உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவியரங்கக் கவிதைகள்

கவிதை 3 · 3 / 3

கேளீர்!

ஈங்கோர் கற்பனை கேளீர்

நெடுந்தொலைவு பயணம் செய்தும் நேரிழையைக்

காணாமல்

பறம்பு மலைக் கருகே வந்து பல் இழந்த பாட்டி ஒருத்தி

யிடம்—மீசை

அரும்பு கட்டா முருகனுமே வள்ளி எங்கே எனக்—கேட்க

பாட்டியோ, மலை மீது ஏறிடுக! கண்டிடலாம்! என்ற

வோர் பதில்

நீட்டி முழக்கி நடந்திட்டாள்—நெடுநல் வேல்முருகன்,

ஏறிந்து,

ஈட்டியின் வேகமென ஏறினன் மலையின் மீது

வள்ளி எங்கே? வள்ளி எங்கே? என அலைந்த

வடிவேலனிடம்......வந்திடுக......கண்டிடுக....எனக்

காட்டினர் அங்குள்ளோர், மலையெல்லாம் வள்ளிக்கிழங்கு!

கிழங்குகளின் குறும்பு என்னே......உண்ணும்

கிழங்கினை வள்ளியென்றே உரைத்து நமை ஏய்த்தாரே

பாட்டி யென்று—

முருகன் ஏமாந்து பறந்து விட்டான்,

ஏமாற்றமில்லாமல் திரும்பலாம் பாரி பெற்ற

பூநாற்றம் கமழ்கின்ற பறம்பு மலைப் பாரி கண்டால்—

என்ப

பாரேற்றும் பெயர் பூண்டான்—தமிழுக்குச்

சீரேற்றும் கபிலனது உறவுங் கொண்டான்

புவி வேந்தன் பாரிக்குத் தமிழ்க்

கவி வேந்தன் கபிலன் தான் உயிர்த் தோழன்

மதி யிரண்டாய்ப் பிரிந்து வந்து மகளிர் எனப் பிறந்தது

போல்—பாரி வள்ளல்

அதியழகுச் சிலையிரண்டைப் பெண்களாகப் பெற்

றெடுத்தான்

பதியாவோம் அவர்க்கென்று பெண் கேட்டு பல

மன்னர், கிடைக்காமல்

படை கொண்டு பறம்புமலை தாக்கித் தோற்றார்—தேன்

அடை உடைத்துக் கிளம்பிவிட்ட ஈக்களன்ன மூவேந்தர்,

பறம்பு மலைத்

தடை தகர்த்துப் பாரி உயிர் குடித்து விட்டார்

நாடிவந்து கேட்டபோது பெண் இல்லை யென்று போர்

நடத்தி, பின்னர்;

தேடி நொந்து திசை நாலும் மன்னர்களைக் கேட்டலுத்து

இறுதியிலே,

காரி மன்னன் செல்வர்க்கு

பாரி மக்கள் துணைவியரானர்

கபிலரது முயற்சியினில்!

நாடாண்ட தன் தோழன்—தமிழ்

நாயகரும் பாரிக்குத் தான் செய்யும் தனிக்கடமை

முற்றிற்றென்று!

ஏடாண்ட பெருங்கவிஞன் கபில மேலோன்

எந்தன் பாரியுடன் இனிச்சேரத் தடையில்லை, எனக்கருதி

வடக்கிருந்து உயிர்நீத்தான்

சாகின்றோர் நண்பன் எனில் அவன் தலையில் அவசரமாய்க்

கல் ஒன்றைப் போடுகின்ற ஆருயிர்த்

தோழருண்டு இந்நாளில்! எதிரியிடம்

தோற்றிடுவான் தோழன் எனில் துரோகம் செய்து

எட்டப்பர் ஆகின்ற “நல்லோர்” உண்டு நம்நாட்டில்

—அந்த

நன்றி கெட்டோர்க்கும் நல்லறிவு புகட்டுகின்ற

பாடமன்றோ

கபிலர்—பாரி கனிந்த நட்பு!

உண்டிக்கொடை, பொற்கொடை, ஊர்திக்கொடை என

ஒன்பான் கொடை வழங்கும் தமிழ் மரபில் முன்னூறு

ஊர்க்கொடையைப் பாரோர்க்கு அளித்த—பாரி புகழ்

உலவு தென்றல் காற்றுக வீசுகின்ற மாண்பு கண்டேன்.

