாம், இந்தக் கருத்துக்களையெல்லாம் திரு மாதவன் அவர்களுடைய தலைமையில் அமைந்திருக்கிற அந்தப் பொதுக்குழுவில் போய்ச் சொல்லவேண்டுமா? அது என்னுடைய முதல் கேள்வி. இப்போது பதில் சொல்ல வேண்டாம். நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள் என்பதற்காகச் சொல்கிறேன். அந்த மசோதா வேண்டாமென்று சொல்லவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் 3 ஆண்டுக் காலம் தண்டனையென்று இருக்கிறதே, அதற்காகத்தான் அந்த மசோதா வேண்டாமென்று அவர்கள் சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
பொறுக்குக் குழுவிலே அமர்ந்து, எதை எதை வைத்துக் கொள்ளலாம், எதை
எதை விலக்கிவிடலாமென்று அங்கே சொல்கிற உரிமை அனைவருக்கும் இருக்கிறது. பொறுக்குக் குழுவில் வெளி நடப்புச் செய்வதைவிட, அவர்கள் சொன்னவைகள் அதில் எடுபடாவிட்டால், பிறகு மறுப்பு உரைக்கின்ற உரிமையும் எதிர்க்கட்சித் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இருக்கிறது. அதை நிறைவேற்றாமல்; இதுவே கறுப்பு மசோதா, ரெளலட் சட்டம் என்றெல்லாம் சொன்னால் ‘ஓஹோ, ரெளலட் சட்டம் என்றால் இதுதான் போலும்’, என்று மக்கள் எண்ணிக்கொள்வார்.
மாண்புமிகு அங்கத்தினர் ஆறுமுகசாமி அவர்கள் சொல்வதைப் போல, நாம் மக்களைப் பயிற்றுவிக்க வேண்டும். இந்த மசோதாவை ரெளலட் சட்டம் என்று சொல்லிவிட்டால், ரெளலட் சட்டம் என்றால் என்ன என்று மக்கள் எண்ணும்போது, இதுவரையில் ரெளலட் சட்டத்தைப் பற்றிப் படிக்காத மக்கள், ‘இப்படி ஒரு நீதி விசாரணைக் குழு போடுவது தான் ரெளலட் சட்டம் போலும்’ என்றுதான் நினைப்பார்கள்.
அந்தக் காலத்திலே அப்படித்தான் ஒரு சட்டம் போட்டான் போலும் என்று மக்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். ஆகவே மக்களைச் சரியாகப் பயிற்றுவிக்க வேண்டும்.
அந்தச் சட்டம் தெரியுமா?
நான் ஏன் இதைச் சொல்லிக் கொள்கிறேன் என்றால் இந்த மசோதாவை மறுத்து வெளியேறியவர்களில் ஆளும் காங்கிரசைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தான்—ராஜஸ்தானத்திலும் இருக்கின்றார்கள்—மராட்டியத்திலும் இருக்கின்றார்கள். இங்கே நம்முடைய தமிழ் நாட்டிலே போடப்பட்டிருக்கின்ற மசோதாவில் அவர்கள் சொல்வது போலக் குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால் என்றெல்லாம் கூட இல்லை. Punishment for false, frivolous, fictitious complaint என்ற தலைப்பில்,
என்று நம்முடைய இந்த செலக்ட் கமிட்டியிலே இருக்கின்ற இந்தச் சட்ட வரைவில் நாம் குறிப்பிடுகின்றோமே. ராஜஸ்தானத்தில் ஆளும் காங்கிரஸ் அவர்களுடைய அவசரச் சட்டம் “First Published in Rajpatra” என்கிற தலைப்பில்—ஃபர்ஸ்ட் பப்ளிஷ்ட் இன் ‘ராஜபத்ரா’—‘ராஜ பத்ரா’—என்று தொடங்க என்று சொல்லப் படுகிறது—எக்ஸ்ட்ரா ஆர்டினரி பார்ட் 4, டேட்டட் 25-1-1973-ல் அதிலேயும் இதுதான் இருக்கின்றது, 13-வது பிரிவில்
இப்படி இருக்கின்றது ராஜஸ்தானத்தில் உள்ள சட்டத்தில். மராட்டியத்தில் உள்ள சட்டத்திலும் இதே பிரிவு இடம் பெற்று இருக்கின்றது. இதிலே வேடிக்கை என்னவென்றால், மராட்டியத்திலும் ராஜஸ்தானத்திலும் உள்ள சட்டத்தில் அமைச்சர்களும், இது போன்ற புகார்களுக்கு ஆட்படுத்தப்படுவார்கள் என்று இருக்கின்றது. அவர்கள் மீது விசாரணை நடந்தாலும் அவர்கள் மீது குற்றம் சுமத்தலாம் என்று. ஆனால்,
