உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

சட்டப் பேரவையில்

பகுதி 4 · 4 / 7

அடுத்து, இன்று நமது தமிழ்நாட்டில் பரபரப்பிற்கு உள்ளாகியிருப்பது மின்வெட்டு. அதைப்பற்றியும் அனைவரும் இங்குப் பேசியிருக்கிறார்கள். தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்றெல்லாம் மிகைப்படுத்தப்பட்டுப் பேசப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அவரவர் கட்சிகளின் இயல்புக் கேற்ப இந்தப் பிரச்சினையை அணுகுகின்றன. நான் எல்லா அரசியல் கட்சிகளையும் மிகுந்த பணிவன்போடு கேட்டுக்கொள்வது, இது ஒரு பொதுப் பிரச்சினை, ஒரு தனிப் பிரச்சினை அல்ல, கொள்கைப் பிரச்சினை அல்ல.

குறிப்பாக மாணவர்களுக்குப் பயிற்றுமொழி

ஆங்கிலமா தமிழா என்ற கேள்வி வருகின்ற நேரத்தில்—மாணவர்கள் தங்களுக்குப் பயிற்று மொழி ஆங்கிலம்தான் வேண்டும்; தமிழ் தேவையில்லை என்று சொல்கிற நேரத்தில், இதைத் தமிழ் மக்கள், தமிழ்நாடு என்று பார்க்கிற நேரத்தில் இது பொதுப் பிரச்சினையாக வருகிறது என்றாலும் கூட அதை விட்டுக்கொடுத்து, அதிலே கூட அரசியல் காரணம் ஏற்பட்ட நேரத்தில்—அதை அரசியலுக்காகச் சிலர் பயன்படுத்திக்கொண்ட நேரத்தில்—அதை நாம் அணுகியிருக்கிறோம்.

அப்படியில்லாமல் இது அனைவரையும் பாதிக்கக்கூடியது என்று திரு ஹண்டே அவர்கள் குறிப்பிட்டதைப்போல, திரு மணலி அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல, இதை ஓர் போர்க்காலச் சூழ்நிலையைப் போலக் கருதி, நாம் ஈடுபட

வேண்டிய பெரிய காரியமாகும். அதே நேரத்தில் ஒரு அரசு தன்மீது சுமத்தப்படுகிற பழி, சொல்லப்படுகிற குற்றச்சாட்டு ஆகியவற்றிற்குப் பதில் அளிக்க வேண்டியிருக்கிறது என்றும், எப்படி இது ஒரு பொதுப் பிரச்சினை என்று சொல்லி அரசை ஒரு மூலையில் கொண்டுபோய்த் தள்ளி, மற்றவர்கள் குற்றம் சாட்டுவதற்கு விரும்புகிறார்களோ அதைப் போலத்தான், தான் அந்தக் குற்றச்சாட்டிற்கு ஆளாக்கப்படும் நிலையில் இல்லை; தான் அதற்குப் பொறுப்பு இல்லை என்பதை எடுத்துச் சொல்கிற உரிமையை அரசும் பெற்றிருக்கிறது.

இந்த அரசு வந்த பிறகு மின்சார உற்பத்தியே நடைபெறவில்லை. ஆகவே தான் சங்கடங்கள் ஏற்பட்டன என்று திரு மணலி அவர்களே சொன்னார்கள். நாம் உஷாராக இருக்கவில்லை என்றும் சொன்னார்கள்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நமது மாநிலத்திற்கு 110 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 315 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 510 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. ஆக 51 முதல் 67 வரை ஏறத்தாழப் பதினைந்து வருடத்தில் நமது மாநிலத்தில் 935 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 67 முதல் 72 வரை.

இந்த ஐந்தாண்டுக் காலத்தில் மட்டும் 625 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. பதினைந்து ஆண்டுக் காலத்தில் 935 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்றால் இந்த ஐந்தாண்டுக் காலத்தில் மட்டும் 625 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் உற்பத்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இந்த அரசு ஆளாகுவது முறை அல்ல என்பதற்கான விளக்கத்தை இதன் மூலம் நான் தரவிரும்புகிறேன்.

இன்னொன்றையும் மறந்துவிடக்கூடாது. கேரளாவை எடுத்துக்கொண்டால் அங்கே ஒரு நாளைக்குத் தேவையான மின்சாரம் 60 இலட்சம் யூனிட் தான். மைசூருக்கு ஒரு நாளைக்குத் தேவையான மின்சாரம் 130 இலட்சம் யூனிட். ஆந்திரத்திற்கு ஒரு நாளைக்குத் தேவையான மின்சாரம் 90 இலட்சம் யூனிட். ஆகவே இந்த மூன்று மாநிலங்களையும் சேர்த்துக் கொண்டாலும்—கேரளா, மைசூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்துக் கொண்டாலும்—ஒரு நாளைக்குத் தேவையான மின்சாரம் 280 இலட்சம் யூனிட் தான்.

ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் தேவையான மின்சாரம் ஒரு நாளைக்கு 225 இலட்சம் யூனிட். இங்கே தொழில் வளர்ந்திருக்கிற காரணத்தினால்—இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 6 இலட்சம் பம்பு செட்டுக்கு மின்சார இணைப்புக் கொடுத்திருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்ற காரணத்தினால்—கேரளா, மைசூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு ஆகிற மின்சார அளவைக் கிட்டத் தட்டப்போய்த் தொடுகின்ற அளவுக்கு 225 இலட்சம் யூனிட் இந்த மாநிலத்திற்குத் தேவைப்படுகிறது.

இப்போது ஏற்பட்டிருக்கிற பிரச்சினைகள், நீர் மின்சார நிலையங்களுக்கு இயற்கையில் ஏற்பட்டுவிட்ட ஆபத்தே தவிர வேறு அல்ல. இயற்கை திடீரென்று, எதிர்பாராத வகையில் ஏமாற்றிவிட்ட காரணத்தினால் நமக்கு நீர் மின் நிலையங்களில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்கவில்லை.

திட்டங்களே கேட்கவில்லையா ?

மத்திய அரசிடமிருந்து நாம் திட்டங்களே கேட்க வில்லையா என்று பார்த்தால் 71, 72, 73 இந்த மூன்று ஆண்டுகளில் பத்துத் திட்டங்களைக் கேட்டிருக்கிறோம். (1) சேர்வலாறு திட்டம், (2) நெல்லித்துறைத் திட்டம், (3) சொலாட்டிப்புழா திட்டம், (4) மேல் அமரா வதித் திட்டம், (5) பரலியாறு திட்டம், (6) சண்முகா நதித் திட்டம், (7) கூனூர் கல்லாறு திட்டம், (8) கீழ் மோயாறு திட்டம், (9) தூத்துக்குடி அனல் மின் நிலையம், (10) மேட்டூர் அனல் மின் நிலையம்.

ஆக இந்தப் பத்துத் திட்டங்களின் மூலம் 1,035 மெகாவாட் கிடைக்கக்கூடிய திட்டங்களே மத்திய கமிஷனின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கிறோம்.

THIRUMATHI T. N. ANANDANAYAKI: All these 10 schemes have been sent to the Centre to be included in Fifth Plan which starts from 1974 and ends in 1979. Why did you not send the same for inclusion in Fourth Plan. That is the point.

**திரு ஆர். பொன்னப்ப நாடார் :** சண்முகா நதித் திட்ட மானது, நான்காவது திட்டத்தில் உட்படுத்தப்பட்டிருக்

கிறதா? அல்லது ஐந்தாவது திட்டத்தில் உட்படுத்தப்பட் டிருக்கிறதா ?

**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** இந்தத் திட்டங்கள் எல்லாம் அனுமதிக்கப்பட்ட பிறகுதான் அது எந்தத் திட்டத்திற்கு உட்படும் என்பது தெரியும்.

இவைகள் அன்னியில் கல்பாக்கம் விரிவுத் திட்டம், நெய் வேலி இரண்டாவது அனல் மின் நிலையம், தூத்துக்குடி இரண்டாவது அனல் மின் நிலையம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களையும் நாம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். இந்த மன்றத்தில் தீர்மானங்கள் போட்டதை எல்லாம் முன்பொரு தடவை விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

ஆளும் காங்கிரசைச் சேர்ந்த திரு குமாரசாமி அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். நான்காவது ஐந் தாண்டுத் திட்டத்தில்—அம்மையார் அவர்களும் சொன் னார்கள். அதை ஒட்டி வருகிறது—நான்காவது ஐந் தாண்டுத் திட்டத்தில் ஒரு மின் நிலையத்தை ஏற்படுத்த மத் திய அரசினர் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால்—குமார சாமி சொன்னார்—பிறகு ஏன் அதில் அவர்கள் குறுக்கிட்டுப் போகிறார்கள்—இது அவர்கள் கேள்வி. நமக்குத் தேவை யான திட்டத்தை நாம் போட்டுக்கொண்டு மத்திய அமைச்ச ரிடம் சொல்லிவிட்டு, நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டி யது தானே, அப்படிச் செய்யத் தவறியதால் தான் இந்த நிலைமை என்று திரு குமாரசாமி சொன்னார்.

