சட்டப் பேரவையில்
பகுதி 3 · 3 / 7
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** நான் ஏற்கெனவே சொன்னேன். 57 இலட்சம் ரூபாயில் 55 இலட்சம் ரூபாய் மற்றப் பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. 1½ அல்லது 2 இலட்சம் ரூபாய் முரசொலிக்குத் தரப்படுகிறது என்று திரு கோபால் அவர்கள் சொன்னார்கள். அது முரசொலிக்குத் தரப்பட்டிருக்கிறது. அதிலே தவறு ஏதுமில்லை. அது தொடர்ந்து நடத்தப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
**Dr. H. V. HANDE:** What is the circulation of ‘Murasoli’ and what is the amount given towards advertisement charges and whether it is proportionate to its circulation. Of course, the Hon. Chief Minister says that he is not going to give advertisement to newspapers which criticise him harshly.
That is a different matter which I do not want to go into now. Also what is the circulation of newspapers like ‘Dinamani’, ‘The Hindu’ and ‘The Indian Express’ which the Government consider as neutral papers and what is the amount given to them towards advertisement charges. I am asking a specific question and I want a specific answer. In this connection, I want to point out that so far as the circulation of ‘Murasoli’ is concerned, it is about 15,000.
If it is more than 15,000 it has to pay 2 paise extra as tax to the Central Government and that is a different matter. So, I request the Hon. Chief Minister to clarify whether the amount of advertisement charges is commensurate with its circulation.
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி ;** இந்தக் கேள்விக்கு இந்த அவையிலே அமைச்சராக இருந்த திரு சி. சுப்பிரமணியம் அவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். விளம்பரம் பத்திரிகைகளின் எண்ணிக்கையைப் பொறுத்துக் கொடுப்பது இல்லை என்றும் பத்திரிகையின் -டோன் அண்டு கன்டென்ட்- (Tone and content) ஆகியவைகளைப் பொறுத்துத்தான் கொடுக்கப்படும் என்றும் செய்தித் துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த அவையில் அன்றையச் சர்க்குலேஷன் பற்றி ஏற்கெனவே டில்லிக்குக் கொடுக்கப்பட்ட பதிலில்—நீங்கள் டில்லியிலே கொண்டு போய்க் கொடுத்த புகார்ப் பட்டியலுக்கு அளிக்கப்பட்ட பதில் புத்தகத்தில்-இருக்கிறது. திரு ஹண்டே அவர்கள் அதை ஒய்வாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
விலைவாசி உயர்வு
அடுத்து, மிகமுக்கியமான விலைவாசி உயர்வு குறித்து இந்த மாமன்றத்திலே எல்லா உறுப்பினர்களும் எடுத்துக்காட்டினார்கள். இதற்கு இந்த அரசு கவலையேபடவில்லை; கொஞ்சம்கூடச் சிந்தித்துப்பார்க்கவேயில்லை என்று திரு பொன்னப்ப நாடார் அவர்களும், திரு ஹண்டே அவர்களும் வேறு சில உறுப்பினர்களும் சுட்டிக் காட்டினார்கள். நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பெரியவர் மணலி அவர்களும் நேற்றைய தினம் சொன்னார்கள். ‘இதற்கெல்லாம் நீங்கள் யாரும் கவலைப்படவில்லை’ என்று சொன்னார்கள்.
கவலை எடுத்துக் கொள்ளவில்லை என்று திரு ஹண்டே அவர்கள் சொன்னதை அவர்களே மறந்திருக்கு மாட்டார்கள் என்று கருதுகிறேன். மத்திய அரசும் மாநில அரசும் மட்டுமே இந்தப் பிரச்சினையில் கவலைப்படவேண்டுமே அல்லது பாமர மக்கள் கவலைப்பட வேண்டியதல்ல என்று குறிப்பிட்டார்கள். அதோடு வாக்கியத்தை நிறுத்திவிடக் கூடாது. பாமர மக்கள் கவலைப்படமாட்டார்கள். ஆனால் நாமே இந்த மன்றத்திலே
விவாதித்து இதற்கு யார் பொறுப்பு என்பதில் அக்கறை செலுத்தியாக வேண்டும். அதை மக்கள் இடத்தில் எடுத்துச் சொல்லியாக வேண்டும். திரு மணலி அவர்கள் கூடச் சொன்னார்கள், பழைய கால மித்திரன் பத்திரிகையில் இருந்து ஒரு பாட்டை எடுத்துக்காட்டி, இந்தப் பாட்டை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எல்லாரும் பாடுங்கள் என்று கூடச் சொன்னார்கள். தமிழிலும் பாடலாம். மலையாளத்திலும் அதை மொழி பெயர்த்துக் கேரளத்திலும் போய்ப் பாடலாம்.
