சட்டப் பேரவையில்
பகுதி 2 · 2 / 7
இதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டுமானால், விவசாய வருமான வரியில் நாம் செய்திருக்கிற மாற்றங்கள் மறந்து விடக்கூடாது. 5 ஏக்கர் வரையிலே நஞ்சைக்கும், புஞ்சை நிலத்திற்கும் அடிப்படை நிலத் தீர்வை இல்லை என்று நாம் அறிவித்துவிட்ட பிறகு, பணப்பயிர்கள் செய்துகொண்டிருக் கிற வசதிபடைத்த விவசாயிகளுக்கு விவசாய வருமான வரியை நாம் இங்கே உருவாக்கி, அதன் மூலமாகக் கொஞ்சம் அதிகமான பணத்தைப் பெறுகிறோம். அதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்வது மாத்திரம் போதாது. இந்த நில வரியைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு ஆண்டுக்கும் எவ்வளவு கிடைக்கின்றது என்ற கணக்கை விட, ஒவ்வொரு 5 ஆண்டுக் காலத்திற்கும் சராசரி எவ்வளவு கிடைத்திருக் கிறது என்பதைக் கணக்கிட வேண்டும். ஏனென்றால், சில ஆண்டுகளில் வரிவஜா அல்லது தவணை என்கின்ற இவை களெல்லாம் வந்து சேரும். ஆகவே, ஒரு ஐந்தாண்டுக் கணக்கை எடுத்துப் பார்த்து, சராசரி பார்த்தால், 1966-67 முடிய திரு காசிராமன் குறிப்பிட்டுக் காட்டிய 1966-67 முடிய உள்ள ஐந்து ஆண்டுகளுக்கு நில வரியின் கீழ்ச் சராசரி வரு வாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ.
8 கோடி. அதுபோல 1973-74-ஆம் ஆண்டோடு முடிவடைகிற ஐந்து ஆண்டுகளுக்குச் சராசரி நில வரி வருவாய் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 6·3 கோடி. ஆகவே, ரூ. 2 கோடி அளவுக்குக் குறைந்திருக்கிறது. அடிப்படை நில வரியை ரத்துச் செய்ததன் காரணமாகச் சாதாரண விவசாயி களுக்கு இந்தச் சலுகைகள் மூலம் பயன் கிடைத்திருக்கிறது. இன்னும் போகப்போக இந்த வரியின் மூலம் கிடைக்கின்ற தொகை குறையக்கூடுமே அல்லாமல், அதிகரிப்பதற்கு வாய்ப்பு வசதிகள் இல்லை என்பதனையும் நான் தெரி வித்துக் கொள்கிறேன்.
தொழில் அபிவிருத்தி
நம்முடைய பழைய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய கம்பம் தொகுதியைச் சேர்ந்த திரு கோபால், அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். “1965-66-ல் தொழில் அபிவிருத்திக்காக ரூ. 6·56 கோடி ஒதுக்கப்பட்டது; 1973-74-ல் ரூ. 4·48 கோடி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்கள்.
அவர்கள் பட்ஜெட் மெமொராண்டம் பக்கம் 37-ஐப் பார்ப்பார்களேயானால் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். எண். 35—“தொழில்கள்” என்ற தலைப்பில் ஒதுக்கப்பட்டிருக்கிற தொகை 1965-66-ஆம் ஆண்டுக்கு ரூ. 6·56 கோடி ஆகும். வரும் ஆண்டில் அதே எண். 35-ல் தொழில்கள் என்ற தலைப்பில் ஒதுக்கப்பட்டிருக்கிற தொகை ரூ. 7·50 கோடி ஆகும். தொழில்கள் என்ற தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை நான்கு கோரிக்கைகளின் கீழ் வருகிறது என்பதையும் மறந்து விடக்கூடாது.
சென்ற ஆண்டையும், அதற்கும் முந்திய ஆண்டையும் பார்த்தால், இரண்டு, மூன்று ஆண்டுகளாகத் தான் இம்மாதிரித் தனித் தனியாகக் கோரிக்கைகள் வைக்கப் படுகின்ற ஒரு முறையை நாம் கடைப்பிடித்து வருகிறோம். இந்தக் கோரிக்கைகளையெல்லாம் சேர்த்துத்தான் 1965-66-ல் திரு கோபால் அவர்கள் சொன்னது போல் ரூ. 6·56 கோடி தொழிலுக்காக ஒதுக்கப்பட்டது. இதில் ஒரு கோரிக் கையை மாத்திரம் எடுத்துச் சொல்வது சரியல்ல. ஆனால் ‘டான்ஸி’ நிறுவனத்திற்கு ரூ.
