உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 62 · 62 / 77

உழுது பண்படுத்தி

உரிய முறை நடவு நட்டுக் காவல் செய்தால்

அறுவடையின்போது

அழுது புலம்பத் தேவையில்லை.

அந்நாள் தொட்டு இந்நாள் வரை

பதப்படுத்தப்பட்ட நிலம் இது!

பக்குவமடைந்த பூமி! அது

திராவிட இயக்கம் திரட்டிய செல்வம்.

நெல் விதைத்தால், தவறி இங்குப்

புல் விளையாது!

கல்வி வேலை வாய்ப்புகளில்

சமூக அடிப்படையே தேவையென்னும்

நல்லதோர் இட ஒதுக்கீடே

நம் இயக்க முழக்கமாகும்!

அதனாலே ஆதிக்க புரிக்

கூச்சல் எல்லாம்

அரவமொன்று தடி கண்டால்

அடங்குதல் போல் அடங்கிப் போகும்.

சிறு நரிகள் வால் தூக்கி

பொருதிடுவோம் வருக எனில்

சிங்க ஏறுகள் பாய்ந்தோடி

குகை இடுக்கில் பதுங்கிடுமோ?

எலிகள் நடனம் ஆடுமிங்கே - அதற்குப்

புலிகள் தாளம் போட்டிடுமோ?

அலிகளின் ஆர்ப்பாட்ட மெல்லாம்

அதுகளைப் போல்

அலிகளிடம் தான் செல்லும் — அந்த

ஆண் மக்களை அது எப்படி வெல்லும்?

சங்கந் தரு

தங்கத் தமிழ்

வங்கக் கடல்

பொங்கும் — இளம்

சிங்கக் குரல்

எங்கும் எழ

ஒன்றே குலம்

என்றே சொல்லி

வாழ்ந்த இனம்;

பண்டு தொட்டுக்

கொண்டு கொடுத்த இனம்;

உண்டு கொழுக்க

வந்த கூட்டம்

சிண்டு முடிந்து

சீர் குலையவே

ஒரு சாதி

தமிழ்ச் சாதி

பல சாதியானதே! அதனால்

பலவீனமானதே!!

சூழ்ச்சி வென்றது

சூது பலித்தது — இனி

வீழ்ச்சியில்லை யென

வீணர்கள் பாடினர்!

வெறி கொண்டு ஆடினர்!

அறிவார் கல்வியில்

அரசுப் பணிகளில்

பதுக்கிய இடமெல்லாம்

தம்மதே என்று

வதக்கியே பிறரது

வாழ்வினைப் பறித்த

ஓர் பிரிவு மக்களிடம்

போர் புரியத் தயங்கியதால்

செதுக்கிய சிலைகளாய்ச்

செயலற்றுக் கிடந்தோம் அன்று!

நடக்கும் இருளை

நகர்த்தும் பகல் போல்

நாளும் வந்தது

கோளும் தொலைந்தது!

ஒதுக்கியே தீர்வது

ஒடுக்கப்பட்டோருக்கு

இட ஒதுக்கீடு என;

எதிர் நீச்சல் போட்டு

எழுந்து நின்றது;

திராவிட இயக்கம்!

தென்னக மயக்கம்

தீர்க்க முனைந்தது!

தேடக்கிடைக்காத தெள்ளமுதாய்

தேமதுரக் கீத இசையாய்

தேன்பாகும் தினைமாவும் இணைந்த தொரு

தெவிட்டாத சுவை விருந்தாய்

திக்கற்ற மக்களுக்கு

திசை காட்டும் நிலவொளியாய்

வாய்த்திட்ட நற்பேறு

வாராது வந்த மாமணி

வகுப்புவாரி விகிதாசாரம் — பிற்பட்டோர்

வாழ்வுக்கு ஒரு வரப் பிரசாதம்!

வந்ததைத் தொலைப்போமோ? வஞ்சக

வலைதனில் வீழ்வோமோ?

வெந்ததைத் தின்று — வாயில்

வந்ததை உளறும் மனிதர்

தகுதி, திறமை என எழுதிப் பேசி;

நயமாக நஞ்சைக் கலக்கின்றார்.

நாட்டு மக்கள் உள்ளத்தைக் குழப்புகின்றார்.

"அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவாருண்டோ?"

எனப் பாவேந்தன்

கேட்டதைத் தான்;

நானும் கேட்கின்றேன்!

ஆண்டவன் படைப்பில்

அனைவரும் சமம் எனில்

அவன், உயர்ஜாதிக்கு மட்டும்

தங்கத்தால் மூளை செய்து

தலைக்குள்ளே வைத்தானா?

மற்ற சாதிக் கெல்லாம்

மண்டைக்குள் இருப்பதென்ன?

களிமண்ணா? சுண்ணாம்பா?

கங்கையைப் போல்

வடமொழியில் கவிதை தந்த

வால்மீகி, வியாசனெல்லாம்

பிரமதேவன் கால் பெற்ற.

பிள்ளைகளே!

வள்ளுவன் யார்? கம்பன் யார்?

இளங்கோவடிகள், ஒட்டக் கூத்தன்

இவரெல்லாம் யார்? யார்?

பிரமன் தலையில்

பிறந்ததில்லை இவர்கள்!

ஆனாலும் தமிழ் மொழியின் இமயங்கள்!

நாற்பத்து மூன்று ஆண்டுகளாய்

நாம் பெற்ற சுதந்திரத்தில்

தகுதிக்கும் திறமைக்கும்

தரப்பட்ட வாய்ப்புகளால்

கிழித்த தென்ன?

தைத்த தென்ன?

கிழித்துத் தைத்தது தான் என்ன? என்ன? என்ன?

எதற்காகத் திறமை;

அது தேவையா என்று — நாம்

என்றுமே கேட்டதில்லை!

ஆனால்

ஏகலைவன் வித்தை கற்க

எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை! அவன்

வில்லில் விஜயனையும் வெல்வான் என்று — கட்டை

விரலைக் காணிக்கையாகப் பெற்ற தென்ன நியாயம்?

தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்

தகுதி அவனுக்கேது எனச் சீறி

தலை வெட்டிச் சாய்த்த கதை

இராம பிரான் வரலாறன்றோ?

கட்டை விரலோ, தலையோ

அவன்

காணிக்கையாக -இந்நாளில் எவனும் கேட்டால்

பட்டை உரியும் — சுடுகாட்டில் அவன்

கட்டை வேகும் !

"என்ன இது; என்றைக்கு மில்லாத வெப்பம்

தலைமைக் கவிதையிலே?"

எனக் கேட்கத் தோன்றுகிறதா?

பிறகென்ன?

முதலுக்கே மோசம் வந்த பின்னர்