அகில இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமே பாடவேண்டிய பாட்டாகத்தான் அந்தப் பாட்டு இருக்கிறது. இதைக் கேலியாகச் சொல்லவில்லை. அவர்கள் சொன்ன இலக்கிய நயத்தோடு பதிலளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இது ஒரு மாநிலத்தின் பிரச்சினையாக இல்லாமல் இந்தியாவிலே இருக்கிற எல்லா மாநிலங்கள் பிரச்சினையாகவும் இருக்கிறது. அந்த முறையிலே இந்தப் பயங்கரமான பிரச்சினையை அணுகி ஆகவேண்டும். இதற்கு நாம் மத்திய அரசு பொறுப்பு என்று சொல்கிற நேரத்தில் மக்களிடத்திலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்குச் சொல்லவில்லை.
ஒரு உண்மையைச் சொல்கிறோம்.
உண்மை என்ன ?
அதற்கு விளக்கம் அளிக்கிறோம். இந்த விளக்கம் ஏற்கெனவே இருந்த பழைய அரசுகளால் அளிக்கப்படவில்லை. அப்போது எப்படி விளக்கம் அளிக்கப்பட்டதென்றால், விலைவாசி உயர்ந்து விட்டால், அப்போது தரப்பட்ட பதிலெல்லாம், அப்படித்தான் விலைவாசி உயரும் என்பதுதான். விலைவாசி உயர்ந்து விட்டது என்று நாங்கள் கிளர்ச்சியில் ஈடுபடுகிறோம் என்றால், அது கேலி புரியப்பட்டது. அரிசிக்காக கியூ நிற்கிறார்களே என்று சொன்னால், சினிமாவிற்கு கியூ நிற்கவில்லையா என்கின்ற கேள்வியின் மூலம் பதிலளிக்கப்பட்டது.
இன்று இங்கே மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்களும், மாண்புமிகு உறுப்பினர்களும் எதிரொலித்த அதே கருத்துக்களை இந்த அரசு எதிரொலிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. நாங்கள் பொறுப்பிலேயிருந்து தட்டிக் கழித்துவிட என்றைக்கும் நினைத்ததில்லை. நினைக்க விரும்பியதுமில்லை. ஆனால் உண்மை நிலைகளை மக்களுக்கு உணர்த்த நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் (1) தேசிய வருமான வளர்ச்சி (2) நாணயப் புழக்கம்—‘மணி—சப்ளை’—இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாக வேண்டும்.
அப்படிப் பார்த்தால், இங்கே கவர்ன்மென்ட் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கின்ற “எகனமிக் சர்வே 1972-73” என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். 1968-ஆம் ஆண்டை விட 1968-69-ல் தேசிய வருமான வளர்ச்சி 7 சத விகிதம்தான் உயர்கிறது.
அதே நேரத்தில் நாணயப் புழக்கம் 8·1 சதவிகிதம் என்று உயர்கிறது. 1969-70-ல் 1968-69-ஐ விட தேசிய வருமான வளர்ச்சி 7·3 சதவீதம் என்று உயர்கிறது. நாணயப் புழக்கம் 10·8 சதவீதம் என்று உயர்கிறது. 1970-71-ல் தேசிய வருமான வளர்ச்சி முன் ஆண்டை விட 4·6 சதவீதம் அதிகமாகிறது. அதே சமயத்தில் நாணயப் புழக்கம் முன் ஆண்டைவிட 11·1 சதவீதம் அதிகமாகிறது. ஆனால், திடீரென்று பயங்கரமாக 1971-72-ல் தேசிய வருமான வளர்ச்சி 1·5 என்ற வீதத்திலிருந்து இரண்டு புள்ளி என்று இழுபறி நிலைக்குப் போய் நிற்கிறது.
அதற்கு மாறாக, நாணயப் புழக்கம் 12·9 சதவீதம் என்று உயர்கிறது. இந்த நிலைமைதான் 1972-73-லேயும் ஏறத்தாழ நீடிக்கிறது.
