உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

சட்டப் பேரவையில்

பகுதி 5 · 5 / 7

தெடுக்கப்படுகிற அமைச்சர்கள்தான் வரவேண்டும். நியமிக்கப்படுகிற அமைச்சர்கள் வந்தால் அவர்களின் ஆட்சி நிற்பதாக இந்தியாவின் சரித்திரம் சொல்லவில்லை.

**திருமதி த. ந. அனந்தநாயகி:** அப்படி நியமனம் செய்யப்படுகிறவர்கள் அடுத்த 6 மாதத்திற்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டே வந்தாக வேண்டும் என்பதை நினைவு கொள்ளவேண்டும்.

**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** நான் ஆறுமாதக் கதையைச் சொல்லவில்லை. அதற்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறேன்.

**திரு ஆர். பொன்னப்ப நாடார் :** ஒரிசாவில் எப்படி மந்திரி சபை கவிழ்ந்ததோ அதுபோல நடக்காதிருக்க ஆயாராம் கயாராம் நம்மிடையே இருக்கக்கூடாது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்.

**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** ஆயாராம், கயாராம்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்பது திரு பொன்னப்பநாடார் அவர்களுக்கும் தெரியும். இப்படி எல்லாம் மின்சார வாரியத்தில் ஊழல்; ஊழல் விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். மத்திய அமைச்சராக இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய திரு கே. எல். ராவ் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். அது ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையில் வந்திருக்கிறது.

நல்லவேளையாக அவர்கள் போட்டார்கள், போனால் போகட்டும் என்று ! திரு கே. எல். ராவ் அவர்கள் பேச்சின் ஒரு பகுதி இது:—

He complimented Tamil Nadu for making the best use of power without wastage.

என்று திரு கே. எல். ராவ் அவர்கள் தமிழ்நாட்டைப் பாராட்டி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். அது மாத்திரம் அல்ல. பொதுவாக மின் திட்டங்கள் மத்திய அரசு அளவில் சரியாகச் செயல்படவில்லை என்பதை அவரே குறிப்பிட்டிருக்கிறார். திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்படவேண்டும், மின்சாரத் திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை ஒரு கருத்தரங்கில் அவர் சொல்கிறார்:—

The power planning so far had been totally wrong. It should never have been linked to the general Five Year Plan. Power planning should be a continuous process.

என்று திரு கே. எல். ராவ் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் 23-2-1972-ல் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் இன்னொன்றையும் சொல்வேன், உங்கள் தகவலுக்காக. 26-7-1972-ல் ஹைதராபாத்திலே நடைபெற்ற Zonal Council, மண்டலக் குழுவிற்கு நானும் கல்வி அமைச்சரும், தொழில் அமைச்சரும் சென்றிருந்தபொழுது அங்கே திரு கே. எல். ராவ் பேசும்பொழுது ஒன்றைச் சொன்னார்கள். அதாவது ஒரு மாநிலத்திலே இருக்கிற ஆட்சியினுடைய அக்கறையற்ற தன்மையினால் இந்தச் சங்கடங்களெல்லாம் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்களே, அதற்காக நான் சொல்கிறேன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கவனமாகக் கேட்க வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன்:—

The power supply position in the States of Southern Zone was going to be extremely bad because of delay in the construction of a 390 MW Idikki project due to labour trouble and delay in the commissioning of the 89 MW Unit at Sharavathi on account of delay in supply of equipment, etc., for the project.

என்று சொன்னார்கள். அப்பொழுது இடுக்கியிலே ஒரு பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை நடத்தியவர்கள் வேறு கம்யூனிஸ்டுகள்.

ஆனால் வேலை நிறுத்தம் விரைவிலே முடிவடைந்திருக்குமானால், 390 மெகாவாட் உற்பத்தி அங்கு வந்திருக்குமேயானால், ‘சதர்ன் ஜோன்’, தென்மண்டலத்திலே இருக்கிற தமிழ்நாட்டிற்கு நாம் கேரளாவிலிருந்து கொஞ்சம் அதிகமான மின்சாரத்தைப் பெற்றிருக்க முடியும். இப்படிப் பல்வேறு நிலைமைகள் பல இடங்களிலே நடைபெற்றுவிட்ட காரணத்தினாலேதான் இந்த

மின்சார வெட்டினால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதையே சொல்லிக்கொண்டிராமல் ஆகவேண்டிய காரியங்களையும் நாம் பார்க்க வேண்டும்.

**டாக்டர் எச். வி. ஹண்டே :** கே. எல். ராவ் சொன்ன கருத்தைத்தான் நான் காலையிலே சொன்னேன். இப்பொழுது இருக்கிற குறையெல்லாம் பேசின் பிரிட்ஜ் பவர் ஹவுசிலே 70 மெகாவாட் இருந்த காலத்தில் இன்ஸ்டால்ட் கப்பாசிட்டி 60 மெகாவாட் உற்பத்தியாகிக்கொண்டிருந்தது. இப்பொழுது 97.5 இருக்கிற நேரத்தில் 35 மெகாவாட் தான் உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது. ஆக, நம்முடைய உற்பத்தியிலும் கொஞ்சம் கோளாறு இருக்கிறது என்றுதான் நான் காலையிலே சொன்னேன்.