3·35 கோடி ஒதுக்கியதும் அடங்கியிருக்கிறது. இப்பொழுது டான்ஸி நிறுவனத்தின் மூலம் செலவழிக்கப்படுகின்ற தொகை ரூ. 7 கோடி, அதிலே இது அடங்காமல் தனியாகச் செலவழிக்கப்படுகிறது. இது மாநில நிதி நிலை அறிக்கையில் இப்பொழுது தொழில்களுக் காக ஒதுக்கப்பட்ட ரூ. 7·5 கோடிக்கும் மேற்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே இந்த இரண் டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 1965-66-ல் ரூ. 6·56 கோடி தொழில் வளர்ச்சிக்காகச் செலவிடப்பட்டது என்பதற்கு மாறாக இப்பொழுது சுமார் ரூ.
15 கோடி அளவில் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை புலனாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரியில் பங்குத் தொகை
திரு ஜேம்ஸ் அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையின் மீது பேசினார்கள். அவர்கள் இந்த நிதி நிலை அறிக்கையை இங்கு சமர்ப்பிப்பதற்கு முதல் அமைச்சருக்கு உரிமையே கிடையாது என்று பேசினார்கள். நல்ல வேளையாக அப்படிப்பட்ட தகுதியற்ற ஒருவர் நிதிநிலை அறிக்கையை இங்கே வைத்த காரணத்தினால், அதிலே தான் பேச முடியாது என்று சொல்லிவிடாமல், என்பால் அன்பு வைத்து, அவர்கள்
இந்த நிதி நிலை அறிக்கையில் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களையெல்லாம் எடுத்துச் சொன்னதற்கு, திரு ஜேம்ஸ் அவர்கள் இங்கே இப்பொழுது இல்லாவிட்டாலும், திரு பொன்னப்ப நாடார் அவர்களின் மூலம் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். “1966-67-ஆம் ஆண்டில் ரூ. 194 கோடி வருமானம் இருந்து மாநில அரசுக்கு. 1973-74-ல் ரூ. 465 கோடி வருமானம் மாநில அரசுக்கு என்று சொல்லிவிட்டு 465-லிருந்து 194-ஐக் கழித்தார்கள்.
கழித்து ஆக 271 கோடி ரூபாய் அதிகமாக மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. ஆக வருமானம் முழுவதையும் வரி என்று கணக்கில் எடுத்துக்கொண்டு ரூ. 465 கோடி வரி இப்பொழுது, 1966-67-ல் ரூ. 194 கோடி வரி, ஆக 465-ல் 194 போனால் ரூ. 271 கோடி என்று கணக்கிட்டு ஒன்றைச் சொன்னார்கள். இது சுலபமான வாதம். “7-ம் 8-ம் 15”, என்று சொல்கிறார்கள். நாம் அதை மறுக்கிறோம். “7-ம் 8-ம் 15 என்பதை எப்படி மறுக்கிறாய்?”
என்று கேட்கிறார்கள்.
சரியான கணக்கா ?
நாம் சொல்கிற சந்தேகம் எல்லாம் 7-ம், 8-ம் 15 தான், ஆனால் 7-ஐ நீங்கள் எப்படிக் கணக்கிட்டிருக்கிறீர்கள் என்றால், 4-ம் 2-ம் ஏழு என்று கணக்கிட்டு, பிறகு 7-ம், 8-ம் 15 என்று சொல்கிறீர்கள் என்றுதான் பதில் அளிக்கிறோம். அந்த வகையில் திரு ஜேம்ஸ் அவர்கள் குறிப்பிட்ட ரூ. 194 கோடி மாநில அரசுக்கு வரி மூலமாக 1966-67-ல் வருமானம் வந்திருக்கிறது என்பது; அதுவும் தவறு. 1973-74-ல் ரூ. 465 கோடி, வரி மூலம் வந்தது என்பது; அதுவும் தவறாகும்.
