உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

தென்னவன் காதை

பகுதி 3 · 3 / 10

ஆகா தெனக் கண்டு விட்டதாலே

சின்னவனாம் இலக்குவனும் சீதையெனும்

மணையாளும்

பின் தொடரப் புறப்பட்டான் இராமனெனும்

மன்னன்.

தம்பிக்குக் கேடிழைத்து முடிசூட முனைந்து

நம்பிக்கைத் துரோகியென நாடெல்லாம் இகழக்

காடேகி விட்டவன் அந்த ராமன் எனும் கயவன்.

அவன் ஒரு நாள்,

காட்டோரம் திரியும்போது, கரும்பனைய

முத்துநகை

களைப்பினால் தூங்குகின்றாள் கனிமரச்

சோலையோரம்.

காமத்தால் கருத்திழந்த கசடனவன்,

கமலமலர்க் கண்மூடித் தூங்குகின்ற தூயவளை

துன்மார்க்கத்தால் கெடுத்திடவே—தம்பி

துணையோடு அருகே போனான்.

காவலுக்குக் கைக்காரி சீதாதேவி!

காவலின்றித் தூங்கிவிட்ட முத்துநகை,

கற்புக்கனல் காக்கக் கொதித்தெழுந்தாள்....

கனி மரம் போல் தனியொருத்தி—இருமந்தி!

என் செய்வாள்?

கற்புக்கு விலையாகக் கரமிழந்தாள்! மூக்கிழந்

தாள்! முத்துநகை கொட்டுகின்ற பல்இழந்தாள்!

அம்மவோ, முலையிழந்தாள்—ஆயினும் கற்பு

நிலையிழந்தாள் இல்லை!

தலையிழந்து போயினும் மானங் காக்கும் தமிழச்சி,

முரசொலி-பொங்கல் மலர், 1956