உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 76 · 76 / 77

பொல்லாத இரண்யாட்சன் கடலுக்குள் ஒளிந்துகொண்டான்!

தேவர்களும் துணுக்குற்றுத் திருமாலை வேண்டி நின்றார்.

திருமாலும் பன்றி உருவெடுத்து திரைகடல் புகுந்து சென்றார்!

உலகப் பந்தை மீட்டு வந்தார் ஒழித்துவிட்டு அசுரனையே!

உவகையால் பூமி தேவி உறுமிடும் பன்றிக்கு நன்றி கூறி,

உன்மீது காதல் கொண்டேன் என்றாள் உருக்கமுடன்.

உடன் பன்றியுருப் பெருமாளும் ஒப்புக் கொண்டார்.

பிறகென்ன....?

"வெள்ளத்தினோடொரு வெள்ளமுமாய் இருவரும்

வீணையும் நாதமும் ஆகிவிட்டார்"

தேவாதி தேவன் திருமாலுக்கும்

திருமகளாம் பூமா தேவிக்கும்

போராடும் குணம் படைத்த அசுரன் பிறந்தான்! அவன்

நாமகரணம்தான் நரகாசுரன் என்கின்றார்.

ஆணும் பெண்ணும் தேவகுலம் -

அவர்கட்குப் பிறந்த மகனோ அசுரகுலம்!

"எப்படி இது?" என்று கேட்கத் தோன்றும்.

இப்படியெல்லாம் கேட்கத் தொடங்கி விட்டால்,

இப்புவியைப் பாயாகச் சுருட்டிடத்தான்

எவரால் இயலுமெனக் கேட்டிடவும் வேண்டும்தானே!

காசினியைப் பாயாகச் சுருட்டும்போது - ஏழ்

⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧

கடல்களுமே இப் பூமிக்குள்தானே இருந்திருக்கும்?

ஏழ்கடலுடன் பூமியைத் தூக்கிய அரக்கன்

எந்தக் கடலில் இந்தப் பூமியை ஒளித்தான்?

எழுத்தறிவித்தவன் இறைவன் என்கின்றோம் -

ஏன்? எப்படி? எனும் வினாக்கள் எழுப்புவதே

இறைவனுக்கு எதிர்ப்பு என்றால்;

ஐயப்பாட்டுக்கு விளக்கமளிக்கத் தெரியாதவர்

ஆசிரியப் பெருமகனாய் இருக்கலாமா?

அசுரர்க்கும் தேவர்க்கும் போராட்டமெனில்; அது

ஆரிய திராவிடப் போராட்டமே என்று

அய்யா பெரியார், அறிஞர் அண்ணா மட்டுமல்ல -

ஆசிய ஜோதி நேருவும் எழுதியதை

பண்டிதர்கள் மறுக்கின்றாரா? அவ்வாறாயின்

பழைய வரலாற்றையே மறுப்பதாகுமன்றோ?

வரலாற்றுப் புகழ் மேதை சீனிவாச அய்யங்கார்

வரைந்திட்ட ஆய்வு நூலும்

ஆரிய திராவிட போராட்டமே அன்றெழுந்த

தேவா சுர யுத்தமென்று

திரும்பத் திரும்பச் சொல்லுவதை

திசை திருப்பல் நியாயம்தானா? எனவே

தீபாவளிப் புராணத்தை ஏற்கலாமா?

நடந்து முடிந்ததம்மா;

ஒரு நகைச்சுவை நாடகம்!

அதிர்வேட்டுகள் ஆயிரம் முழங்கிட, முழங்கிட - அட

அணிவகுப்புகள் முரசறைந்து நடந்திட, நடந்திட

வரவேற்பு வளைவுகள் முதுகொடிந்த கூனன்போல்-நகரின்

வழியெங்கும் வணக்கமும் வாழ்த்தும் கூறிட, கூறிட

கொடிகள், தோரணங்கள் முகில்களை மறைத்து - மேலே

குடை பிடிப்பது போல் மெல்ல அசைந்திட, அசைந்திட

ஒன்பது யானைகள் மாலைகள் தூக்கி நின்றிட, நின்றிட.- பாகன்

உத்திரவை ஏற்றுக் கழுத்தில் அணிந்திட, அணிந்திட

புதிய மண்டபம் மேலும் பல பொலிவுகள் கொண்டிட,

கொண்டிட-விண்

மதியொத்த ஒளிவெள்ளம் எங்கணும் பரவிட, பரவிட

வாலிபர்க்கென தயாரித்த உரையை ராணி படித்திட, படித்திட-

அங்கு

வந்திருந்த கூட்டமோ விழுந்து விழுந்து சிரித்திட, சிரித்திட

"இளைஞர்காள்! இளைய தலைமுறையின் ஈட்டிகாள்!

இன்றே நீவிர் சூளுரைத்துப் புறப்படுவீர்!

