தென்னவன் காதை
பகுதி 6 · 6 / 10
தம்பியின்
குரங்காட்டம் கண்டுவிட்ட தென்னவனும் - கண்கள்
குளங்காட்ட, "குலங்கெடுக்க வந்தவனே!
கோடரியின் பிடியே!.... கொடிய உன் நாக்கை
அறுத்தெறியாமல் இருந்ததற்கு நன்றி சொல்லி
நடந்திடுக" என நடந்தான் களம் நோக்கி!
★
ஒரு கருவில் ஊறிவிட்ட உத்தமனாம் - சிந்தனை
உறக்கத்தில் வல்லவனாம், எழில் —
கும்பகர்ணனெனும் தம்பி, அண்ணன்
இடையினிலே இருக்கின்ற உடை வாளைப் போலப்
படை மோதும் இடம் நோக்கிப் பின் தொடர்ந்
தான் பாய்ந்து!
கடைக் குட்டி தம்பியவன் எதிர்வந்து நின்றான்,
ஐடை கட்டி வாழுகின்ற ஆரியரை ஜெயிக்கப்
படை திரட்டிப் பயனில்லை- பாழாகும் என்றான்!
துரோகக் கடை கட்டி வாழுகின்ற தம்பியல்லநான்,
நாசத்தின் பிறப்பிடமே, நடைகட்டு என்றே
மடையுடைத்த வெள்ளம்போல் சீறிவிட்டுச்
சென்றான்,
★
“என்னருமை வீரர்களே! ஏற்றங் கொள்
தோழர்களே !
இன்றிந்தத் தென்னிலங்கை ஆண்டிருக்கும்
இராவணன் நான்—
இழிதொழிலோர் - பண்பிழந்தோர் - எத்திப்