வள்ளல்களே வாயார வாழ்த்திவிட்டால் போதாது

வாழ்த்துபவர்

உள்ளங்களும் வண்மையுடன் திகழ்தல் வேண்டும்.

குவித்து வைத்த பொற்குவியல் இருந்தால் தான்—கரங்

குவித்து வரும் எளியோர்க்கு வழங்கிடலாம்—எனக்கூறல்

சாக்குப்போக்கு

அவித்து வைத்த கிழங்கிரண்டில்—பசியால்

தவித்துழலும் ஏழைக்கு ஒன்றில் பெருங்கொடையாம்,

மனிதர்,

இரந்துண்ணல் தகாதென்று இங்கிருக்கும் தமிழரசு

சிறந்திடுக பிச்சைக்காரர்! செய்தொழில் கற்றுத்

தேர்ந்திடுக!

என—விடுதி பலத்

திறந்திடவே திட்டமிட்டுப் பணி புரிதல் ஊக்குவிக்க

உமது மனம் அன்பால்

சுரந்திடவே வேண்டுகின்றேன்

முல்லைக்குத் தேர் ஈந்து பாரியானீர்— ஒரு ஏழைப்

பிள்ளைக்கு மோர் ஈந்து அவனில் நீர் பாதியானீர்!

பாரி விழா சிறப்பதற்குப் பாவலர் தம் கவியரங்கில்,

வாரியே வழங்கிடுவீர் வண்ணத் தமிழ்ப் பெருமை

யெல்லாம்—

அன்னைத் தமிழின்

தொன்மை

எளிமை

வண்மை

வலிமை

இறைமை

புதுமை—என

எத்தனையோ ‘மை’ களையே பாடிடலாம்

இத்தரையை முத்தமிட்டார் தேர்தலிலே பலபேர்!

அவரெல்லாம்—பாடுகின்றார், மை—மை—என்றே!

ரஷ்ய மை—ரசாயன மை—

மக்கள் தீர்ப்பை மதியா ‘மை’ யாலே வெற்றி

உண்‘மை’யை மறுப்பவர்க்கு—

இம்மையிலும்—மறுமையிலும்—

இம் ‘மை’ யிலும், மறு ‘மை’ யிலும்

என்றுமே தோல்விதான்......

அன்னைத் தமிழின் “தொன்மை” என்று

தென்னை நல்கிடும் இளநீர் போல்......!

இங்கோர் கவிஞர் தருகின்றார்......

இளஞ்சேரக் கவிஞர் அவர் பேர் என்பேன்......

தமிழின் ‘எளிமை’ எனும் தலைப்பினிலே

கண்ணொளிசேர் பாட்டொன்று—கேட்டிடுக இப்போது...

அமிழ்தாம் கவிகள் இயற்றுகின்ற

அருமை நண்பர் சவர்லால் பொழிவார் இங்கே கவிதை

மழை!

‘வண்மை’ என்னும் தலைப்பினிலே எண்ணக் கவி

யொருவர் பாடிடுவார்—

உண்மையொன்று சொல்கின்றேன்—

அவர் இரு பெயரில் ஒரு புலவர், முத்து சம்பந்தம்—

அன்னைத் தமிழின் ‘வலிமை’ எனும் தலைப்பினிலே கவிஞர்

அய்யாக்கண்ணு பாடிடுவார்!

அடுத்து—இறைமை!

பாடுபவர்—சிங்கார வடிவேலன்!

சிக்கலிலே வாழும் சிங்கார வேலா—எனப்பாட்டு

கேட்டிருப்பீர்—

தமிழில் இறைமை

எனும்

தலைப்புச்

சிக்கலிலே—இவர் சிறப்புக் கண்டிடுவோம்

அடுத்து ‘புதுமை’

கொடியரசன் பாரிவள்ளல்...கோட்டைக்

கொடியரசன்—முல்லைக்

கொடியரசன்—அவன்

முடியரசன்

குடியரசு தழைக்கின்ற இக்காலம் இங்கோர்

முடியரசன் இருக்கின்றார்......

இவர் கவி முடியரசர்.......

விரைவில்

முடியரசு!

பின்னுரை

முன்னுரையில் நான் சொன்ன கருத்தெல்லாம்—மீண்டும்

முடிவுரையில் சொன்னதாய் கொண்டிடுக!

