தென்னவன் காதை
பகுதி 8 · 8 / 10
நான்,
சீதைக்கோர் மகன் தந்து, இலங்கைச் செங்கோலும்
அந்த மகனுக்கே தந்துவிட வேண்டுமென்று-
தீப்பந்தனைய நிபந்தனைகள் போடுகின்றார்,
தீய இராமனது கூட்டத்தார்!
பூப்பந்தனைய பொன் மகளாம்-என் துணைவி
பாப்புனையும் புலவர்க்கும் கிட்டா த பைந்தமிழாம்-
கோப் பெருந்தேவியவள், குளிர் நிலா! வைரக்
கட்டி !
அந்த யாழ் மீட்டும் பாணனுக்கு, சீதையெனும்
பாழ்பட்ட வீணை ஏன்? சிறிது
நாள்பட்டே நம் நாடும் ஆரியர்களின்
தாள் தொட்டு வணங்குதற்கு வழி திறவேன்!
விழி மூலம் வீரத்தைக் காட்டுகின்ற வீரர்காள்!
மொழி மீது ஆணை தந்து புறப்படுவீர்-
முள்ளம் பன்றிகளைப் பழி தீர்த்துத் திரும்பிடு
வோம்!"
என முரசறைந்தான், முதுகுன்றத் தோளுடை
யோன்!
அது கேட்டு அனைவருமே ஆர்ப்பரித்தார்!...
கொலை மணக்கும் போர்க்களத்தில்
இரு தரப்புப் படைகளுமே ரத்தங் கொட்டும்!
தலை நொறுங்கிச் செத்தவரும், குடல் கிழிந்து
போனவரும்
தமிழினத்தார் - ஒரு குலத்தார்!
மலையோரம், மரத்தோரம் மறைந்திருந்து
எலி போலட் போரிட்டான் எதிரி ராமன்!