அமைச்சர் என்றால் முதலவரைத் தவிர என்று இருக்கிறது ராஜஸ்தானத்தில், மராட்டியத்திலும் அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டிலே முதலமைச்சரையும் சேர்த்துக் குற்றம் சாட்டலாம் என்று சட்டம் கொண்டு வந்திருக்கின்றோம். ஆனால் இதைக் கறுப்பு மசோதா என்று பழைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆளும் காங்கிரசைச் சேர்ந்தவர்களும், அவர்களோடு இணைந்திருக்கின்ற—ராஜஸ்தானத்திலே இணைந்திருக்கின்ற, மராட்டியத்திலே இணைந்திருக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் நண்பர்களும் சொல்வது எனக்குப் புரியவில்லை.
பழைய காங்கிரஸ் காரர்கள் நாங்கள் அங்கே எல்லாம் ஆளவில்லை. ஆகவே நாங்கள் இந்தக் குற்றம் சாட்டுகிறோம் என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இதற்கு என்ன சொல்லுகின்றார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
நான் இன்னொன்றும் சொல்வேன். அங்கத்தினர் திரு சாமிநாதன் அவர்கள் சொன்னார்கள். விசாரணைக்குழு ஏன்? அவர்கள் வைத்த குழுவிற்குள்ளே நீங்கள் புகுந்து கொள்ளக்கூடாதா? என்று இது ஒரு வாதம். இதிலே நம்முடைய பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் கொஞ்சம் பரவாயில்லை. அவர்கள் அமைக்கின்ற குழு என்ன? ஒரு குழுவைப் போட்டு நீங்களே அதற்குள்ளே புகுந்துகொள்ளுங்களேன் என்று அவர்கள் சொல்லுகின்றார்கள்.
அண்ணாவின் பதில்
ஆனால் மற்றவர்கள், மத்தியிலே வைக்கின்ற விசாரணைக் குழுவிலே ஏன் நுழைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்கிறார்கள். இந்த விவாதம் இன்று நேற்று அல்ல, 1968-ஆம் ஆண்டிலேயே, உள் துறை அமைச்சராக இருந்த திரு சவான் அவர்கள் இருந்த காலத்திலேயே, அவர்கள் அண்ணா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியார்கள். அந்தக் கடிதத்தில் அவர்கள் ஒரு ‘லோக் பால்’ என்கிற அமைப்பை அங்கே நிறுவ வேண்டுமென்றும், அந்த அமைப்புக்கு எல்லா மாநிலங்களும் ஆதரவு தர வேண்டுமென்றும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள்மீது புகார் கூறப்பட்டால் அந்த மத்திய அமைப்பு விசாரிக்க உரிமை பெற்றதாக இருக்கும் என்றும் சொல்லி நம்முடைய முதலமைச்சர் அண்ணா அவர்களுக்கும் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த நேரத்தில் அண்ணா அவர்கள் சொன்ன கருத்து:
என்று அழுத்தம் திருத்தமாகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அப்போது திரு சவான் அவர்களுக்குத் தெரிவித்தார்கள். அது மாத்திரமும் அல்லது இன்றைக்குச் சுதந்திரா கட்சிக்காரர்கள் எல்லாம் கூடச்சேர்ந்து கொண்டு மத்திய சர்க்கார் வைக்கின்ற விசாரணைக் குழுவிலே நீங்கள் உங்களை நுழைத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். அப்படிச் சொல்லக்கூடப் பரவாயில்லை. மத்திய சர்க்காரே இவர்கள் மீது விசாரணைக் குழு போடு என்று சொல்கின்றார்களே, அவர்களுக்குச் சொல்லவேன், சுதந்திரக் கட்சியினுடைய முதலவராக ஒரிசாவிலே இருந்த திரு சிங்தேவ் அவர்கள் இந்த ‘லோக் பால்’ பற்றிச் சவானுக்கு என்ன எழுதினார் தெரியுமா?
