தென்னவன் காதை
பகுதி 10 · 10 / 10
- விட்டான்!
ஓடுதற்கு வழியின்றிச் சிக்கிவிட்டஇராமன் கூட்டம்
தேடுதற்கும் தசையின்றிப் பஞ்சாய்ப் போகும்!...
கன்னலடா எந்தன் நாடு, அதை
இன்னலிலே மாட்டிவிட்ட உங்களுக்கு - இந்த
வாள்வீச்சு மின்னலடாஎனக்கூறிச்சுழற்றிவிட்டான்
சூறாவளி தனையும் சூழ்ந்தெதிர்க்கும்
கீர்த்தி பெற்றோன்!
இனி நிலைமை மோசமென்று, ஆரியக்
கனி சுவைக்கும் வீடணன் கண்டு விட்டான்!
ஈட்டியொன்று அவன் கையில்!... எறிந்து
விட்டான் அண்ணனது முதுகின் பக்கம்!
மறைந்திருந்து பறந்து வந்த அந்த ஈட்டி-அவன்
மலைப்பாறை முதுகினிலே, ஊடுருவி, மார்பகத்
-தில் தலை நீட்டிக்
-கண்ணீர் கொட்டும்!
இமயமலை சாய்வது போல், இராவணனும்
வீழ்ந்து விட்டான்!
"எனைக் கொன்றவன் என் தம்பி,
பனைமரத் தோளுடையான் - கையிலே
பார்ப்பனரின் தாளுடையான்-
உயிர் பிழைக்க மருந்துண்டு! - ஆனால் எந்தன்
உடன் பிறப்பு ஒளிந்திருந்து
போரிட்டான் எனக் கேட்டுச் சாகின்றேன்"
இது கேட்டுச் செத்தது போல் ஆகிவிட்டார்
இலங்கை மாந்தர்!
★
