உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

தலைகேட்டான் தம்பி

பகுதி 3 · 3 / 5

“கனிகள் உதிர் முதிரமலைத் தருக்கள் கண்டேன் -

செங் காய்கள் உதிர் தம்பி யுந்தன் வாயுங் கண்டேன்.

அணி மணிகள் எவை வேண்டும் எனக்கு?

அரண்மனையில் எது வேண்டும்

ஆனையென்ன சேனையென்ன அனைத்தையுமே எடுத்துக்கொள்..

அண்ணனுக்குத் தம்பியென்ற அன்பை மட்டும் கொடுத்துவிடு!”

எனச்சொல்லி; அழுதுவிட்டான் குமண வள்ளல் -

தம்பியிடம் விழுது விட்டு வளர்கின்ற பகை உணர்வோ அடங்கவில்லை.

பழுதுபட்டுப் போய்விட்ட உள்ளங் கொண்டோன் -

வானில் உழுது விட்டுப் போன செங்கதிரோன் திரும்புமுன்னே -

என் நாட்டைத் தொழுதுவிட்டுக் காடேகு என ஆணையிட்டான்;

*

குமணன் சென்று விட்டான்.

மானினமும் தேன்சிட்டும் மயில் குயில் மாடப்புறாவும்

மனித இனம் காட்டுகின்ற அன்பைவிடப் பெரிய அன்பை,

மன்னனிடம் காட்டியதால் மகிழ்ந்திருந்தான் - காட்டில்

கன்னல் மொழித் தமிழ் வழங்கப் புலவரில்லை;

நீங்கா இன்னல் அஃதொன்றே - வேறில்லை!

கொழுந்துவிட்ட துரோகத்தின் விளைவாகக்

கவர்ந்து விட்டான் செங்கோலைத் தன் கையில் தம்பி!

மகிழ்ந்தானா அந்த மட்டில்?

மனதில் அழுந்திவிட்ட பகையுணர்வைக் கிளறிவிட்டார் கொடிய நண்பர்!

“பொறுத்திருந்தேன் இது நாள் மட்டும் - என்மேல்

போர் தொடுக்க முனைந்து விட்டான் அண்ணன்.

தடுத்திடாதீர்; தம்பியென்னை;

அண்ணன் தலை, அறுத்தெடுத்து வருபவர்க்குப்