உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 70 · 70 / 77

அனுபவம் பெற்றேன் - அனுபவம் பெற்றேன்.

வந்ததும் தருவேன் விடுதலை வாழ்வு!

பறப்பாய், பறப்பாய், உயரப் பறப்பாய்!

கட்டிய கால்கள் விடுபடும்; உடனே

எட்டிய மட்டும் ஏறிப் பறப்பாய்!

எழில் நிறப் பெண்ணே எங்கும் பறப்பாய்!

கூண்டில் உன்னை அடைத்தேன் கிளியே!

மன்னித்து விடுக! கூண்டின் கஷ்டம்

புரிந்து கொண்டேன். கூண்டின் கஷ்டம்

புரிந்து கொண்டதால் கூண்டுக்கிளியுனைத்

திறந்து விடுவேன். ஆனால் கிளியே

கூண்டின் கஷ்டம் புரிந்தோர் இங்கு

ஆண்டிட வந்தார்.

மாண்டிட எம்மைக் கூண்டினில் போட்டார்!

ஏனோ கிளியே! ஏனோ கிளியே!

பதிலும் சொல்வாய் பச்சைக் கிளியே!

உன்னை நான் அடைத்ததால் என்னை அடைத்தார்

என்றே சொல்வாய் நன்று கிளியே;

நீ யாரை அடைத்ததால் நானுன்னை அடைத்தேனோ?

(1971-ஆம் ஆண்டு அமெரிக்க அரசின்

அழைப்பை ஏற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது

ஆர்லந்தோ ஏரியில் அழகான நீரூற்று

ஒன்றைக் கண்ட கலைஞர் உடனேயே எழுதிய கவிதை )

ஆர்லந்தோ என்னும் நகரில் அரியதோர் ஏரியிலே

அழகிய மத்தாப்பூ ஊற்றொன்று கண்டேன்

ஒளி விளக்குப் போடுகின்ற தாளத்திற்கு

ஒரு லயமும் பிசகாமல் ஆடுகின்ற

நீரூற்று ஆட்டக்காரி நாட்டியத்தின்

நேர்த்தியென்ன சொல்வேன்!

பசும்புல் தரைமீது பால் நிறத்துப்

பனிக்கட்டி உருள்வதுபோல் ஓர் காட்சி - அதைப்

பார்த்துக் கொண்டிருக்கும் போதே

'படக்' என மாறிவிடும் மற்றோர் காட்சி!

இப்படித்தான் இங்குள்ள 'அப்போலோ' கிளம்பிற்றென்று

இருள்கிழித்து வானேறும் நீரின் கரங்கள்

பொற்கொல்லர் பட்டறையில்

பொன் பரப்பும் மஞ்சள் ஒளி

விற்பட்ட அம்பு போல

விர்ரென்று எழுந்து பாயும்.

கற்காலக் கொள்கை மனிதர்

கடவுளர்கள் சந்நிதியில்

காவுக்கு ஓர் உயிரை வெட்டும்போது

பீறிட்டுக் கிளம்புகின்ற இரத்தம் போல

சீறித்தான் தாவுதய்யோ சிவப்பு வண்ணம்.

மார்கழித் திருநாளில் நம்மூரில்

மங்கையர்கள் திருவாயில்

பாவிரித்துத் தத்தம் தெருவாயில் பரங்கிப்

பூவிரித்து வைக்கின்ற கோலம் போல்

கண்கொள்ளாக் காட்சி கண்டேன்.

நல்ல வேளை -

தனியாக ரசிக்கின்ற வாய்ப்பெனக்கு

தப்பினேன் அதனாலே!

பெண்ணொருத்தி அருகிருந்தால் நீரூற்றின்

வண்ணத்தைக் கணக்கெடுத்து - மறுநாளே

வகைக்கு ஒன்றாய் சேலை கேட்பாள்!

வானம் பொய்த்துத் தமிழகத்தில் வறட்சி

மூண்டபோது மழையிரந்து 23.3.1975

அன்று முரசொலியில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்

எழுதியது.

வறட்சியின் நெருப்புக் காட்டை - நீ

வடித்திடும் கண்ணீரால் அணைத்துவிடு!

மின்னிடும் உன் சிரிப்பெங்கே?

முழங்கிடும் இடிப் பேச்செங்கே?

பன்னெடும் நாளாய் நின்றன்

பன்னீர்க் குளியலின்றி

என்னருந் தமிழகம்தான்

ஏங்குதல் உணர்ந்திடுக!

