உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவியரங்கக் கவிதைகள்

கவிதை 1 · 1 / 3

29-4-71 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின்

80-வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற

கவியரங்கு

இடம்:— புதுவை

இன்று காலை: புறப்பட்டுக் கார் ஏறும் போது

புதுவைக்குச் செல்கின்றாயா; அங்கு

“குடி”யுண்டே—

எனக் கேட்டார் என் நண்பர்

இங்குந்தான் தமிழ் நாட்டில் எத்தனையோ குடியுண்டு—

இஃதறியா மனிதரா நீர் என்றேன்.

அவரோ;

வியப்பாலே விழி விரித்து

வேகமாய் ஏன் விழித்து

என்ன குடி? என்ன குடி?

என்றார்

காரைக்குடி—கண்ணங்குடி—

குன்றக்குடி—குமாரக்குடி

மாங்குடி—மணக்குடி—

லால்குடி—ஆய்குடி—

பொதக்குடி—சுரக்குடி—எனக்குப்

புகழ் தந்த கல்லக்குடி—

போதுமா குடியென்றேன்......

கல்லக்குடி சரிதானப்பா—தமிழ்நாட்டில்

கள்ளக்குடி தடுத்ததற்குக் கடை திறப்பு

எப்போதென்றார்......?

புதுவைக்குப் போகின்றேன்—பருக்கிடம்

புள்ளி விவரம் கேட்டறிந்து—

சிந்தித்துச் செயல் படலாம்—பறக்காதே இப்போது!

சென்று வருகின்றேன் என விடைதந்து......

காரேறிக் கடுகி வந்து—வழியில்

“சாரம்” விடுதியிலே இதனை எழுதி வந்தேன்—

கணம் ஒன்று தாமதித்தால்......

காருக்குள் நண்பனுமே ஓடிக் கொள்வான்—

எழுத விடுவானு .....

எடு! வை! எங்கே

புதுவை? என உயிர் எடுக்க மாட்டானு?....

புதுச் சிறப்பு—தனிச் சிறப்பு—பெருங்

குடிச் சிறப்பு—பெற்ற நல்லூர்

கவிச் சிறப்பு கொண்ட வல்லோர்

புவிச் சிறப்பு கொள்ளும் வண்ணம் வாழ்ந்த பேரூர்.

ஆன் ஒருநாள் ஆயிரத்து தொளாயிரத்து

நாற்பத்தாறில்

அடி உதைகள் குத் தென்று அடியேனும் வாங்கிக்

கொண்டு

ஆவி போகும் வேளையிலே

அரவணைத்த புனித பூமி—இந்தப் புதுவை பூமி—

இன்றென்னை “முதலமைச்சே வருக” என்று

எம் தலைமை; கழகத்தின் சார்பாக அழைப்பதற்கு

இங்குமோர் முதலமைச்சர் இருக்கின்றார்

தென்றல் வீசும் போதெனக்குப் பழைய

புயல் நினைப்பு வருதல் இயற்கையன்றோ!

பழைய பெருமாள்—பாட்டெழுதும் புதுவைச் சிவனுரை

பண்புநிறை அமைச்சர் பெருமக்கள் தனை—

பாராட்டி வாழ்த்தி எந்தன் கவியரங்கைத் தொடங்கு

கின்றேன்......

எங்கள் ராஜாராம்—

உங்கள் ராமசாமி ராமச்சந்திரன்

ஆறுமுகம் ராமசாமி சுப்பையா அத்தனையும்

ஆண்டவன் பெயர் என்பதாலே அவர்

அருள் கேட்க வணங்குதலும் தவறல்ல!

சண்முகமும்

அவ்வாறே; ஒளவைச்

சண்முகமோ பெயராலே

அரசர்களின் போரில் எல்லாம் அமைதித்தனை

உருவாக்கி விட்டதுபோல்;

புதுவைச் சண்முகமும், புகையடக்கிப் புகழ் பெருக்க

வாழ்த்துகின்றேன்.

