சட்டப் பேரவையில்
பகுதி 1 · 1 / 7
சட்டப் பேரவையில்
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :**
மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்த மாமன்றத் தில் வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை மீது காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் பொன்னப்ப நாடார் அவர்கள் உட்பட 81 உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். 175 திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களில் 38 உறுப்பினர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் அல்லாத மற்றக் கட்சிகளைச் சேர்ந்த 58 உறுப்பினர் களில் 43 உறுப்பினர்களும், இந்த விவாதத்தில் கலந்து கொண்டு, அரிய கருத்துக்கள் பலவற்றை அவரவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற கட்சிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப இங்கு விளக்கியிருக்கிறார்கள்.
அந்தக் கருத்துக்களில் சாதக மான கருத்துக்கள், பாதகமான கருத்துக்கள் எவை இருந் தாலும் அவைகள் அனைத்தும் இந்த ஆட்சிச் சக்கரம் நல்ல முறையில் சுழல்வதற்குப் பயன்படும் என்ற வகையில் கருத்து அறிவித்த எல்லாக் கட்சியினுடைய உறுப்பினர் களுக்கும் நான் என்னுடைய நன்றியையும், பாராட்டுதலை யும் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.
வழக்கமாக ஆளுநர் உரையின்மீது நடைபெறுகிற விவாதம் ஆளுங்கட்சி உறுப்பினரால் பாராட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பெற்று, அதற்குப் பிறகு தொடங்கும். முதல் அமைச்சருடைய அல்லது நிதியமைச்சருடைய நிதிநிலை அறிக் கையின் மீது தொடங்குகிற விவாதம் வழக்கமாக எதிர்க்கட்சி முதலில் எதிர்த்துப் பேசி, பிறகு தொடங்கும். ஆனால் முதல் தடவையாக என்று நான் கருதுகிறேன். இந்த மாமன் றத்தில் ஆளும் கட்சியின் சார்பிலும் தொடங்கப் பெறாமல் மரபுவழி எதிர்க்கட்சியின் சார்பிலும் தொடங்கப் பெறாமல், தோழமைக் கட்சியின் சார்பில் இந்த விவாதம் தொடங்கப் பெற்று, ஆக, ஆரம்பத்திலேயே இதற்கு எதிர்ப்பு இல்லை என்கிற அளவில் இந்த விவாதம் தொடங்கியிருப்பதைக் காண நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர் வகாப் அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையை ஆதரித்துப் பேசி, நல் வாழ்த்துக்களைக் கூறி, விவாதத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
திரு தங்கமணி வழக்கு
இங்குப் பேசிய கட்சித் தலைவர்களும், சில உறுப்பினர்களும், என்னுடைய அருமை நண்பரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யினுடைய தலைவருமான கே. டி. கே. தங்கமணி அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அவர்களுடைய கருத்துக்களைக் கூறுவதற்கு முடியாமல் தடுக்கப்பட்டு விட்டார்கள் என்ற கருத்தினை எடுத்துச் சொன்னார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேசியபோது, எனக்கு அது புரிந்தது. சுதந்திரக்
கட்சியின் சார்பில் திரு ஹண்டே அவர்கள் பேசும்போது அது எனக்குப் புரிந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் தவிர மற்ற வர்கள் பேசும்போதும் அது எனக்குப் புரிந்தது. ஆனால், பழைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு பொன்னப்ப நாடார் அவர்களும், வேறு சிலரும் பேசிய நேரத்தில் எனக்கு அது புரியவில்லை. ஏனெனில், இங்கே சுதந்திரக் கட்சியோ, கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது ஆளும் காங் கிரஸ் கட்சியோ தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆட்சிப் பொறுப்பை இது வரையில் ஏற்றுக்கொண்டு இருந்த கட்சிகள் அல்ல.
ஆனால், நம்முடைய பொன்னப்ப நாடார் அவர்களுடைய காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை 20 ஆண்டுக் காலம் அரசோச்சிய கட்சியாகும். அந்தக் கட்சியின் சார்பில் நம்முடைய நிறுவன காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் என்னை 62 நாட்கள் பாளையங்
கோட்டைச் சிறைச்சாலையில் பூட்டிவைத்து இங்கே சட்டசபை நடத்துவதற்குத் துணையாக இருந்தவர்கள். நம்முடைய மாண்புமிகு கல்வியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தண்டிக்கப்பட்டுச் சென்னைச் சிறைச்சாலையில் இருந்தபோது, அவர் தலைமை வகிக்கும் கண்காட்சிக்குழுவிற்கு ஒரு நாள் வந்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று, அந்தக் குழுவை நடத்தி வைக்க ஒரு நாள் விடுமுறை கேட்டபோது, அதற்காக வெளியே வந்துவிட்டுப்போக அனுமதி கேட்டபோது, அதை மறுத்த அன்றைய பழைய காங்கிரஸ் கட்சியினுடைய போக்குக்குத் துணையாக இருந்த பொன்னப்ப நாடார் அவர்கள் அதைப்பற்றிப் பேசும்போதுதான் எனக்கு வேடிக்கையாக இருந்தது.