எனக்கு இருக் கிற பயம் எல்லாம், ஏதோ சொன்னதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்பது அல்ல. இதே கருத்தைப் பொதுமக்களிடத்தில் சொல்கிற நேரத்தில் பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் என்ன கருதிக் கொள்வார்கள் ? நான்காவது திட்டத்தில் ஒரு மின் நிலையத்தை ஏற்படுத்த மத்திய அரசினர் ஒத்துக்கொண்டிருக் கிறார்கள், மத்திய அரசின் அனுமதியைக்கூடப் பெறாமல் நாம் அதனை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று திரு குமாரசாமி சொல்லிவிட்டார்.

அமைச்சர்கள் ஏன் இதைச் செய்யாமல் வீணே பொழுதைக் கழித்தார்கள் என்றுதான் பொது மக்கள் எண்ணத் தோன்றும்.

ஆனால் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அந்த மின் நிலையத்தை உடனடியாக ஏற்படுத்தி விடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை ஏற்கெனவே ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள் நன்கு உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

முதலில் திட்டத்திற்கு விரிவான அறிக்கையைத் தயா ரித்து அனுப்புகிறோம்.

அந்த அறிக்கையை மத்திய நீர்மின் குழு ஆராய்ந்து, மத்திய மின்சாரத்துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற்ற பின், திட்டக் குழுவிற்கு அதை அனுப்பும்.

திட்டக் குழுவில் தொழில் நுட்ப ஆலோசனைக் குழு மறு படியும் அதை ஆராய்ந்து, அதற்குப் பிறகு ஒப்புதல் அளிக் கிறது. இந்தச் சம்பிரதாயங்களின்படி இந்த வழிமுறைகளில் ஒரு திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. உதாரணமாக நெல்லித்துறை, சேர்வலாறு, பரலியாறு ஆகிய திட்டங்கள் 1970-71-ல் அனுப்பப்பட்டன. இன்னும் அந்தத் திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

திட்டக் குழுவின் அனுமதி இல்லாமல் நாம் ஏன் ஏற்படுத்த க்கூடாது என்று திரு குமாரசாமி குறிப்பிட்டார்—கடற் கரையில் அம்மையாரும் பேசியதாக நான் கேள்விப்பட்டேன். அப்படி மத்திய அரசின் அனுமதியைப் பெறாமல் நாம் செயல் பட முற்பட்டால்—அந்த நிலையத்திற்கான சாதனங்களே— பாய்லர், ஜெனரேட்டர் ஆகிய கருவிகளே—மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தத் தொழிற்சாலையும் உற்பத்தி செய்து தர முன்வராது. அதுமாத்திரம் அல்ல.

அந்தக் கருவிகளே இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து பெற முடியா மல் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டு மென்றால் மத்திய அரசின் ஒப்புதல்தான் நாம் பெற்றாக வேண்டும். ஆக அவர்களைக் கேட்காமல் பிறகு Ratification வாங்கிக் கொள்ளலாமென்று திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுக்கு எந்த வழியும் இல்லை என்பதை நான் விளக்க விரும்புகிறேன்.

நாம் மின்சாரத்தைச் செம்மையாகவும், சிக்கனமாகவும் செலவழிக்கிறோமா ? ஏதோ ஊழல் நடந்திருக்கிறது, நடந்தி ருக்கிறது என்று சொல்கிறார்கள். உடனேயே அதற்கு ஊழல் விசாரணைக் குழு போடவேண்டும், நீதி விசாரணைக் குழு போடவேண்டும் என்கிறார்கள்.

மத்தியில் இருந்து.........

இப்படி எடுத்துக்கொண்டாலும் மத்திய சர்க்காரில் இருந்து வர வேண்டும். தேர்தல் நடக்கிறதா, மத்திய சர்க்காரில் இருந்து தேர்தல் அதிகாரி வரவேண்டும்; ஏஜெண்டு போடு கிறார்களா மத்தியில் இருந்து வரவேண்டும்; போலிங் பூத்தில் உட்காருகிறார்களா மத்தியில் இருந்து வரவேண்டும். இன்னும் கொஞ்ச நாட்களில் இங்கே சட்டமன்றம் நடக்கும்போது, திருமதி இந்திராகாந்தி அங்கே பாராளுமன்றத்தை நடத்தா மல் விட்டு இங்கே வந்து முதலமைச்சர் பொறுப்பைப் பத்து நாள் பார்த்துவிட்டு மறுபடியும் டெல்லிக்குப் போக வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள் என்று கருதுகிறேன்.

அப்படிச் சொல்லி மத்தியில் இருந்து அமைச்சர்களே வர வழைத்தால் அவர்கள் நிற்கமாட்டார்கள் என்பதை இந்திய வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது. தேர்ந்