வாழ்க்கை எனும் வசந்தத்தை அனுபவிப்பீர் - உம்

வாலிபத்தை நாட்டுப் பணிக்கும் சிறிது அர்ப்பணிப்பீர்!"

இக்கட்டுரையைக் கேட்டவுடன் மண்டபம் அதிர்ந்திட,

அதிர்ந்திட - பெரும்

கெக்கலியும் செய்து கூட்டம்; எழுந்திட, எழுந்திட

⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧

அதிர்ந்து போன ராணியார் என்னவென்று கேட்டிட, கேட்டிட

ஆங்கொருவர்

"அம்மணீ; தாங்கள் படித்த உரை தவறு" என நவின்றிட.

நவின்றிட - ராணியோ,

ஏன் என்றும் எப்படி என்றும் சீறி வினவிட, வினவிட - அவரோ

மான் மருண்டாற்போல் அஞ்சி நடுங்கிட, நடுங்கிட

"வருந்துகிறேன் தாயே! தங்கள் உரையோ

வாலிபர்க்கு வாழ்த்துரைக்கத் தயாரித்தது!

வரச்சொல்லி தர்பாருக்கு வந்திருப்போரோ;

வயதேறி நரைவிழுந்த கூட்டத்தார்!

அவரை நோக்கி

இளைஞர் ஏறுகளே! இந்திரஜித்துக்களே!

என்று நீங்கள் அழைத்துரையாற்றியதாலே

ஏளனமும் ஏகடியமும் மிஞ்சியது - இதில்

எவருக்கும் சிரிப்புத்தானே வரும் தாயே!"

எனப் பதிலுரைத்த பிரமுகரும் நழுவிட, நழுவிட - பாவம்

சினங்கொண்ட சீமாட்டி சோகத்தைத் தழுவிட, தழுவிட

நடந்து முடிந்ததம்மா - ஒரு

நகைச்சுவை நாடகம்!

சில நாடுகள் இருக்கின்றன!

....

ஊராட்சி முதல் பாராட்சி வரையில்

ஜனநாயகக் குழந்தை "ஜனிப்பதே"யில்லை!

கருவில் ஒரு புழுவாய் நெளிந்திடும் போதே

கலைத்து முடித்துக் களிப்பெய்திடுவர்!

தப்பித்தவறி பிறந்து தவழ்ந்தால்

தலையை நறுக்கிச் "சூப்பு" செய்வர்!

மக்களாட்சி மாண்பு மண்ணாய்ப் போக!

மண்ணாய்ப் போக! மடிந்தே போக!

அல்லது மலடாய்ப் போயிடவே...

இறையருள் வேண்டி இறைஞ்சி நிற்பர்!

அங்கெல்லாம் ஆட்சி மாற்றம்

அரை நொடியில் நடந்தேறுகிறது!

ஆள்பவர் நெஞ்சில் துப்பாக்கி ரவைகளின்

அணியாரங்கள்! மணியாரங்கள்!

அடுத்தவர் மார்பில் அழுத்தக் கவசம்!

அவரும் படுத்தால் எழுவது ஐயமே!

துப்பாக்கிகளே,

துரைத்தனக் கூடாரங்களைக்

தூக்கி நிறுத்தும் கம்பங்களாக

⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧

வேலை பார்க்கின்றன! "ஜோலி" முடிக்கின்றன!

பட்டாபிஷேக நிகழ்ச்சிகளைப்

பட்டாக்கத்திகளே,

முன் நின்று நடத்துகின்றன!

மகுடாபிஷேக வைபவம் என்பது

குருதிக் குடங்களில்

கொண்டு வந்த செந்நீரால்

கொலு மண்டபங்களைக்

குளிப்பாட்டுவதே ஆகும்!

சில நாடுகள் இருக்கின்றன!

அங்கே,

ஜனநாயகக் குழந்தை,

"ஜனிப்பதே" இல்லை!

குடை நிழலில் குஞ்சரம் ஊர்வார் -

அவர்தம்,

குடலுருவி மாலையாய்ச் செய்து...

அடுத்த பலிக்கடாவுக்கு

அழகாய்ச் சூட்டுவர்!

ஏற்றிப் போற்றுபவர்! அவன்

எலும்பை எடுப்பர்!

எழில்மிகு செங்கோல்

எமக்கு இதுவே என்பர்!

அக்கோல் பிடித்தவன்

வைக்கோல் போர் போல

என்று எரிவான்? எவர்தான் அறிவார்?

முடியாட்சி என்றால்;

முடியடா ஆட்சியை என்று - கொடுந்

தடியினால் முடிப்பதே பொருளே போலும்!

⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧

முடிந்து முடிந்து இன்னும் முடியாத

முடியாட்சிகளாகவே,

சில நாடுகள் இருக்கின்றன

அங்கே,

ஜனநாயகக் குழந்தை

"ஜனிப்பதே" இல்லை