உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

சட்டப் பேரவையில்

பகுதி 6 · 6 / 7

அதற்குப் பரீட்சார்த்தமாக, முதல் கட்டமாக நேற்றைய தினம் வேலூர் மின் திட்டத்தில் முதல் பிரிவு, காலை 4 மணி முதல் 9 மணி வரை என்றும், இரண்டாவது பிரிவு, காலை 8-30 மணி முதல் பகல் 1-30 மணி வரை என்றும், மூன்றாவது பிரிவு, பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை என்றும்,

பிரித்து மின்சாரம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற இடங்களில் வெகு விரைவிலே இதைப் பார்த்துக் கொண்டு அமலாக்கப்பட இருக்கிறது.

டிரான்ஸ்பார்மர்களில் மின்பளு ‘லோட்’ அதிகமாகி, பழுது ஏற்படுவதைத் தடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கவேண்டுமென்று கூறினார்கள். அதற்குப் பல புதிய டிரான்ஸ்பார்மர்களுக்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. முதலில் ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களை அங்கங்கே நிறுவுவதற்கு முடிவெடுக்கப்பட்டு அந்தப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

மின் வெட்டு நிலைமை சீர்படும் வரையில் மின்சாரத்திற்கான குறைந்த பட்சக் கட்டணம் விவசாயிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மின்சார வெட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பருவ மழை தவறும் நேரங்களில் எந்த அடிப்படையில் விவசாயிகளுக்குச் சலுகைகள் அளிக்கப்படுகிறதோ, அதே சலுகைகள் இப்போதும் மின் வெட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக விரைந்து அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாரியம் வழங்கும் மின்சாரத்திற்கு மாற்றுத் தனியார் ஜெனரேட்டர்கள் வாயிலாக உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு விதிக்கப்படும் வரி, இந்த நெருக்கடி தீரும் வரை ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

நகரங்களில் தெரு விளக்குகள் இரவு 7 மணி முதல் 10 மணி வரையில் மட்டுமே எரியலாம். அலங்கார விளக்குகளுக்கு ஜெனரேட்டர்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

திரைப்பட அரங்குகளில் மின்சாரத்தை உபயோகித்து ஒரு காட்சி மட்டுமே நடத்தப்பட வேண்டும். இது நம்முடைய திருப்பூர் மொய்தின் அவர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி தரும் என்று கருதுகிறேன். திரைப்பட அரங்குகளில் மின்சாரத்தை உபயோகித்து ஒரு காட்சி மட்டுமே நடத்தப்பட வேண்டும். பிற காட்சிகள் ஜெனரேட்டர் மூலம் நடத்த எந்தத் தடையும் இல்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையிலுள்ள தெர்மல் நிலையங்களின் நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, ஆறு மாதத்திற்கு அயல் நாட்டுக் கப்பலைப் பயன்படுத்துவதற்கு ஷிப்பிங் டைரக்டர் ஜெனரலின் அனுமதி கிடைத்துவிட்டது. தென்னிந்திய ஷிப்பிங் மேனேஜிங் டைரக்டர் திரு தஸ்தாருடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை முடிவு செய்யுமாறு மின்வாரியத் தலைவருக்குக் கூறப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு 21,000 டன் நிலக்கரி கொண்டுவருவதற்கான இத்திட்டம் நம் தேவையைத் திருப்திகரமாகப் பூர்த்தி செய்யும் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

**திருமதி த. ந. அனந்தநாயகி :** கலைக் கண்காட்சிகள் எங்கு பார்த்தாலும் நடத்தப்படுகின்றனவே, அதற்கு மின்சாரம் கொடுக்கப்படுமா, நிறுத்தப்படுமா என்று அரசாங்கம் அறிவிக்குமா ?

**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** தயவு செய்து எங்கே நடக்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும். எங்கே நடக்கிறது ?

**திருமதி த. ந. அனந்தநாயகி :** பல இடங்களிலே பார்க்கிறோமே அந்தப் போர்டை ! 36-வது டிவிஷனிலே நடக்கிறதே!

**டாக்டர் எச். வி. ஹண்டே :** 36-வது டிவிஷன் என்று சொன்னார்கள். அதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** அவர்களுக்கு ஜெனரேட்டர் கூட அல்ல, லைசென்ஸ் வழங்கப்படவில்லை. அவர்கள் கொட்டகைகள் எல்லாம் போட்டுவிட்டு வந்து ‘நாங்கள் போட்டுவிட்டோம், இருந்தாலும் முதல் அமைச்சர் நீங்கள் இப்படி அறிவித்தீர்கள். எப்படியாவது, நாங்கள்

செலவு செய்துவிட்ட காரணத்தினாலே கொடுக்க வேண்டும்’ மென்று கேட்டார்கள். முடியவே முடியாது என்று சொல்லி யாகிவிட்டது. கொடுக்கப்படவில்லை.

