உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

தென்னவன் காதை

பகுதி 9 · 9 / 10

அம்புவியில் கண்டதில்லை இந்த முறை -

அம்புவில்லை யெடடா என்று

கும்பகர்ணன் கொதித்தெழுந்தான் !... அது கண்டு

குதித்தோடும் ராமன் தன்னை, கோழையே திரும்பு

என்றான்! கரும்போ உயிரென்று களிறு போல்

முழங்கி நின்றான்!

முடிக்கவில்லை அவன் பேச்சை!... முதுகுப் புறத்

தினிலே, சரமாரி பொழிந்து விட்டான்

இலக்குவனும்

ஆனையெனச் சாய்ந்துவிட்ட அன்புத் தம்பிதனை

சேனைதனை நடத்தி வந்த செந்தமிழன் கண்டு

விட்டான்!

சிந்தையெலாம் அணுவெல்லாம் தழல் பறக்கப்

பூனைகளே!... நில்லுங்கள் எனச் சொல்லிப்

பூட்டி விட்டான்... போர்க் கணையை!

குளிர் மேகம் கொட்டுகின்ற மழைதானோ?

கோடையிலே அதிர்கின்றன இடிதானோ? எனப்

புயல் வேகம் - புது வேகம் கொண்டு விட்டான்!

வேல்பட்ட புலி போல-விடுபட்ட கணைபோல-

அணை கெட்ட வெள்ளம் போல - ஆயிரம்

வாள்பட்ட மார்புடையான், போரிட்டான்!....

கால்பட்ட பிடரியுடன் கயவர்களும் மறைந்துபோனார்

ஒழிந்ததடா பகையென்று,நகை முழக்கம்

செய்துவிட்டுத் திரும்புகின்ற வழிதனிலே

ஒளிந்திருந்து ஆரியர்கள் ஓரம்பு வீசி விட்டார்.

மார்பினிலே பட்ட கணை வெட்டித் தள்ளி,

யாரடா கோழையென்று வாள் ஓங்கித் திரும்பி

முரசொலி-பொங்கல் மலர், 1956