உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவியரங்கக் கவிதைகள்

கவிதை 2 · 2 / 3

கட்டுக் குலைந்தது”

2. “சோற்றை அள்ளுங்கால் துவள் வாழைத் தண்டில்

உறும்

சாற்றைப் போலே வடியத் தக்க வண்ணம் உற்று

நெய்யை!”

புரட்சியா அமைதியா?

பொங்கும் உவமையா? கருத்தா? தமிழ்ப்

போதை தரும் சுவைத் தேனா?......

எதின எது மிஞ்சுமென்று

எவர் கூறி வாதிட்டாலும் .....

ஒப்ப மாட்டேன்; ஒன்றை யொன்று

மிஞ்ச மென்பேன்!

எடுத்தனை அவர் தந்தார்!

இருண்ட வீட்டில்

குடும்ப விளக்கேற்றி வைத்தார்

இசையமுது பொழிந்து, அதற்குப்

பாண்டியன் பரிசு பெற்றார்... நமக்குக்

குறிஞ்சித் திட்டுமுண்டு குயில் இதழ் நடத்தும்போது;

கவிதை;

அழகின் சிரிப்பிலே தமிழியக்கம் கவர்ந்து விட்டார்......

அமைதிக்கு நல்ல தீர்ப்பளித்தார்......அவர்

காதல் நினைவிலே கவிப் பெண்ணை வாடவிட்டு; சாவின்

எதிர்பாரா முத்தத்தால் பிரித்து விட்டார்......

என் ஆசான் பாரதியைப் பார்ப்பேன் எனப் பறந்து

விட்டார்......

இருகவியும் இறப்புலகில் சந்தித்து என்ன பேசி

யிருப்பாரென

எண்ணுகிறீர்?....

நாம் தமிழ் நாட்டில் இன்றைக்கு இல்லையென்று

நம்மக்கள் பேசுகின்றார்......

நம்புவதோ இதனை நாமும் .....

செந்தமிழ் நாடென்னும் போதினிலே—இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே

சிந்தை கவர் இந்தப் பாட்டினையே செயல் படுத்த மிக்க

மனம்

நொந்து நான் காத்திருந்தேன்—இன்று

விந்தை கண்டேனோ தம்பீ!..... நம்

தந்தையர் நாட்டுக்குத் தமிழ் நாட்டைப் பெயர்

தந்தவர் அண்ணா! நாம் வாழ்கின்றோம் அங்கு!

மெய்யலவோ என்று

பரவசத்தால் நடமாடும் பாரதிக்கு வணக்கம் சொல்லிப்

பாவேந்தன் பகர்வான்

“கனியிடை ஏறிய சுளையும்—முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும்—காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

நனி பசு பொழியும் பாலும்—தென்னை

நல்கிய குளிரிள நீரும்

இனியன என்பேன் எனினும்—தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!” என்றெழுதி வந்தேன்...

இன்றெல்லாத் தமிழர்களும் தமிழைத்தம்

இன்னுயிராய்க் கொண்டு......

சென்றங்கு எட்டுத்திசை பரப்புதற்கு முனைந்தார்...

அய்ய! நாம் சாகவில்லை—வாழுகிறோம் தாயகத்தில்!

உண்மைதான் நீர் உரைத்த தென்றேன்!

பாரதியும் தன் தாசனையே தழுவிக் கொண்டு

பாரதிரச் சிரிக்கின்றான்

இருவருமே பாடுகின்றார்

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!”

இரண்டு நாமும் பாடுவோம்......

ஏற்றமிகு தமிழகத்தைக் கண்டிடுவோம்......

நாற்றமிகு சாதிப்பூசல் களைந்திடுவோம்.....

ஆற்றல் மிகு பாரதிக்கும் அவர் தாசர்க்கும் விழா

எடுப்போம்

விழா எடுக்கும் வேளையிலே...... அவர்தம்

விழாக் கருத்தைச் செவிமடுப்போம்

கண்கள் விற்றுச் சித்திரம் வாங்குவதோ

எனக் கேட்ட பாரதிக்குத் தாசன்;

பெண்கள் கொய்யாப் பழக் கூட்டமென்றுரைத்தான்

“தனித்துக் கிடந்திடும் லாயம்—அதில்

தள்ளியடைக்கப்படும் குதிரைக்கும்

கண்டிட உத்திரவுண்டு—வீட்டில்

காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டுமோ?......

