மறத்தி
பகுதி 3 · 3 / 5
குதிரைக் கால்கள் உடைபட்டன!
வேழப்படை முறிபட்டது! வேல்கள் பொடிபட்டன!
எம், கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை
கோடையிடியெனக் கேட்குது ! கேட்குது ! எனக்
குதித்திட்டாள் - புதுப்பண் அமைத்திட்டாள்!
★
★
★
வீரர்கள் வந்தனர் -வெற்றிஉன் கணவனுக்கே என்றனர்!
வேந்தனின் தூதுவர் வந்தனர் ! வாழ்த்துகள் வழங்கினர் !
வீட்டோரத்துத் தோழிகள் வந்தனர் - வெற்றி
நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர் ! அந்த அழகி,
ஆனந்தக்கண்ணீர் பொழிந்தாள் - அப்போது,
ஏனந்த மனிதன் வந்தானோ?
இழவுச் சேதி சொல்வதற்கு !-
என்னருமைப் பெண்பாவாய்!
கண்ணல்ல - - கலங்காதே!
களச் சேதி, கடைசிச் சேதி கேள் என்றான் -
அந்தோ!
மாவிலைத் தோரணங்கட்டி, மணவிழா மேடைதன்னில்
வாழ்விலே ஒன்றானோம் என்றுசொன்ன கண்ணாளன்-
மார்பிலே வேல்தாங்கி நல்ல சாவிலே வீழ்ந்துவிட்டான் -
ஆவிதான் போனபின்னும் உயிர்வாழும் ஆரணங்கு
அச்சடித்த தமிழ்ப் பதுமை -
கூவி அழுதாள்- கொத்தான மலர்