முகத்தினிலே பெருமை—நல்

அகத்தினிலே தமிழ் ஆசை—நாடெங்கும்

முழங்குகின்ற சிலம்போசை—கொட்டுகின்ற போர்

முரசாம் ம. பொ. சி. பெரியவரை வணங்குகின்றேன்.

புதுவைக் குயில் தனையே போற்றி என்

கவிதை வரிகளையே

அவர் கல்லறையின்

திருமுன்னே

வைக்கின்றேன்.

கண்ணை இமை காப்பது போல்

என்னை என்றும் காப்பதற்கு

இருக்கின்ற தோழர்களே!

எண்ணெய் யென ரத்தத்தைப் பெய்து தந்து

தண்ணிலவாம் தமிழன்னை காக்கின்ற தீரர்களே!

வெட்டி வா என்றுரைத்தால்

கட்டி வரும் வீரர்களே!

பெட்டிக்குள் இருக்கின்ற பணத்தை

ஏழை எடுத்தெடுத்துப் பார்த்து மகிழ்வது போல்—

என் அழைத்தழைத்து மகிழ்கின்ற நண்பர்களே!

அலை பாடுங் கடல் மல்லை இங்குண்டு தமிழ்நாட்டில்......

கல் பாடுங் காவியங்கள் கவின் பாடும் சிற்பங்கள்!

நஞ்சையுண்டு... தஞ்சையிலே ....அங்கு

நஞ்சையுண்ட சிவனுக்குக் கோயில் உண்டு .....

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று

யானை கட்டிப் போரடித்த மதுரை யுண்டு......

அங்கு,

மீன் ஆட்சி நடத்தியதால் மீன் பொறித்த கொடியுண்டு

மீனாட்சி அம்மைக்கும் வான் முட்டும் கோவிலுண்டு—

நெல்லையுண்டு சேலம் உண்டு .....

குற்றாலம் கோவையுண்டு .....

புதுவையென்று கேட்டவுடன் புதுப்போதை

கொள்வோரும்

மிகவும் உண்டு—

பைந்தமிழால் சுவை கூட்டும்—

பாண்டி வாழ்ப் பெரியோரே

மன்றேறி மணிக் கவிதை முழக்க வந்த கவிஞர்களே!

என் வணக்கம் ஏற்றிடுவீர்;

“ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் மென்று

ஆடுவோமே!”

அடைவதற்குள் அறுதியிட்டுச் சொன்னவனும்

அடலேறு மொழி பகரும் மன்னவனும்

அவனுக்குச் சின்னவனும்......

இளம் மருது போன்றவனும்,.....

எடுத்தவுடன்;

“எங்கெங்குக் காணினும் சக்தியடா—தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா”—என்று

பாரதி—பாடென்று சொன்னவுடன் பாடிய மறவன்

பார் அதி தீரனென்று பாரதி புகழ்ந்த புலவன் ...

“கனக சுப்பு ரத்தினம்” மென்று காத தூரம் இருந்தபேரை

கவி பாரதிக்குத் தாசனென்று

கச்சிதமாய்ச் சூட்டிக் கொண்டான்......

களம் சென்று தமிழ் காக்கக் கச்சு இதமாய்க் கட்டிக்

கொண்டான்......

நிமிர்ந்த போக்கு

நெறித்த புருவம்

நீர்வீழ்ச்சி ஓசை—நெற்

கதிர்க்கட்டு மீசை

பாட்டெழுதும் வித்தையிலே

பாரதி—ரசவாதம் கற்றவனும்—இவனைப்

பார்! அதிரசவாதம் கற்றவனும்......

அதிரசவாதம் கற்றவனும்......

அத்துணை இனிப்பு இவன் பாட்டில்......

சஞ்சீவி பார்வதத்தின் சாரலுக்கு நமை இட்டுச் சென்று

சங்கீதப் பேச்சொன்றைக் கேட்கச் சொல்வான்

காதலி: “நோகாமல் முத்தங்கள் நூறு கொடுப்பேன்

என்றாள்”

காதலன்: “ஆசையால் ஓர் முத்தம் அச்சாரம்

போட்டென்றான்!”

“சிற்றாறும் வரப்பெடுத்த வயலும் ஆறு

தேக்கிய நல் வாய்க்காலும் வகைப்படுத்தி

நெற் சேறு உழுதுழுது பயன் விளைக்கும்

நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?....

விணுக்குறியா?

வெடிக்கும் எரிமலையா?

புரட்சிக் கவிஞனைப்

புவியொப்பி மாலை போட

போதாதோ இவ்வரிகள்?....

“ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால்

அத் தேசம் ஒழிதல் நன்றும்”

முழுமனிதன் பாட்டன்றே இப்பாட்டு; இது கேட்டு

அழும் மனிதன் அரை மனிதன்......குறை மனிதன்......

அரை குறை மனிதன்......

“இருட்டறையில் உள்ளதடா உலகம்

சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”

எனத் தொடங்கி

“சுருட்டுகின்றோர் சில பேர்கள் தம் கையில் கிடைத்த

வற்றை”

என முடிக்கும்

இவனோர்

சுருட்டுக் கவிஞன்—புகைச்

சுருட்டுக் கவிஞன்—இவன்

புரட்டுக் கவிஞவான்;

மூடப் பழக்க மெல்லாம் தலை கீழ்ப்

புரட்டுக் கவிஞவான்......

அமளி துமளி ஆர்ப்பாட்டம் அணி வகுப்பு

அதற்குத்தான் கவி வருமா?

அமைதியிலே உலகு வாழ புதுவைக் குயில் கூவாதா?

(கூவியதைக் கூறுகின்றேன்)

“புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”

அமைதிக் கவிஞனை அழைக்கின்றான் உலகத்தை......

சாந்தியால் உலகம் தழைப்பது நன்று?

சமயபேதம் வளர்த்தே தளர்வது நன்று?

காந்தியார் கதறிய கருத்தினைக் கவிஞன்

கனவிடை மெழுகென உருகியே கேட்டான் .....

“பொய்யுரைப்போன் பயங்காளி—பிறர்

பூமி சுரண்டிடுவோன் பெருச்சாளி

வையக மக்கள் எல்லோரும்—நலம்

வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி!”

கருத்துக் கவிஞன்; சற்றுக் கருத்த கவிஞன்

காலக் கவிஞன்; முக்காலக் கவிஞன்—

அவன்

சுவையாய்த் தமிழுக்கு அருவியின் பாடல்;

அமைவாய்க் கண்ட அற்புதம் என்னே!

“விருந்து வரக்கண்ட மெல்லி முகம்போல் முல்லை

யரும்பு மலர்ந்த தென்ன வேடிக்கை......

தெரிந்தவரை கண்டாலும் தெரியாதாரைக் கண்டாலும்

சிரிப்பது தான் இதன் வாடிக்கை......”

இன்றென்று கேளீர்; விழிக்கு

இனியவள் ஒருத்தி ஆடுகின்றுள்......மொழிக்குச்

சுவையேற்றி தாசன் பாடுகின்றார்.....

“சதங்கை கொஞ்சும் பாதம் சதி மிதிக்கும் வானில்

மிதக்கும் அவள் தாமரைக்கை! மேலும்—வதங்களிலாச்

சண்பகத்து நல்லரும்பு சாடை புரிகின்ற விரல்

கண்டவரும் செம்பவளக் காம்பு!”

மற்றொன்று:

“தொண்டையிலே ஒன்றுமே அடைக்கவில்லே

துணைவனவன் சிறுகிணப்புக் கணக்க லுற்றுள்

அண்டையிலே மங்கை போய் ‘அத்தான்’ என்றுள்”

அவருக்கே உரிய கேலி!

அவர் கவிதைக்கே உரிய சுவை!

உவமைக் கோர் கவிஞன் என்று

உரைக்கின்றார் பெருங்கவிஞர்......

ஒன்றிரண்டா எடுத்துச் சொல்ல......

1. “தொட்டி நீர்தனில் சுண்ணாம்பு கலந்த கலப்பன்னை

இருள்தன்