ஆனால், நடைபெற்றிருப்பது என்ன? திரு தங்கமணி அவர்கள் மீது ஒரு வழக்கு. நான் அந்த வழக்கின் சாராம்சத்திற்குள்ளே நுழையவிரும்பவில்லை, அது நீதிமன்றத்தின் படிக்கட்டிற்குச் சென்றுவிட்ட காரணத்தால். ஏன் அதை அரசு திரும்பப் பெற்றுவிடக்கூடாது என்று திரு ஹண்டே அவர்கள் கேட்டார்கள். அது வேறு பிரச்சினை. ஆனால், அவருக்கு நீதிமன்றத்தில் தரப்பட்டிருக்கும் நிபந்தனை, அவர் சென்னையில் தங்கியிருக்கலாம் என்பது தான்.
சென்னையிலே தங்கியிருக்கலாம் என்று அளிக்கப்பட்டிருக்கும் அந்தத் தீர்ப்பு எப்படிச் சட்டசபைக்கு அவர் செல்லக்கூடாது என்று தடுக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. சென்னையில்தான் சட்டசபை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் நடந்தது போல் உதகமண்டலத்தில் சட்டசபை நடந்து, சென்னையில் தங்கமணி தங்கியிருக்கவேண்டுமென்று சொன்னால், ஐயோ, சட்டசபைக்கு அவர் வர முடியாமல் தடுத்துவிட்டார்களே என்று ஆதங்கப்பட நியாயம் இருக்கமுடியும்.
சென்னையில் சட்டமன்றம் நடந்துகொண்டு இருக்கிறது.
தீர்ப்பு என்ன?
நம்முடைய நண்பர் திரு. ஹண்டே நேற்றே அதற்கு முதல் நாளோ என்று கருதுகிறேன்—இன்று பார்த்துக் காட்டிய நண்பர் தங்கமணி அவர்களின் கடிதத்தை என்னிடம் காட்டி, அவர் சட்டசபைக்கு வருவதற்கு விரும்புகிறாரே, ஏன் அவர் ஜாமீன் கோரினால் விட்டுவிடக்கூடாதா? என்று கேட்டார்கள். நான் உடனே, அவரிடத்தில் சொன்னேன்; அது என் கையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அது நீதிமன்றத்தில் இருக்கும் விஷயம். ஆனால் நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன்.
அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் தீர்ப்பில், அவர் சென்னையில் தங்கியிருக்கலாம் என்று இருக்கிறது. சட்டசபை நடவடிக்கைகளுக்கு வர எந்தத் தடையுமில்லை என்று சொன்னேன். ஓகோ அப்படியா, என்று கேட்டுக்கொண்டார். ஆறுதல் பெற்றுச் சென்றார். இங்கே பேசுகிறபோது அவர் அப்படித்தான் பேச வேண்டும்; பேசினார். ஆனால் அவர்கள் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்தெடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்களே அதிலும்
பொன்னப்ப நாடார் அவர்கள் சொன்னபோது நான் உள்ளபடியே வியப்பு அடைந்தேன். இப்போதும் நாட்கள் ஒன்றும் ஆகிவிடவில்லை. இந்த மாமன்றம் இந்த மாதம் இறுதி வரையிலும், அதைத் தாண்டி ஏப்ரல் திங்கள் முதல் வாரம் வரையிலும் கூட நடைபெறக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. இதிலே கலந்து கொள்ளும் வாய்ப்பினை திரு கே.டி.கே. தங்கமணி அவர்கள் பெறமுடியும்.
நிதி ஆணைக் குழு
இந்த நிதி நிலை அறிக்கையில் பேசிய மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் நான் கோடிட்டுக் காட்டி இருக்கின்ற ஒரு முக்கியமான விஷயத்தில் கொஞ்சம் கருத்து வேறுபாடு கொண்டார்கள். குறிப்பாக திரு செளடி சுந்தரபாரதி அவர்களும், வேறு சில உறுப்பினர்களும் நிதி ஆணைக் குழு, தலையாய இடத்தை மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பெற வேண்டுமென்று நான் சுட்டிக்காட்டி இருக்கின்ற கருத்துக்களே அவர்கள், தங்களுக்கு இருக்கின்ற வேறுபாட்டுக் கருத்தின் மூலமாக மறுத்துரைத்தார்கள்.
திரு செளடி சுந்தரபாரதி அவர்கள் நிதி ஆணைக்குழு மூலமாக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற ஒரு கொள்கை சொல்லப்பட்டிருக்கிறது. அது ஒரு சரியான கொள்கையாக எனக்குத் தெரியவில்லை என்று இங்கே குறிப்பிட்டார்கள். நான் அவர்களுக்குச் சொல்லும் விளக்கம் எல்லாம், மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து நிதி பெற வழி வகுப்பதில் நிதி ஆணைக்குழுவே தலையாய இடம் பெறவேண்டுமென்றுதான் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறேனே அல்லாமல், திட்டத்திற்கு ஆகும் செலவுகளே நிதி ஆணைக்குழுவே கணக்கிலே எடுத்துப் பரிந்துரைக்க வேண்டும் என்பதும், நிதி ஆணைக்குழு வகுக்கும் கொள்கைக்கு ஏற்ப ஆண்டுக்கு ஆண்டு திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு உதவி அளிப்பதில் திட்டக்குழுவிற்குப் பொறுப்புக் கொடுக்கலாம் என்பதும் நம்முடைய கருத்தாகும்.
அதைத்தான் இந்த அறிக்கையில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நிதி ஒதுக்குவதில் திட்டக்குழுவிற்கு எந்த விதமான பங்கும் இருக்கக்கூடாது என்பது என்னுடைய வாதமல்ல.
மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு, நிதி ஆணைக்குழு கொடுக்கும் துண்டு மானியங்கள், இப்போதுள்ள நிலைமைகளில் நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி கொடுக்கப்படுகின்றன. அது அப்படியே இருக்க வேண்டுமென்று நாம் கூறுகிறோம். இவைகளே மாநில அரசு தன்னுடைய விருப்பப்படி செலவு செய்வதற்கான உரிமை பெற்ற அரசாக இருக்கிறது. ஆனால், திட்டக்குழு மாநிலத் திட்டச் செலவுகளுக்கு என்று ஒதுக்கும் தொகையில்—அதை அனைவரும் அறிந்து கொள்வது நலம் என்று கருதுகிறேன்—திட்டக்குழு மாநிலங்களுடைய திட்டச் செலவுகளுக்காக ஒதுக்குகின்ற
தொகையில், உதவியாகத் தருவது, கடன் உதவியாகத் தருவது 70 சத வீதம்; மானியமாகத் தருவது 30 சத வீதந்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலே நான் சொல்வது இந்த உதவி மானியத்தைப் பொறுத்தவரையில் நிதி ஆணைக்குழுவின் பொதுவான பரிந்துரைப்படி, திட்டக்குழு மாநிலங்களுக்குக் கொடுக்கவேண்டுமென்பதும், மத்திய நிருவாகச் சீரமைப்புக் குழுவின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது என்பதுமாகும். திட்டக் கடன் உதவி, பெரிய குறிப்பிட்ட திட்டப்பணிகளுக்குக் கடன் அளிப்பதற்கு அனைத்து இந்தியக் கடன் நிறுவனம் ஒன்று ஏற்படுத்தி அதிலே மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பது இந்த அரசினுடைய கருத்தாகும்.
மத்திய அரசின் சார்பில் மாநிலம் நடத்தும் பணிகள் உதவி, (Centrally sponsored schemes) மத்திய அரசின் பல துறைகள் தொடங்கும் திட்டங்களை மாநிலத்தில் மாநில அரசு நடத்துவதற்கு உதவி, ஆகியவைகளே எல்லாம் நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு உட்படுத்த வேண்டும், என்று தான் சொல்லி இருக்கிறோமேயல்லாமல் எல்லாவற்றையும் நிதி ஆணைக் குழுதான் வழங்க வேண்டும், திட்டக்குழு அந்தப் பணியைச் செய்ய வேண்டுமென்று நான் குறிப்பிடவில்லை.
பொதுச் சுகாதாரம்
இந்த நிதி நிலை அறிக்கையில் மாண்புமிகு உறுப்பினர்கள் பலரும் அவர்களுக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களைத் தங்களுடைய உரையில் குறிப்பிட்டார்கள். திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் ஒன்றைச் சுட்டிக்காட்டினார்கள். “பொதுச் சுகாதாரம் என்பதின் கீழ், வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு 12·45 கோடி ரூபாய் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இதற்கான செலவு 10·04 கோடி ரூபாய் என்று காட்டப்பட்டிருக்கிறது; குறைந்து இருக்கிறது” என்று குறிப்பிட்டார்கள்.
அதை அவர்கள் கவனித்து எடுத்துக் காட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அவர்களுக்கு நான் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வரவு செலவுத் திட்டத்தில் 12·45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டு இருப்பதில், குடும்ப நலத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கம் 3·86 கோடியாகும். இதை நீக்கி விட்டுப் பார்த்தால் 8·59 கோடி ரூபாய் தான் பொதுச் சுகாதாரத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. அதில் இப்போது ஒதுக்கப்பட்டிருக்கிற 10·04 கோடி ரூபாயில் இந்தக் குடும்ப நலத் திட்டத்திற்காகச் செலவு செய்யப்படுவது அதிலே சேரவில்லை.
