மறத்தி
பகுதி 2 · 2 / 5
சுக்குநூறுதான் சூழ்ந்துவரும் பகை என்றான்.
நாடு மீட்காமல், வீடு திரும்பேன் என்றான்!
நங்கையோ,
நகைமுழக்கம் செய்து நடந்திடுக கண்ணே என்றாள்!
திரும்பி வருவேனோ இல்லையோ
எதற்கும் இப்போது ஒருமுத்தம்
இந்தா திரும்பு என்றான்!
கொடுத்தான் - பின்தொடுத்தான்
பகைவர்மீது பாணம்!
★
★
★
போர்! போர் ! போர் ! எனவே
முழங்கிற்று முரச ஒலி!
பார்! பார்! பார்! அந்தப் பைங்கிளியின்
உரிமையாளன் - பகைவர்மீது பாய்ந்து
கொல்லும் வீரம்பார்! - என்று
பட்டாளத்துத் தோழரெல்லாம் வியந்துரைத்தார் !
அந்தக் கட்டாணிமுத்தாளும் கண்வழியே சிரித்திட்டாள்,
களத்தினிலே அத்தானுக்கு
அடுக்கடுக்காய் குவிந்துவரும் வெற்றிகளைக் கேட்டுவிட்டு!
★
★
கோட்டைகள் விடுபட்டன ! எதிரியின்
*