இந்த வருமானத்தில் பல இனங்கள் சேருகின்றன. 1966-67-ல் ரூ. 29 கோடியாக இருந்த மத்திய வரியில் பங்கு இப்பொழுது ரூ. 96 கோடியாக உயர்ந்திருக்கிறது. அம்மையார் அவர்களுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கும். பாருங்கள், 1966-67-ல் மத்திய அரசு ரூ. 29 கோடி தான் கொடுத்து, இப்பொழுது ரூ. 96 கோடி கொடுக்கிறது; இப்படிக் கொடுத்தும் கூடக் கருணாநிதி மாற்றாந்தாய் மனப்பான்மை என்று சொல்கிறாரே, இது நியாயமா, என்று கேட்பதற்கு அவர்களுக்கு மேடைக்கு ஒரு சரியான பாயிண்ட் கிடைத்தது என்று கருதுகிறேன்.
ஆனால், நான் சொல்ல விரும்புவதெல்லாம், தமிழ்நாட்டிலும் சேர்த்து வசூல் பண்ணுகின்ற வரிப் பணத்திலிருந்துதான் மத்திய அரசு பங்குத் தொகையை அளித்து வருகிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மத்திய அரசின் மூலம் ரூ. 29 கோடி வந்த வரிப் பங்கு, இப்பொழுது ரூ. 96 கோடியாக உயர்ந்திருக்கிறது. 1966-67ல் ரூ. 23 கோடியாக இருந்த மத்திய அரசினுடைய உதவித்
தொகை இப்பொழுது ரூ. 54 கோடியாகியிருக்கிறது. 1966-67-ல் வரி தவிர்த்த வருமானம், அதாவது நான்-டாக்ஸ் ரெவின்யூ, ரூ. 46 கோடியாக இருந்தது. அது இப்பொழுது ரூ. 89 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதையெல்லாம் கழித்துப்பார்த்தால் 1966-67-ல் வரி ரூ. 194 கோடி அல்ல.
வருமானம் ரூ. 194 கோடி. அதிலே வரி மாத்திரம் ரூ. 95 கோடிதான் 1966-67ல். அதைப்போலக் கழித்துப் பார்த்தால் இப்பொழுது மாநில வரி ரூ. 225 கோடி. 1966-67-ல் ரூ. 95 கோடி வரி, இப்பொழுது மாநில வரி ரூ. 225 கோடி. இது எந்தப் புதிய வரிகளையும் தாங்க முடியாதவர்கள் மீது போட்டு உயர்ந்த வரி அல்ல என்பதையும் இந்த அவையிலே பல நேரங்களில் அமைச்சர்களும் நானும் எடுத்து விளக்கியிருக்கிறோம்.
பழைய வரிகளைச் சிறிது உயர்த்தியதாலும், சீரமைப்புகள் பலவற்றைச் செய்ததாலும், நாட்டில் நம்முடைய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இவைகளிலே நாம் உண்டாக்கிய முன்னேற்றங்களினாலும் ரூ. 95 கோடி என்கின்ற அந்த வரி 7 ஆண்டுக் காலத்தில் ரூ. 225 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த 7 ஆண்டுக் காலத்தில் இவ்வளவு உயரலாமா? ஒரு நல்ல கேள்வி. ரூ. 95 கோடியாக இருந்த வரி 7 ஆண்டுக் காலத்தில் ரூ. 225 கோடியாக உயரலாமா என்பது நல்ல கேள்விதான்.
அதே நேரத்தில் 1967-க்கு முன்பு ஒரு 7 ஆண்டுக் காலம் நாம் பின் நோக்கிச் சென்று பார்க்க வேண்டும். 1967-க்கு 7 ஆண்டுக்கு முன்பு 1959-60-ல் ரூ. 39 கோடியாக இருந்த வரி, 1966-67-ல் ரூ. 95 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 2·45 மடங்கு அதிகம்
1959-60-ஐக் காட்டிலும் 1966-67-ல் உயர்ந்த வரி 2·45 மடங்கு அதிகம். அதை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த 7 ஆண்டுக் காலத்தில் 95 கோடி ரூபாயாக இருந்து 225 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது 2·36 மடங்கு தான் அதிகம் என்பதை நன்றாகப் புலப்படுத்தும். ஆகவே முந்தைய ஏழாண்டுக் காலங்களிலே பார்க்கிறபோது 2·45 மடங்கு உயர்ந்திருக்கிறது; இப்பொழுது ஏழாண்டுக் காலங்களிலே 2·36 மடங்குதான் உயர்ந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
**திருமதி த. ந. அனந்தநாயகி :** இந்த 6, 7 ஆண்டுக் காலங்களிலே 6 ஆண்டுக் காலத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 1967-லிருந்து 1973 வரை 130 கோடி ரூபாய் அளவுக்கு வரியிலே உயர்வு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்பதுதான் கேள்வி.