எனக் கேட்டான்......

காதல் அடைதல் உயிர் இயற்கை—அது

கட்டில் அடங்கும் தன்மையதோ?—அடி

கோதை தொடங்கடி! என்று சொன்னான்—இன்பம்

கொள்ள! கொள்ள! கொள்ள! மாந்தோப்பில்” என்று

மகிழ்ந்தவன்

காதலுக்கு வழி வைத்து கருப்பாதை சாத்தக்

கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்”

எனச் சொன்னன்

எப்போது தெரியுமோ?

இப்போது தானே நாம்

குடும்பக் கட்டுப்பாடென்று கூறி

குசேலரைப் போல் ஆகாதீர் எனப்

பிரச்சாரம் புரிகின்றோம்

பேரரசின் சார்பில்!......

பெருங்கவிஞன் பிள்ளைக் கட்டுப்பாடு தேவையென

முப்பதாண்டு காலத்திற்கு முன்பாக

முன்னேற்றக் கருத்துரைத்தான் .....

நாலைந்து பிள்ளைக்குத் தந்தையான ஒருவன்

நடு நடுங்கித் திண்ணையிலே படுத்துக் கொண்டான்

நங்கையவள்—அவன் மனைவி வருகிறாள்—இங்கு

கங்கையைப் போல் பிரவாகம் காட்டுகின்ற கவிஞன்

நடை கேளுங்கள்,

அருமனைவி என்னிடத்தில் மெதுவாக வந்தாள்

அயர்ந்தீரோ என்றுரைத்தாள்; மலர்க்கரத்தால்

தொட்டாள்

“தெருவினிலே பனி என்றாள்; ஆ மென்று சொன்னேன்

தெரிந்து கொண்டேன் அவள் உள்ளம் வார்த்தை

பெண்ண தேவை!

பத்து மாதம் செல்லப் பகற் போதில் ஓர் நாள்

பட்ட கடன் காரர் வந்து படுத்துகின்ற நேரம்

சித்தமெல்லாம் மூத்த பெண் சுர நோயை எண்ணித்

திடுக்கிடுங்கால் ஒரு கிழவி என்னிடத்தில் வந்து

முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல

முகூர்த்தத்தில் உன் மனைவி பிள்ளை பெற்றாள் என்றாள்

தொத்து நோய், ஏழ்மை, கடன்காரர் தொல்லை

தொடர்ந்தடிக்கும் குறையிலே பிள்ளையோ பிள்ளை!”

அந்தப்

பாரதிதாசன்;

“பெண்ணைப் பெருமை செய்தான்,

மண்ணைப் போல் மிதிபடும் மானிடரைப் பார்த்து

உன்னை விற்காதே!” என்றான்

“எதிரிகள் கோடி இட்டழைத்தாலும்

தொடேன்” என

எக்காளக் குரல் கொடுத்தான்......

காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளியாய் நின்றான்......

தொண்டு செய்யாது கிடப்பவன்

ஆமை என்றான்......

தொகை தொகை யாய்க்

கவிச் சரவிளக்கு ஏற்றி வைத்தான்......

பாரதிக்கு வாரிசாய் பாரதிதாசனென......

தீவர்க்கும் கவிஞர்க்கும் பிற

தகைமைசால் மேதைக்கும்—தமிழ்ப்பின்

இருக்கின்ற பரம்பரையே தகுதியாகும்......

இன்று

பார்க்கின்ற இடமெல்லாம் பாரதி பரம்பரையே

பாரதி தாசன் வழித் தோன்றல்களைப் பார்க்கின்றோம்,

கோர்க்கின்றார் சொல் முத்து......பல கவிஞர்

(பல கவிஞர்)

கோர்க்கின்றார் சொல் முத்து

பல் இல்லாக் கவிஞர்களும்......(தேர்தல்)

வாக்கென்றால் பாரதிக்கும் பாரதி தாசர்க்கும் வேறு

நோக்கின்றி வழங்கிடுவார்......இரு கவியும்

வருவாரோ ஆள்வதற்கு......