தமிழின் ‘தொன்மை’ தனைத் தரணிக்கு உணர்த்

திடுவோம்—

‘எளிமை’ தனைப் பயன்படுத்தி எல்லார்க்கும் தமிழ் அறிவு

ஊட்டிடுவோம்—

வண முறையற்ற வன்மையினில்

தமிழ் வளம் விழாது காத்திடுவோம்

இன்பத் தமிழ் எங்கள் பகைவர்க்கு

‘வேல்’ என்று முழக்கிடுவோம்......

வலிமை காட்டிடுவோம்!

இறைமை தனைத் தமிழின் பால் காண்பதிலும்

ஏழைத் தமிழர் சிரிப்பினிலே காண்பதுவே சிறப்

பென்போம்—

பயிற்று மொழித் தமிழாகப்

பரவி விட்டால்;

பால் நிலவுப் பயணத்தைத்

தமிழ் மொழியில் கற்று நாமும்

பல ‘புதுமை’கள் செய்திடுவோம்!

வணக்கம்.

செப்டம்பர் 17-ல் ஈரோட்டில் பெரியார் சிலை திறப்பு

விழாவில் பாடியது.

“சாராய சகாப்த” மென்று ஓர் கவிதை

சக்கரவர்த்தி ராஜாஜி மாமுனிவர்

தாராளமாய்க் ‘கல்கி’ ஏட்டில் தீட்டியதால்

யார் யாரோ சுதந்திராக்கள் மகிழுகின்றார்

‘பார் பாராய்க்’ குடித்தவர்கள் பர்மிட் வாங்கி

நேர் மாறாய்ப் பேசுகின்றார் புத்தர் போல்!

இதயத்தில் நோய் என்றும்

இரு யூனிட் வேண்டும் மென்றும்

இதோ ‘டாக்டர் சர்டிபிகேட்’ பாரும் என்றும்

இங்கிருக்கும் சுதந்திராக்கள் குடித்த கதை ஊரறியும்!

பணக்காரர் பகல் வேஷக்காரர்க் கெல்லாம்

மணக்கமது வாங்குதற்கு பர்மிட் வேண்டும்!

பகட்டுக்கு ஒருநீதி—பாவம் ஏழைக்கு ஒருநீதி

பஞ்சாக சாத்திரத்தின் புதுநீதி!

வாடுகின்ற ஏழைக் குடிகாரன்

வார்னிஷைக்குடித்து செத்த போதும்—தனம்

மேவுகின்ற சீமான்கள்—போதை

மோதுகின்ற ‘விஸ்கி’ ரம் அடித்த போதும்

நெளரோஜி வீதியில் தான்

நாற்றம் துளைக்கலையோ?

நாடுதான் பார்க்கலையோ?

‘ஆழ்ந்த அறிஞர் அண்ணா’ என்று

அன்பர் ராஜாஜி இன்றெழுதப் பார்த்து நான்

அயர்ந்தேதான் போனேன் அய்யா!

அன்றொரு நாள்:

அண்ணா பற்றி அரசாங்கப் பாடநூல் வந்தபோது

அற்ப வயதில் செத்தவரெல்லாம்

அவதாரப் புருடர் தாமோ—என எழுதி

அவர் மகிழ்ந்ததெல்லாம் மறந்தா போகும்?

ஒரிசாவில் இவர் கட்சி ஆட்சியிலே

ஒடிற்றே மதுவின் வெள்ளம்—அப்போது

தரிசாகப் போனது ஏன் இவரின்—உள்ளம்?

வரம் பெற்ற கருணைச் செல்வர் என: ஏன

வாழ்த்துகின்றார் வணங்குகின்றேன்!

வரம் தந்தார்—இவரல்ல; நேசக்

கரம் தந்தார் நாட்டு மக்கள்!

வரம் பெற்றேன்—பெரியார் அண்ணா தந்த நெஞ்சு

உரம் பெற்றேன்!

இப்போதும் சொல்கின்றேன் கேட்டிடுக!

இந்தியா முழுமைக்கும் அறவே

மது விலக்குக் கொண்டுவர சட்டம் செய்தால்

சிரம் தாழ்த்திக் கரம் குவித்து

சிறப்பான செயல் என்று போற்றி நின்று

செயலாக்க முந்திடுவேன் அதன் பிறகும்;

இதயநோய் என்று—சிலர்

இருட்டினிலே குடிப்பதையும்

இனி அனுமதிப்பதில்லை யென்று விதிசெய்வேன்!

முழு விபரம் தேவை யெனில்

பட்டியல் பிறகு சொல்வேன்: