கலைஞரின் கவிதைகள்
கவிதை 75 · 75 / 77
தீ பரவும்! திக்கெட்டும் பரவும்!
தெய்வீகத் திரைமறைவில் வாழ்கின்ற
திருடர் செயல் தீய்ந்து போகும்
புரட்சிக் கவிஞருக்கு விழா எடுத்து
புதிய புதிய நூல்கள் ஆய்வு செய்து
எழுச்சிமிகு நிகழ்ச்சிதனை நடத்தினால் மட்டும் - போதாதய்யா
''உழைக்காத வஞ்சகர் தம்மை மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ?" என
உணர்ச்சியோடு கேட்டாரே; அக்கவிஞர்! அந்தக்
கிளர்ச்சிகொள் நெஞ்சுடனே
கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டமென
முரசறைந்து புறப்படுவோம்; மோசடித் துறவிகளின்
முகமூடி கிழித்தெறிவோம்! வாரீர்!
பதில் என்ன? பகர்ந்திடுக!
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பைந்தமிழ் நாடு! இதன்
வேருக்குள்ளே வெந்நீர் ஊற்றியதால்
வெந்து குலைந்தது பழம் பண்பாடு!
அது
ஊருக்குள்ளே நச்சு மரம் ஒன்று --
உணவுக்குத்தான் பழுத்த தென்று
ஓடித் தின்று உயிர் விட்டவர் போலே
ஓட்டளித்துக் கெட்டனரே நாட்டோர்!
உத்தமராய் சிலர் வேடமிடல் எளிது - அதை
உணர்ந்து கொண்டு விழிப்பாய் இருப்பதுதான் அரிது!
பத்தரை மாற்றென்று சொன்னவர் ஆட்சி இன்று
அத்தனை பொருளையும் சுருட்டுவதே சாட்சி!
தனியார்க்கே எலாம் என்று தாரைவார்த்து நாட்டை
தடையின்றி வரவேற்கப் போகின்றார் கேட்டை!
இனி யார்க்கும் ஏழைகட்கு வாழ்வில்லை இங்கே
வெளியார்க்கு வழிவிடவும் ஊதிவிட்டார் சங்கை!
சிறுத்தைகளாய்ச் சிங்கக் குருளைகளாய்
சிலிர்த்துக் கிளம்பிடும் இளைஞர்களே!
சீறும் எரிமலை புயலென மாறி
சரித்திரம் படைக்கும் தம்பிகளே!
பொறுத்தது போதுமெனப்
பொங்கி எழப் போகின்றோமா? அல்லால்;
கருத்தழிந்த கழுதைகளாய் - மேலும்
பொதி சுமக்கப் போகின்றோமா?
கா, கா, கா!
கா, கா, கா,
பாட்டொன்று பராசக்தியில்
கேட்டனையா தம்பி!
பகுத்தறிவாளருக்கே
பாடம் போதிக்கும் உடுமலையார் பாட்டு!
பலன் பெறவே கூலிக்கு மாரடித்துத்
தடம் மாறும் கூட்டத்துக்கு, அது வேட்டு!
கா, கா, கா,
பழைய பாட்டு தம்பி அது;
புதிய பாட்டு கேட்டிடுவாய்!
கா, கா, கா, என்று
காக்கா பிடிக்கிறாங்க இப்போ; அதைக்
கண்டுபிடிச்சு காட்டினாக்கா ரொம்ப தப்போ?
"கட் அவுட்" வச்சாலும் காக்கா; மரபுகளைக்
கத்தரிச்சு எறிஞ்சாலும் காக்கா!
காலடியில் தள்ளி மக்களை மிதிப்பதுபோல் ஏடுகளில்,
கனஜோரா விளம்பர அறிக்கை கொடுத்தாலும் காக்கா!
சபாநாயகரோட ஆசனத்தை ஆக்கிரமிச்சாலும் காக்கா;
சபை நடுவே; அவர், இவர் காலிலே விழுந்தாலும் காக்கா!
சபையினிலே என் ஜாதி உயர் ஜாதின்னு
சவால்விட்டுக் கத்தினாலும் காக்கா!
மகாமகக் குளியலுக்கும் காக்கா; அங்கே,
மாண்டார்கள் நூறு பேர் என்றாலும் காக்கா!
மண்சோறு மந்திரிகள் தின்றாலும் காக்கா!
வெண்சாமரங்கள் வேப்பஞ்சேலை கட்டினாலும் காக்கா
அங்கப்பிரதட்சணம் செஞ்சாலும் காக்கா;
அரிசி விலை அநியாயமாய் ஏறினாலும் காக்கா!
பஸ் கட்டண உயர்வுக்கும் காக்கா;
பல விலைகள் உச்சிக்குப் போனாலும் காக்கா!
கொள்ளைக்கும் காக்கா,
கொலைகளுக்கும் காக்கா,
கொடூரமான வழிப்பறிக்கும் காக்கா,
கோடி கோடியாய்க் குவிச்சாலும் காக்கா!
கொடுமையென்ன சொல்வேனடா தம்பி; இப்போ
கொள்கைக்கே கொள்ளி வைக்குதடா காக்கா!
பெரியார் அண்ணா பேரைச் சொல்லிச் சொல்லி,
பித்தலாட்டம் செய்வோரை தூக்கிப் பிடிக்குதடா காக்கா!