நம் கவியரசை!

இனியுமே வரவேண்டும் ஆள்வதற்கு......

இப்போதே ஆள்கின்றார் நமதுள்ளம்......

அவர் வாழ்க!

அவர் புகழ் வாழ்க!

5—5—71

பறம்பு மலையில் 5—5—71 அன்று நடந்த பாரி வள்ளல்

விழாவை யொட்டிய கவியரங்கில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி

அவர்கள் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிப் பாடிய தலைமைக்

கவிதை.

மாதவர்க்கு ஒரு பாகம்—

மாது, அவர்க்கு ஒரு பாகம்—

[மாதொரு பாகன்—சிவனார்!]

மாதவர்க்கு ஒரு பாகம்

இந்த விழாவில் குன்றக்குடி

மடத்தின் தலைவர் அடைகின்ற மகிழ்ச்சியிலே

மாதவர்க்கும் ஒரு பாகம் உண்டன்றோ?

ஏனெனில், இது முடித்து என

இழுத்துச் செல்ல இருக்கின்றார் சிவகங்கை..........

அந்த மாதவர்க்கு வணக்கம்........

இங்குள்ள அன்பிலார்க்கு வணக்கம்........

என் பால் அன்பிலார் இருப்பின்

அவர்க்கும் வணக்கம்—பெரிய

மருதநேயார் மதுரை முத்து மேயர்க்கும்

சின்ன மருதாம் தென்னரசுத் தோழர்க்கும்

வணக்கம்—

தமிழ்த்துறவி என்கின்றோர் நம்மை—

நான் ஏற்பதில்லை—எதைத் துறந்திடினும்

தமிழை மட்டும் துறந்திடேன் எனச் சொல்லும்—நீவிர்

தமிழ்த் துறவி அல்ல!

தவத்திரு அடிகளாரே! ஏற்றிடுக என் வணக்கம்—

இன்று மதியம்:

மதுரையில் தான் தூங்காமல் இக்கவியரங்கப்

பாடல்தனைத் தீட்டி வந்தேன்........

அங்கு,

மதுரையில் இருந்த சங்கம்—

இங்கு எழுந்து வந்ததுபோல்

இருக்கின்ற புலவர் குழுவே!

அனைவர்க்கும் வணக்கம் சொல்வேன்—

எனக்கிருக்கும் எத்தனையோ வேலைக்கிடை இதுதான்

கவிதை

எனக் கிறுக்கும் ஏனோ அழைத்து என்பால்

தனக் கிறுக்கும் பேரன்பை வெளிப்படுத்த—பெருந்

தவக் கிறுக்கர் அடிகளார் அழைத்திட்டார்

கன்றுக்குடி இல்லாமல் பால் கறக்கும் வித்தை கற்ற

சென்னை விட்டு

குன்றக்குடி ஆதீனக் கொடி பறக்கும் பறம்பு மலை வந்து

விட்டேன்

மலைக்கிருக்கும் அழகெல்லாம் மாரியாலே—இந்த

மலைக்கிருக்கும் அழகெனிலோ மன்னன் பாரியாலே இங்கு

—பலாச்

சுனைக்கிருக்கும் சுவை கூட அவனளித்த கொடை

என்பேன்.

அவனரசில் எலியின்

வளைக்கிருக்கும் பாதுகாப்பாய் பூனை யென்பார்—வயலின்

களைக்கிருக்கும் மதிப்புக்கூடத் தன் பொருளின்பால்

வைக்கா வள்ளல்—

கொடிக்கிருக்க விட்டாக இழையணித்தேர் ஈந்த அண்ணல்

கதைகளிலே படித்திருப்போம் கலகம் செய்—நாரதரும்

கந்தவேலன் முன் சென்று ..உன் காதலுக்கேற்ற நங்கை

வள்ளி என்பேன் வடிவழகி, வட்டநிலா!

அள்ளி உண்பாய்ப் பார்த்து விட்டால் என்று கூற

முருகனுமே

துள்ளி யோடித் தோகையினைக் கண்டிடவே

புள்ளி மயில் மீதேறிப் புறப்பட்டு அவ்வையாரின் கற்பனை