**டாக்டர் எச். வி. ஹண்டே :** ஒரு அமைச்சர் போய்த் துவக்கி வைத்தார்.

**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** அமைச்சர்களே போய்த் திறந்து வைத்தாலும் அதற்கு லைசென்சுகள் வழங்கப் பட்ட மாட்டாது என்பது கண்டிப்பான உத்தரவு.

குடியிருப்பு மனைப்பட்டா

பிறகு நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு சுப்பையா அவர்கள் தஞ்சை மாவட்டத்திலே வழங்கப்பட்ட குடியிருப்பு மனைப்பட்டாக்களில் சில புகார்களைச் சொன்னார். ஏதோ முதலமைச்சர் வந்து ஒரு இலட்சத்து 57 ஆயிரம் பேருக்கு வழங்கினார். பல பேருக்குக் கிடைக்கவே இல்லை; சில பேருக்குத்தான் கிடைத்தது என்று சொன்னார்கள். அவர் கள் எந்த அடிப்படையிலே சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உடனடியாக அதைப் பற்றி விளக்கங் கள் எல்லாம் சேகரித்தேன்.

27-2-1972-ல் திருவையாற்றிலே வழங்கப்பட்ட குடி யிருப்பு மனைப் பட்டா 6,764. 15-6-1972-ல் திருத்துறைப் பூண்டியில் 26,150. அதிலே திரு மணலி அவர்களும் திரு சுப் பையா அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார் கள். 14-9-1972 அன்றும், 28-2-1973 அன்றும் கும்ப கோணத்தில் 1,15,227. ஆக, பிப்ரவரி 1973 முடிய வழங் கப்பட்ட பட்டாக்களின் எண்ணிக்கை 1,48,000. இதிலே, இந்த 1,48,000 குடியிருப்பு மனைப் பட்டா பெற்றவர்களில் 1,41,000 பேர் அதைப் பெற்றுக்கொண்டதற்கான அக்கு லெட்ஜ்மெண்டுகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அவை அதிகாரிகளிடத்தில் இருக்கின்றன. இன்னும் ஏழு ஆயிரம் பேர்களிடமிருந்து அக்குலெட்ஜ்மெண்ட் வந்தாக வேண்டும். பட்டா வழங்கப்பட்ட பிறகு ஆட்சேபணை தெரிவிக்கப்பட் டும், உரிமை மறுப்புத் தெரிவிக்கப்படும் விசாரணையில் இருப்பவை 8,700 ஆகும். ஆக இதையும் சேர்த்து மொத் தம் ஒரு இலட்சத்து 57 ஆயிரத்தில் ஒரு இலட்சத்து 41 ஆயி ரம் பட்டாக்களுக்கு அதைப் பெற்றுக்கொண்டதற்கு ரசீது கிடைத்துவிட்டது. எட்டு ஆயிரம் பட்டாக்களிலே வழக்கு இருக்கிறது.

ஏழாயிரம் பட்டாக்களுக்கு ரசீதுகள் வரவில்லை. ஆக, ஒரு இலட்சத்து 57 ஆயிரம் பட்டாக்களுக்கான அந்த விவரத்தை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒன்பது அறிவிப்புகள்

குத்தகைதாரர் சட்டம் போன்ற 9 அறிவிப்புகள் இந்த மாமன்றத்தில் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, ஏழை எளியவருக்கு இந்த அரசு எந்த எந்த வகையிலே தன்னுடைய பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாக—பொதுவுடைமைக் கொள்கையில், சோஷலிசக் கொள்கையில், இந்த அரசு கொண்டிருக்கிற அழுத்தமான நம்பிக்கைக்கு அடையாளமாக—9 அறிவிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

நீ 9 அறிவிப்புகள் தந்தாய், நான் 10 அறிவிப்புகள் தருகிறேன் என்று நண்பர் ஹண்டே அவர்கள் காலையிலே பேசும் பொழுது பத்துப் பாயிண்டுகளை வைத்துக்கொண்டு இவைகளுக்கு எல்லாம் என்ன பதில் என்று கேட்டார்கள். நான் அந்தப் பத்துப் பாயிண்டுகளுக்கும் என்னால் முடிந்தவரையில் பதில் அளித்திருப்பதாகக் கருதுகிறேன். இந்த 9 அறிவிப்புகள் மாத்திரம் போதாது தமிழ்நாட்டை முன்னேற்றி விடுவதற்கு என்பதை நான் உணராமல் இல்லை.

குத்தகைதாரர்கள் சட்டம் பற்றியெல்லாம் இங்கே எடுத்துச் சொல்லப்பட்டது. அதிலே அடிக்கடி மாண்புமிகு மணலி அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களும் கேரளா நிலச் சீர்திருத்தச் சட்டத்தைப் பாருங்கள், பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

கேரளத்தைப் பார்ப்போம்