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** ஒப்புக்கொள்ளா விட்டால் வரி வராதே !
பத்திரிகை விளம்பரம்
**டாக்டர் எச். வி. ஹண்டே :** மதிப்புக்குரிய முதலமைச்சரவர்கள் திரு கோபால் அவர்கள் பேசியதற்குப் பதில் சொன்னார்கள். கோபால் அவர்கள் இன்னும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். விளம்பரத்திற்கு ஏராளமான பணம் செலவு செய்கிறார்கள்; அது எதற்காக என்று சொன்னார்கள். அதற்குப் பதில் என்ன ?
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** திரு ஹண்டே அவர்களுக்கு இவ்வளவு அவசரம் கூடாது. அடுத்த பாயிண்ட் அதுதான். திரு கோபால் அவர்கள் சொன்னார்கள்; குறித்து வைத்திருக்கிறேன். அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது—இரண்டாண்டுக் காலத்திலே பத்திரிகை விளம்பரச் செலவுகளுக்காக ரூபாய் 2·18 இலட்சம் என்றும், அது இப்போது அதிகமாகிவிட்டது என்றும் திரு கோபால் அவர்கள் குறிப்பிட்டார்கள். முதலிலே ஒரு விளக்கத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சிட்கோ, சிப்காட், சுற்றுலா வாரியம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை இல்லை. இப்போது இந்த நிறுவனங்களின் சார்பாகவும் விளம்பரங்கள் தரப்படுகின்றன. அது மட்டுமல்ல. 1969-க்குப் பிறகு பத்திரிகைகளின் விளம்பரக் கட்டணங்களே உயர்த்தியிருக்கிறார்கள். திரு கோபால் அவர்கள் பேச்சைக் கட்டம் கட்டிப்
போட்ட பத்திரிகைகளுக்கே கூட இது நன்றாகத் தெரியும்: பத்திரிகை விளம்பரக் கட்டணங்களே உயர்த்தி யிருக்கிறார்கள். அப்படியே இருந்தாலுங்கூட திரு கோபால் அவர்கள் சொன்னது தவறான கணக்காகும். அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்து ஆட்சிபுரிந்த இரண்டாண்டுக்காலத்தில் 2·18 லட்சம் ரூபாய்தான் விளம்பரங்களுக்குச் செலவிட்டார்கள் என்பது தவறு, முற்றிலும் தவறு. 1967-68-ல் மாத்திரம்—அண்ணா அவர்கள் ஆட்சிபுரிந்தபோது—5,20,945 ரூபாய், 1968-69-ல் 8,09,151 ரூபாய்.
ஆக 13 லட்சத்திற்கு மேல் அந்த இரண்டாண்டுக் காலத்தில் விளம்பரத்திற்காக அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தரப்பட்டிருக்கிறது. 1969-70-ஆம் ஆண்டிலே 12 லட்சம் ரூபாய், 1970-71-ஆம் ஆண்டில் 20,43,000 ரூபாய், 1971-72-ல் 24,83,000 ரூபாய். இந்த மூன்று, நான்கு ஆண்டுக் காலத்தில் விளம்பரத்திற்காக மொத்தம் செலவிட்ட தொகை 57 லட்சம் ரூபாய். இதிலே அவர்கள் குறிப்பிட்டார்கள்—1½ லட்சம் ரூபாய்க்கோ, 2 லட்சம் ரூபாய்க்கோ முரசொலிக்கு விளம்பரம் தந்து விட்டார்கள் என்று.