ஆகவே, தேசிய வருமான வளர்ச்சிக்கு மேலாக நாணயப் புழக்கத்தை அனுமதித்து விட்டால், அதன் விளைவாக, விலைவாசி பாதிக்கப்படுகிறது. ஆகவே, நாணயப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துகின்ற உரிமை-அதிகாரம்-மாநில அரசுக்கு இருக்கிறதா அல்லது ரிசர்வ் பாங்கிக்கு மற்றப் பாங்குகளைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் இருக்கிறதா? அந்தக் கேள்விக்குப் பதில் காண்கின்ற நேரத்திலே தான் நாணயப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் மாநில அரசின் பொறுப்பு அல்ல, மத்திய அரசின் பொறுப்பு என்று சொல்கின்றோம்.
அப்படிப் பொறுப்போடு சொல்கின்ற நேரத்தில், ஒரு விரலைக் காட்டி, குற்றவாளி என்று சொல்லவில்லை. அந்தப் பொறுப்பு இருக்கிற காரணத்தால், நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று சொல்கிறோம். அப்படி எடுத்துக்கொள்கின்ற நேரத்தில் இடைஞ்சல்கள் இருக்கின்றன. திட்டங்கள் போட வேண்டுமானால் அதற்குப் பணப்புழக்கம் தேவை. ஆகவே, இப்படி இது ஒரு பெரிய சர்க்கிளாகச் சுழன்று கொண்டிருக்கிறது. அந்தச் சங்கடம் அவர்களுக்கு இருக்கிறது.
ஆகவே,
பொறுப்பு மாநில அரசுக்கு அல்ல; மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேனே அல்லாமல் வேறல்ல.
**திருமதி. த. ந. அனந்தநாயகி:—** தலைவரவர்களே, இவ்வளவு விவரமாக, பொறுப்பு மாநில அரசுக்கா, மத்திய அரசுக்கா என்று கனம் முதலமைச்சரவர்கள் பேசிக்கொண் டிருந்தார்கள். தேர்தலிலே அன்றைக்கு நின்றபோதே மத்திய அரசுக்குத் தான் அந்தப் பொறுப்பு என்று உணர்ச்சி யோடு பேசாது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலை வாசியைக் குறைத்து விடுவோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியையெல்லாம் குறைப்போம்” என்று சொன்னார்களே, இன்றைக்கு அவர்களுடைய பங்கு என்ன என்பதைத் தெரிந்துகொண்டால் நல்லது.
இன்றைக் குத் தப்பித்துக்கொள்கிற வகையில் பழியை மத்திய அர சிடம் போடுகிறார்கள். இது எப்படிச் சரியாகும்?
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :—** என்ன செய்வது? உங்களை நம்பித்தான் சொன்னோம். மத்திய அரசு பொறுப் பேற்று நடைபெறும் என்று நம்பித்தான் சொன்னோம். நம்பிக்கை மோசம் செய்து விட்டார்கள். எங்களுக்கு மாத்திரமா செய்தார்கள்? அவர்களுக்கும் சேர்த்துத்தான் செய்தார்கள்.
**டாக்டர் எச். வி. ஹண்டே.—** தலைவரவர்களே, மதிப் புக்குரிய முதலமைச்சரவர்கள் பேசுகின்ற நேரத்தில், இந்த பண வீக்கத்தைப் பற்றி எல்லாம் சொன்னார்கள். நானும் அதைத்தான் என்னுடைய பேச்சின்போது, எகனமிக் சர்வே ஆப் இந்தியா-வைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். உடனே, மாண்புமிகு ப. உ. சண்முகம் அவர்கள் “இது பாராளு மன்றத்தில் பேசவேண்டிய பேச்சு” என்று என்னைத் தடுத்து நிறுத்தினார்கள்.
ஆனால், அதையே நான் உங்களுக்குச் சொல்லவில்லை. இது நீங்கள் இங்கே பேசவேண்டிய பேச்சு தான். இதற்குப் பரிகாரம் என்ன வென்றால், “இன்கிரீஸ்ட் புரொடக்ஷன்.” பொருள்கள் உற்பத்தி செய்தால்தான் இதற்குப் பரிகாரம் என்று சொல்ல வந்தேன். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டீர்கள் என்று கேட்டேன்.
