உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

தலைகேட்டான் தம்பி

பகுதி 4 · 4 / 5

பத்தாயிரம் பொன் பரிசே!” என்றான்.

“தலையறுப்பதோ; என்ன குலை யறுக்கும் செய்தி இது!

*

அலையடிக்கும் கடல்வெல்லும் பரந்த உள்ளம்

தமிழ்க் கலை வடிக்கும் புலவர்க்கெல்லாம் கொடை நீரூற்று!

முதிரமலை கரைந்துவிடும் -

முடிமன்னன் தலைகொய்தால்-எம் உதிர மெலாம் உறைந்து விடும்”

எனச் சொல்லிக் காரி உமிழ்ந்தனர் காவலன் காட்டிய பொற்கிழியை!

கோத்திடும் தமிழ்மலர் கொற்றவன் தோளில்

சேர்த்திடும் நினைவுடன் புலவர் வந்தார்

சாத்தனார் அவர் பெயர் -குமணன் காட்டினில் இருப்பதை அறிந்து கவன்றார்.

*

பாலையிற் சோலையைக் கண்டது போலும்

மாலையில் தென்றலை மணந்தது போலும்

காலையில் கவிஞரைக் கண்டான் குமணன்,

ஓலையில் தமிழை உண்டான் மிகவே!

“அந்தநாள் வந்திலை அருங்கவிப் புலவோய்

இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய்

தலைதனைக் கொண்டுபோய்த் தம்பிகைக் கொடுத்து

விலைதனைப் பெற்றுன் வறுமை நோய் களையே!”

என்றான் குமணன்- எடுத்தான் வாளை

தடுத்தார் புலவர்- விடுத்தார் அடவி!

அடுத்தார் பேச்சால் அழிந்த தம்பி

*

எங்கே என்றார் - தொடுத்தார் கணைகள்

“தம்பியுடையான் படைக்கஞ்சான் என்றிருந்தான் அண்ணன்