**மாண்புமிகு திரு ஓ. பி. இராமன் :** தலைவர் அவர்களே, பேசின் பிரிட்ஜ் பவர் ஹவுசில், கட் இல்லாத நேரத்தில், சென்ற ஆண்டு 24 இலட்சம் யூனிட் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 30 இலட்சம் யூனிட் தயார் செய்யப்படுகிறது. குறைந்துவிட்டது என்று சொல்லுவதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. அது மட்டுமல்ல, எண்ணூரிலே கூட அப்படித்தான் என்று சொன்னார்கள். பவர் கட் இல்லாதபொழுது முழுமையாக இருந்தது என்று சொல்கிறார்கள்.

இப்பொழுது நாங்கள் உற்பத்தியைப் பெருக்க வில்லை, எங்களுடைய கவனக் குறைவு என்று சொல்கிறார்கள். அதற்காகச் சொல்கிறேன், எண்ணூரிலே கூட சென்ற ஆண்டு பவர் கட் இல்லாத நேரத்தில் 40 இலட்சம் யூனிட்தான் தயார் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 73 இலட்சம் யூனிட் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள்.

**திருமதி த. ந. அனந்தநாயகி :** ஒரே ஒரு இன்ஃபார் மேஷன்! பவர் கட் இல்லாத பொழுது நாங்கள் இவ்வளவு உற்பத்தி செய்தோம். இன்றைக்கு எவ்வளவு உற்பத்தி செய்கிறோம் என்பதல்ல. பவர் கட் இல்லாதபொழுது நீர் நிலையத்திலிருந்து உங்களுக்குத் தேவையான மின்சாரம் வந்துகொண்டிருந்ததால் அதிலே, சற்று அக்கறை இல்லாமல் இருந்தது. இப்பொழுது பவர் கட் இருக்கிறது, இப்பொழுது அனல் மின்சார உற்பத்தியை ஃபுல்லஸ்டு கப்பாசிடிக்கு யூடிலைஸ் செய்கிறீர்களா என்பதுதான் என்னுடைய கேள்வி.

**மாண்புமிகு திரு ஓ. பி. இராமன் :** அது முழுமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. மத்திய சர்க்காருடைய அமைச்சர் டாக்டர் கே. எல். ராவ் கூறும் பொழுதுகூட, அது ஓடவில்லை என்று சொல்லவில்லை. தண்ணீர் வராததற்குத் தடுப்பாடு இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, குறை இருப்பதாகச் சொல்ல

வில்லை. குறையில்லாமல் தமிழ்நாட்டிலே ஜெனரேட்டர்கள் சிறந்த திருப்திகரமாக ஓட்டியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** மின்சார வெட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களைப் பற்றிக் கவலையே கொள்ளாமல், இந்த அரசு அலட்சியமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டைச் சொன்னார்கள். கடந்த பல தினங்களாக வேறு எந்த வேலையையும் கூடக் கவனிக்காமல், இந்த வேலையை நானும், அமைச்சரவையிலே இருப்பவர்களும், அதிகாரிகளும் கவனித்து வருகிறோம். குறிப்பாகக் கைத்தறியாளர்களுக்காக ஆலை அதிபர்களோடு நேற்றைய தினம் பேச்சு வார்த்தை நடத்தி, கணிசமான நூலைப் பெறுவதற்கு முயற்சிகள் முடிவுற்று இருக்கின்றன என்பதை இன்று பத்திரிகைகளிலே மாண்புமிகு உறுப்பினர்கள் பார்த்திருக்கலாம்.

ஆலைகளிலே வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்குக் கூடுமான வரையில் அவர்களுடைய சங்கடங்களைத் தவிர்க்க, அரசு, தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள் அடங்கிய முத்தரப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

விவசாயிகளுக்குச் சலுகைகள்

விவசாயிகளைப் பொறுத்த வரையில், என்னையும் வேறு சில அமைச்சர்களையும் இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயிகளுடைய பிரதிநிதிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து சந்தித்தார்கள். நீண்ட நேரம் 10 மணியிலிருந்து கிட்டத்தட்ட 2 அல்லது 2½ மணி நேரம், எங்களோடு விவாதித்தார்கள். நல்ல பயனுள்ள விவாதமாக இருந்தது. பல

சங்கடங்களையெல்லாம் எடுத்துத் தெரிவித்தார்கள். அவர்களுடைய கருத்து, இப்பொழுது 4 மணி நேரம் கொடுக்கப்படுவது சரியாகக் கொடுக்கப்பட வேண்டுமென்றும், சில இடங்களிலே கோளாறு ஏற்படுகிறது என்றும், 4 மணி நேரத்தினை 6 மணி நேரமாக ஆக்கித்தர வேண்டுமென்றும் சொன்னார்கள்.

அதை ஆராய்ந்து பார்த்ததில் தற்பொழுது 4 மணி நேரம் தரப்படுகிற மின்சாரத்தை 5 மணி நேரமாக ஆக்குவதற்கு இப்பொழுது நாம் முடிவு செய்திருக்கிறோம்.