தென்னவன் காதை
பகுதி 7 · 7 / 10
பிழைப்போர் -
அவரை நத்திக் கிடப்போர்,
அனைவரையும் அரை நொடியில் அழித்துவிடப்
போர்க்கோலம் பூண்டு விட்டேன்!
புலிநிகர் நண்பர்களே!
பொல்லாத புரோகிதர்கள், படை இல்லாதவர்
என்றிருந்தேன்!
பாவையரைப் பாசறையாய் ஆக்கிக் கொண்டு
தேவையுள்ள படைகளெல்லாம் குவித்து விட்டார்.
கோவை இதழ், கொய்யாக் கன்னம்,
போர்வை உடல் கொண்டுவிட்ட இளங் குமரி
களால், இனத்திலுள்ள மன்னரெல்லாம்
இருடிகள்பால் சாய்ந்து விட்டார்!
முழு நிலவு முகங் காட்டி, முனிவர்களின் பெண்டாட்டி, முடி மன்னர்களை வாட்டி விட்டார் - தமிழ்க்
கொடி பறந்த கோட்டை யெல்லாம்
மடியேந்தும் ஆரியர்க்கு மடங்களாய்ப் போன தம்போ!!
அருமைத் தம்பிக்குத் தீமை சூழ்ந்து
ஆரண்யம் ஓடிவந்த இராமன்,
எருமைக்குமில்லாத தடித்த தோலன்
இழி சுக்ரீவன் இவனுக்குத் தோழன்,
அண்ணனுக்கு மரணம் தந்தோன் !
இன்னொருவன், அனுமன் எனும் துரோகியுடன்
இலங்கைக்குத் தீ வைத்த எந்தன் தம்பி!
இவர்கள் எல்லாம் எதிர்க்கின்றார் என்னை
யென்றால்,
இதிலேதோ மர்மம் இருக்கத்தான் வேண்டு
மன்றோ?
