தென்னவன் காதை
பகுதி 2 · 2 / 10
தோற்ப தெல்லாம்... பத்தினியின் பள்ளியறைக்
கனி மொழியின் முன்னேதான்!
இமைக் கதவு உண்டே எழில் விழியைக் காப்பதற்கு;
அப்படித்தான்—இலங்கைக்கு இராவணன்!
அவனுக்கு அவள்!
காடுகளில் நமதெல்லைக் கோடுகளில் ஆரியர்கள்,
கடவுளுக்குப் பலிதேடும் வேலை, ஆகாது
கொடுமையென உருவினான் கொடுவாளை!
பர்ணசாலை அழைப்புக்கள் முத்தமிட்டன
அவன் தாளை, அந்தப்
பருவ மங்கையரின் சிரிப்போ பிளந்த பாளை!
அட, தொடுவேனோ ஆரியத்தேளை என
எதிர்ப்புக் குரல் கொடுத்தான் அந்தக் காளை!....
நரிகள் உள்ள காடெல்லாம், நயவஞ்சகர்
உலவும்
நாடெல்லாம் காவல்! காவல்! அந்தப் படைகளுக்கு
இராவணன், காலம் காட்டும் சேவல்! சேவல்!
★
தமிழரசி முத்து நகை இராவணனின் தங்கை,
தண்டகாரண்யத் தவசிகளை எதிர்த்து ஊதி
விட்டாள் சங்கை!
வேங்கையெனக் கிளம்பிவிட்டாள் வீரர்குல
மங்கை
வேத மோதிகளின் விழிகளிலே வழிந்திடுதே
கங்கை!
துரோகத்தால் சூழ்ச்சியினால் தமிழர்களைத்
தோற்கடிப்பதன்றிக் தோள் வலியால்