அதாவது ஒரு அரசினுடைய முதலமைச்சர் நெறி முறை கோட்பாட்டின் பின்பற்றுவதை மேற்பார்வை செய்யும் பொறுப்பை, நாட்டின் பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ ஏற்றுக்கொள்வதென்பது அரசியல் அமைப்பின் அடிப்படைக்கு உகந்தது ஆகாது. நெறிவழுவாமல் நாட்டின் பிரதமர் செயல்படுகின்றாரா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்திற்கு எப்படி இருக்கின்றதோ—அது போலவே ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நெறிமுறை வழுவாமல் நடக்கிறாரா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பும் அந்த அதிகாரமும் படைத்தது அந்த மாநிலச் சட்ட மன்றம் தான்.
இது தான் சிறந்த ஜனநாயகப் பண்புகளை வளர்க்க ஏதுவாக இருக்குமென்று ஒரிசாவின் முன்னாள் முதலமைச்சர் திரு சிங்தேவ் அவர்கள் சவானுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதற்குப் பிறகு அண்ணா அவர்கள் மாநில அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி அதிலே ஒருமுடிவினை எடுத்து அதையும் சவானுக்கு அறிவித்தார்கள்.
அதாவது, உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது மாநில சுயாட்சித் தன்மைக்குப் பொருத்தமற்றது. ஆகவே இதை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று 2-6-1968-ல் திரு சவான் அவர்களுக்கு அண்ணா அவர்கள் கடிதம் எழுதினார். அதிலே அவர்கள் சொன்னார்கள்:—
என்று கடிதம் எழுதியுள்ளார். அதே நிலைதான் 1968-லிருந்து இதுவரையில் இந்த அரசு பின்பற்றி வருகிறதே அல்லாமல் ஏதோ விசாரணைக்குப் பயந்து நடக்கிறோம் என்று எண்ணி, என் மீதோ அல்லது மற்ற அமைச்சர்கள் மீதோ புகார்களை அங்கே எடுத்துச் சொல்லி, உடனேயே மத்திய சர்க்கார் விசாரணைக் குழு வைப்பது என்றால், நான் உள்ளபடியே வேதனைப்படுகின்றேன். இன்றைக்கு இங்கே திராவிட முன்னேற்றக் கழகம் ஆண்டு கொண்டிருக்கின்றது.
நாளை இங்கே திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாமல், வேறு ஒரு கட்சி ஆண்டு, அதேபோல் மத்தியிலே வேறு ஒரு கட்சி ஆளுகின்ற அந்தப் பொறுப்பு ஏற்பட்டிருக்கின்ற நேரத்தில், மத்தியிலே இருக்கின்ற கட்சிக்கு மாநிலத்திலே ஆளுகின்ற கட்சியை வீழ்த்த வேண்டுமென்றால், மிகச் சுலபமான ஆயுதம் ஒன்று கிடைத்து விடுகின்றது. அவர்கள் என்ன செய்ய