வானமே பொழிக நீ! எம்மனோர்

வாட்டம் துடைத்திடவே-

மானமே பெரிதென்றெண்ணும்

மறத் தமிழ் குலத்தார் மீது

மாசுகள் கற்பித்தேனும்

மகுடத்தைப் பறிக்கலாமென்று

மத்தியில் உள்ளோர் சிலர்

அவதூறுக்

கத்தியை வீசுகின்றார் - அவர்தம்

புத்தியைத் தீட்டிடவே

பொழிந்திடுக வானமே நீதான்!

இந்துக்கள் முஸ்லீம்கள் இங்குள்ள கிறித்தவர்கள் -

பந்துக்கள் வேண்டுகின்றார்.

முந்துத் தமிழ்போல் மும்மாரி பொழிக என்று!

நல்லவர்கள் அழைக்கின்றார்

நன்றியற்றவரோ நீ கருணைகாட்டாமல்

இருக்க வேண்டுமென நினைக்கின்றார் - அவர்தம்

அனல் நெஞ்சம் குளிரடைய உன்

புனல் கரத்தை நீட்டிடுக!

வானமே பொழிக நீ - தமிழ்

வையகம் வாழவே!

உடன்பிறப்பே! ஒன்று சொல்வேன் நினைவில் வைக்க!

கடன்பட்டோம் எந்நாளும் நாடு காக்க

முரண்பட்டோர்க்கில்லை இக் கழகத்தில் வேலை.

இடம் பிடித்து வாழ்ந்தவர்கள் எங்கோ செல்வர்

தடம் புரளாச் சோதரர்கள் ஒன்றாய் நிற்பர்.

இந்திய மண்ணுக்கோர் தீமை

எங்கிருந்து வந்தாலும், உடன்

விந்திய இமயம் போல்

வீரத்தோள் உயர்த்தி வெல்வோம்.

தீங்கொன்று நாட்டுக் கெனிலோ

தி.மு.க. துள்ளி எழும் - தன்

தீர்மானம், கோரிக்கை அக்கணமே தள்ளிவைத்து

மண்மானம் காப்பதற்கு மார்தட்ட மறக்க மாட்டோம்.

நம் கழக வரலாற்றுச் சான்று இது;

நான் ஏதோ புதிதாக இன்றைக்குச் சொல்லவில்லை.

நம் கடமை என்றென்றும் நாட்டுத் தொண்டு.

நலமாக மக்கள் வாழ அமைதி காப்போம்

நன்னெறிகள் நிலைப்பதற்கு வழிவகுப்போம்.

அவர் உணர்வாரோ!

யார் அறிவார்?

உடன் பிறப்பே,

திட்டித் தீர்க்கின்றார் - என்னைத்

திட்டித் தீர்க்கின்றார் - நான்

தீயுலையில் காய்ச்சிய சொல் எடுத்து

சுட்டிட மாட்டேனா என எதிர்பார்த்துத்

திட்டித் தீர்க்கின்றார்!

பட்டொளி வீசிடும் பதவியில் அமரப்

பலவழி முயன்று - ஒரு வழி கண்டு

திட்டித் தீர்க்கின்றார் - என்னை!

"எப்படித்தாக்குதல்? இன்னும் பாரீர்!

தப்பிட முடியுமோ - கருணாநிதியால்? உமது

சொற்படி கேட்பேன் பாதமும்

சொறிவேன்!

சுயமரியாதையைக் கனவிலும் நினையேன்!

தயை புரிந்து தந்திடுக பதவி!

கட்டிப் பிடிக்கின்றார்

தோட்டத்தார் காலை அதனால்

திட்டித் தீர்க்கின்றார்

தீ நாக்கு சுழற்றுகின்றார்!

பதர்களுக்குப் பதில் சொல்ல

புதர் வாழ் சிறுத்தைகளா தேவை?

இவர்களுக்குப்பதில் சொன்னால்

அதைக்கொண்டே பதவி பெற ஓர் திட்டம்!

அதனால்தான்

திட்டித் தீர்க்கின்றார் என்னை;

கட்டிப் பிடிக்கின்றார் அவர் காலை!

பதவியல்ல பண உதவி போதுமென

''பத்துத்தலையோர்" கைநீட்டுவதும் நானறிவேன்!

போகட்டும் பிழைத்துப்போகட்டு மென்றும்

ஆகட்டும் அவர் காரியம் ஆகட்டும் என்றும்

ஏசட்டும் அதற்காக என்னை யென்றே

எதிர்த்தொரு வார்த்தை சொல்லாது

விடுகின்றேன் நான்!

வேழத்தைத் தாக்குதல் வேங்கையின் வீரம்