உண்மை. 57 லட்சம் ரூபாயில் 1½ அல்லது 2 லட்சம் ரூபாய் முரசொலிக்கு விளம்பரம் தந்து போக மிச்சம் உள்ள 55 லட்சம் ரூபாய் மற்றப் பத்திரிகைகளுக்கு விளம்பரத்திற்காகத் தரப்பட்டிருக்கிறது. ஆகவே, ஒரு பெரிய தவறு நடந்து விட்டதாக யாரும் சொல்லமுடியாது.
**DR. H. V. HANDE :** முரசொலிக்கு விளம்பரம் கொடுத்ததற்காக நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், சர்க்குலேஷன் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கோபால் அவர்கள் இங்கே சொன்னார்கள். நானும் அதுதான் சொல்லுகிறேன்.
What is the basis on which the advertisement is given. What is the circulation of ‘Murasoli’ and whether the advertisement is proportionate to its circulation. That is the only question I want to ask and if the Hon. Chief Minister gives the figures, it would be more useful to the House and also we would be having no objective assessment of the problem.
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** நான் சொல்கிறேன் அதைப்பற்றி. விளம்பரச் செலவு இங்கே மாத்திரம் உயர்ந்திருக்கவில்லை. மத்திய அரசிலே பார்த்தால்கூட 1963-64-ல் 55 இலட்சம் ரூபாயாக இருந்தது 1971-72-ல் 115 இலட்சம் ரூபாயாக அங்கே உயர்ந்திருக்கிறது. எந்த அடிப்படையிலே தரப்பட வேண்டுமென்று சொன்னார்கள். அன்றைக்குச் செய்தித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் எந்த அடிப்படையில் தரவேண்டும் என்ற கருத்தைச் சொன்னார்கள் என்றால், அதைப் படிக்கிறேன்—கேட்டுக்கொள்ளுங்கள்.
டிசம்பர் மாதம் 8-ஆந்தேதி புதுடில்லியில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசும்போது, “அரசாங்க விளம்பரச் சாதனங்கள் அரசாங்கத்தினுடைய கொள்கைகளைப் பரப்புவதற்குத்தான் பயன்படுத்த முடியுமே தவிர, அரசாங்கத்தின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களுக்காக அல்ல” என்பதை இந்தியப் பிரதமர் தெரிவித்தார். இன்னும் சொன்னார்: “மக்கள் ஒரு அரசாங்கத்தை—அவர்களுடைய கொள்கைகளை அமல் நடத்துவதற்காகத் தேர்ந்தெடுத்து இருக்கும்போது, அந்த மக்களுடைய வரிப் பணத்திலிருந்து செலவு செய்யக்கூடிய இந்த விளம்பரம், அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்கின்ற முறையில் இருக்க வேண்டும்” என்றும் பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஆனாலும் கூட, இந்தியப் பிரதமர் அவர்கள் தெரிவித்த அதே கொள்கையிலேதான் இங்கே விளம்பரங்கள் தரவேண்டுமென்று நான் வைத்தமுறையில் இல்லாமல், கொள்கை வேறுபாடு இருந்தாலும், அவதூறு—பொய்யாக—இந்த அரசாங்கத்தை இழித்தும் பழித்தும் வேண்டுமென்றே செய்திகளை வெளியிடுகிற பத்திரிகைகளை ஒதுக்கி விட்டு, மற்றப் பத்திரிகைகளுக்கு விளம்பரம் தருகிறோம். இந்திரா காந்தி அவர்கள் சொன்ன அந்தக் கொள்கை வேறுபாடு என்கிற அந்த அடிப்படையில்கூட இல்லாமல் எல்லாப் பத்திரிகைகளுக்கும் இந்த அரசாங்கம் விளம்பரம் தந்துகொண்டிருக்கிறது.
**திருமதி த. ந. அனந்தநாயகி :** அப்படியென்றால் நியூட்ரல் பேப்பர்ஸ் எத்தனையோ இருக்கின்றன. அவைகளுக்குக் கொடுத்திருக்கலாம். தனிப்பட்ட பத்திரிகைகளுக்கு மட்டும் என்றில்லாமல் மக்கள் மத்தியிலே ‘நியூஸ் வால்யூ’ இருக்கின்ற பத்திரிகைகளும் இருக்கின்றன. அவைகளுக்குக் கொடுக்கலாம். உங்கள் கட்சிப் பத்திரிகைகளுக்கு மட்டும் கொடுக்கிறீர்கள் என்றால் இது நியாயமா ?