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி.—** தலைவரவர்களே, திரு ஹண்டே அவர்கள் இதே விஷயத்தைத்தான் சொல்ல வேண்டுமென்று கருதியிருந்ததாகச் சொன்னார்கள். அவர் சொன்னால் என்ன, நான் சொன்னால் என்ன ? அவர்கள் கடைசியாகச் சொல்ல வந்ததாக ஒரு கருத்தைக் குறிப்பிட் டார்கள்; அது உண்மைதான். உற்பத்தி பெருகினால்தான் இப்படிப்பட்ட பணப்புழக்கம் ஏற்படுகிறது. இப்படி ஏற் படுகிற நேரத்தில் பொருளாதார வளர்ச்சியும் பெருகிட வேண்டும்.
அந்தப் பெரிய இடைவெளியைத்தான் நான் இங்கே சுட்டிக் காட்டினேன்.
அது மாத்திரமல்ல, இன்னும் சில காரணங்கள் இருக் கின்றன. விலைவாசி உயர்வுக்கு, மேலும் ஒரு பெரிய காரணமாக இருப்பவர்கள் வரி ஏய்ப்பவர்கள். நாட்டில் இந்த வரி ஏய்ப்பவர்களிடமிருக்கிற கறுப்புப் பணம்— “அன் அக்கெளண்டட் மணி” புழக்கத்திற்கு வராமலேயே அடிபட்டு விடுகிற காரணத்தால் விலைவாசி உயர்கிறது. நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்தக் கறுப்புப் பணக்காரர்களே—அன் அக்கெளண்டட் மணி வைத்திருப்பவர் களே—வெளியே கொண்டு வருகின்ற அந்தப் பொறுப்பும் நமக்கில்லை என்பதும், அது மத்திய அரசிடம்தான்
இருக்கிறது என்பதும், அதன் காரணமாக நாட்டில் என் னென்ன மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன என்பதும் யாரும் அறியாதவை அல்ல.
**திரு. ஆர். பொன்னப்ப நாடார்:—** தலைவரவர்களே, கறுப்புப் பணம் எப்படி விளையாடுகிறது என்பதை முத லமைச்சரவர்கள் விளக்குவார்களா ?
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி:—** அதைப் போலவே உற்பத்தியைப் பற்றிச் சொன்னார்கள். இன்றைக்கு நமது தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், அரிசியை உற்பத்தி செய்கிறோம். அதே நேரத்தில் அரிசி விலையைக் கட்டுப் படுத்தக்கூடிய அந்தச் சூழ்நிலை நமக்கு இருக்கிறது. வேறு மாநிலங்களுக்குச் செல்லாமல் அப்படிக் கட்டுப் படுத்து கிறோம். மற்ற உணவுப் பண்டங்களில் பெரும்பாலானவை அப்படி அல்ல. நமது மாநிலத்தின் கட்டுப் பாட்டிற்குள் இருக்கிற காரணத்தால் உணவுப் பண்டங்களிலே மிக முக் கியமான அரிசி விலையை நாம் கட்டுப்படுத்தி வைக்க முடிகிறது.
அப்படி இல்லாத காரணத்தால்—பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களுக்கெல்லாம் நாம் வேறு மாநிலங்களே நம்பியிருக்க வேண்டிய காரணத்தால்—இந்தச் சூழ்நிலை இந்தியா முழுமைக்குமாகப் பரவிக்கிடக்கின்ற காரணத்தால்—இப்பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்து
கின்ற சூழ்நிலை இல்லாத காரணத்தால்—தீர்க்க முடியாத சங்கடத்திற்கு நாம் ஆளாகி இருக்கிறோம்.
இந்தக் காரணங்களால் தான் பருப்பு போன்ற தானிய வகைகளை எல்லாம் தமிழ்நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டுமென்று முனைப்போடு, முயற்சியோடு இருக்கிறோம் என்று நிதி நிலை அறிக்கையிலும், கவர்னருடைய பேருரையிலும் இந்த அரசின் சார்பாக எடுத்துக் காட்டியிருக்கிறோம். மத்திய அரசே பொறுப்பு என்று கூறிவிட்டு மாநில அரசு எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ளாமலிருந்து விடுமென்று யாரும் கருத்தத் தேவையில்லை. இயன்ற அளவிற்கு எல்லாப் பொறுப்புக்களையும் எடுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் என்னென்னவழி வகைகளைக் கையாள முடியுமோ அத்தனை வழிகளையும் இந்த அரசு கையாளு
மென்று உறுதி மொழியை மிக மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில், இந்த மாமன்றத்திற்கு மிகுந்த பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மின்வெட்டு