**திருமதி த. ந. அனந்தநாயகி :** அதே நேரத்தில் அடுத்த பக்கத்தில் பார்த்தால் குடும்ப நலத் திட்டத்திற்காக 6 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அது எப்படி வந்தது?
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** அதைத்தான் நான் சொல்கிறேன் குடும்ப நலத் திட்டத்திற்காக 6 கோடி தனியாகப் போடப்பட்ட காரணத்தால் இதிலே அதைச் சேர்க்கவில்லை. பொதுச் சுகாதாரம் நிதி ஒதுக்கீடு 8·59 கோடி ரூபாய்; திருத்த மதிப்பீடு 10·04 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ள முடியும். பொதுவாக மருத்துவம், மக்கள் நல் வாழ்வு, குடும்ப நலத் திட்டம் என்ற மூன்று துறைகளுக்கும் 1972-73 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு 34·69 கோடி ரூபாய் மொத்த மதிப்பீடு; திருத்தப்பட்ட மதிப்பீடு 38·9 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது.
இது ‘பட்ஜெட் டெய்ல்ஸ்’ என்ற புத்தகத்தில் பார்த்தால் விளக்கமாகத் தெரியும்.
வேளாண்மைச் செலவு
திரு ஹண்டே அவர்கள் இதே போன்று இன்னொரு கருத்தைச் சொன்னார்கள். வேளாண்மைக்காகச் செலவிடப்படும் திட்டத் தொகை குறைந்து வருவதாகச் சொன்னார்கள். அதிலே இருப்பதை எடுத்துக் காட்டினார்கள். 1972-73 வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இதற்கு 619 இலட்சம் ரூபாய். 1972-73 திருத்த மதிப்பீடு நிதி ஒதுக்கீடு 564 இலட்சம் ரூபாய் என்று இருப்பதை அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். இதிலே திட்டச் செலவு, திட்டம் இல்லாத செலவுகள் என்று இரண்டு இருக்கின்றன.
நாம் அந்தக் குழப்பம் நீக்கப்பட வேண்டுமென்று அடிக்கடி நிதி நிலை அறிக்கையில் பேசுகிற நேரத்தில் எடுத்துச் சொல்லி வருகிறோம். திட்டச் செலவு, திட்டமில்லாத செலவு என்று இரண்டையும் சேர்த்துக்கொண்டு மொத்த செலவு எடுத்துக் காட்டப்படுகிறது. ஆனால் இந்த ரூ. 619 இலட்சத்தில் திட்டச் செலவு ரூ. 564 இலட்சம்; திட்டச் செலவு குறைந்து இருக்கிற அதே நேரத்தில் வேளாண்மைத் துறைக்கு திட்டம் இல்லாத செலவுகளின் மூலமாக நிறைய ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த 619 இலட்சம் ரூபாய் திட்டச் செலவோடு 1972-73-ல் நிதி ஒதுக்கீடு 20·16 கோடி ரூபாய்தான். ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீடு 24·18 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆகவே, அது குறைந்துவிடவில்லை; திட்டச் செலவு என்ற வகையில் பார்த்தால் திரு ஹண்டே அவர்கள் சொன்னது சரியாக வரும். ஆனால் திட்டச் செலவு, திட்டம் இல்லாத செலவு என்று இணைத்துப் பார்க்கிற நேரத்தில் பொதுவாக வேளாண்மைத் துறைக்கு நாம் செலவு செய்யும் பணம் எதுவும் குறைந்து விடவில்லை என்று நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு காசிராமன் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். அவர்கள் இங்கு இல்லா விட்டாலும், அவர்கள் சொன்ன கருத்து, பத்திரிகையில் வந் திருக்கின்ற காரணத்தினால் நான் அதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடமை உடையவனாக இருக்கிறேன். அவர்கள் எடுத்துக்காட்டிய குறிப்பு-1966-67-ல் நிலவரி, பாசன வரி, செஸ் வரி, விவசாய வருமான வரி இவைகள் எல்லாம் சேர்ந்து, இந்த அரசுக்கு இவைகளின் மூலம் மொத்தம் ரூ.
840 இலட்சம் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு அதே இனங்களில் இந்த அரசுக்குக் கிடைக்கும் தொகையும் ரூ. 840 இலட்சம் தான். எனவே இதில், மாற்றம் இல்லை. எந்த வரியும் குறைக்க வில்லை. ஆகவே நில வரியைக் குறைத்தோம் என்று சொல்லுவது ஒரு மாயை; ‘Myth’ என்று திரு காசிராமன் அவர்கள் அன்றைக்குக் குறிப்பிட்டார்கள்.
விவசாய வருமான வரி