இப்ப, ''இட ஒதுக்கீடு" மீனையும் கொத்துதடா கொக்கா;
இதுக்கும் ஜே போட்டு 'ஜெ'யை வாழ்த்துதடா காக்கா!
பகலவனாய்க் கிழக்கில்
உதித்திடுவோம்!
நாள்தோறும் வெளியாகும் ஏடுகளைப் புரட்டும் போது
தேள்போலும் செய்திகளால் துடிக்கின்றார் தமிழ்மக்கள்
வாள்போலும் ஏழைகளின் வாழ்வுதனை மாய்க்கின்ற ஆட்சி,
தாள் ஏந்தும் மனிதர்கட்கோ ஒரு துளியும் மானமில்லா காட்சி!!
ஆலயத்தில் கொள்ளையென்று அனுதினமும் வருகின்ற செய்தி
ஆண்டவனின் சிலைகளையே அபகரித்தல் பக்தர்களின்
நெஞ்சுக்கு செந்தீ
"காலன்" பசிக்குத் தீனியாகக் காலராவும் பரவுதாம்
காவல் நிலையங்களில் கற்பழிப்பு கொலைகளும் தினம் தொடரு
தாம்!
ஆட்சியில் இருப்போர்க்கு அவசியம் தேவைதான் பாதுகாப்பு;
அதனை வேண்டாமென்று கூறுகின்ற அறியாமை நமக்கில்லை!
அதற்காக ஆயிரம் ஆயிரமாய்ப் போலீசார் அணி வகுத்து
அசையா நெடுமரமாய் சாலைதோறும் தவம் செய்தல்
தேவைதானா?
வெள்ளத்தின் பாதிப்பால் குமுறுகின்றார் குமரி மக்கள்
உள்ளத்தில் கடுகளவும் கவலையின்றி - முதலமைச்சர்
கார்போக மலர்பாதை அமைக்கின்றார்; நன்றாகத்தான்
காக்காய் பிடிக்கின்றார் - நாடென்ன உருப்படுமா?
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧
நடக்காத திட்டங்கட்கு முழுப்பக்க விளம்பரங்கள்
நான் திராவிட தீபத்தை ஏந்துகின்றேன் என முழக்கம்!
நந்திக் கிடக்கின்றார் பணம், பதவி, சலுகைகளை; அவரெல்லாம்
நன்று நன்று, நீயேதான் திராவிடத்தின் தாயே என்கின்றார்,
வெட்கக் கேடு!
பேருந்துக் கட்டணத்தால் விழிபிதுங்கி; ரேஷன்
பெறுகின்ற அரிசி அளவும் மிகக் குறைந்து,
பேருருவாய் விலைவாசிக் கொடுமை மிக உயர்ந்து,
பெருமூச்சால் நெருப்பைக் கக்குகின்றார் தமிழ் மக்கள்!
இல்லை; தணல்மக்கள்!
உரவிலையுடன் உயர்ந்து விட்ட டீசல், பெட்ரோல், சமையலுக்கு
உபயோகிக்கும் எரிவாயு விலைகளாலே; கண்கள்
உஷ்ணமேறி நிற்கின்றார் உழவர்களும், அவர்களுடன்
உழைக்கின்ற கூட்டத்தாரும், வணிகர்களும்!
தொழில் வரி, நிலவரி, பயிர் வரி என்று
தொகை தொகையாய் வரிகளைக் கொண்டு-
தொல்லை தரும் ஆட்சியாளர் செயல்களைக் கண்டு
எல்லையுண்டு பொறுமைக்குமென்று எழுந்து விட்டார் - இன்று!
லஞ்ச லாவண்ய ஊழல்களோ கோடி கோடி
மஞ்சம் விரித்து மகிழ்ந்து பாடி ஆடிடவும்
கொஞ்சமும் "லஜ்ஜை"யின்றி இவர்கள்
கோட்டையில் அமர்ந்து பிறரைச் சாடிடவும்,
இத்தனையும் பார்த்துப் பொறுத்திருக்க
இஃதென்ன தமிழ்நாடா: அல்லது
இடுகாடா? சுடுகாடா? எனவேதான்
இனிப் பொறுப்பதில்லை என சூளுரைத்து,
நமது உடன் பிறப்புகள் எல்லோரும்
நாடு வாழ்ந்திடவும் நலிவு தீர்ந்திடவும்
தோழமைக் கட்சி அணிகளுடன்
தோள் சேர்த்துக் கிளம்பிடுவோம்!
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧
நம்பி வாக்களித்த மக்களை எல்லாம்
நட்டாற்றில் விட்டு விட்ட
நயவஞ்சகர்க்குப் புத்தி புகட்ட
நவம்பரில் ஆர்பாட்ட அறப்போர் முதலில்!
அடுத்த கட்டம்; அனைத்துக் கட்சி முடிவின்படி
தொடுத்திடும்கணை முழு அடைப்பாம்! இனியும்
படுத்திருத்தல் ஆகாது மக்கள் எழுச்சி எனப்
பகலவனாய்க் கிழக்கில் உதித்திடுவோம்!
திசை திருப்பல் நியாயம்தானா?
பூமிதனைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு
