உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 37 · 37 / 77

வாஞ்சிநாதன் வளர்ந்தான் புயலாய்!

ஆங்கில ஆட்சியின் பிரதிநிதியாக அன்று

ஆஷ்துரை என்பான் நெல்லையில் இருந்தான்

மணியாச்சி நிலையம் வண்டிவந் தடையவும்

கணித்து வைத்தவாறு வாஞ்சிநாதன் குழுவினர்

வளைத்தனர் வண்டியை; கைத்துப்பாக்கிக் குதிரையை

இழுத்தனன் வாஞ்சி; இறந்தான் வெள்ளையன்

தன்மான உணர்வால் தன்னையும் சுட்டுத்

தற்கொலையுண்டான் வாஞ்சி-

தவித்தது அவனது குடும்பம்!

காஞ்சித் திணையெனில் காத்தலே யன்றோ?

வாஞ்சியும் சுதந்திரம் காத்த வரலாற்றினை இந்தத்

தருணம் மறவாது தரவருகின்றார்

அருணாசலம் - இனி அவர் கவி கேட்போம்:

(வாஞ்சிநாதன் பற்றிக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம்

பாடி முடிக்கிறார்)

தன்பெண்டு தன்தாய் தன் குடும்பம் பாராமல்

தாய்நாட்டின் மானம் தனைக்காத்தல் கடமையெனப்

போராட்டக் களத்தில் புனித நெஞ்சத்தால் கலந்து

தேரோட்டம் காணத் திரள்வதுபோல் அணி அணியாய்

வருகின்ற தொண்டர்க்கு வாகான தலைவனாய்த் - தெம்பு

தருகின்ற வீரனாய் வள்ளலாய் உறுமுகின்ற

அதிகாரம் ஆதிக்கம் கண்டும் அஞ்சாது

பிடித்த கொடியினைப் பிடிவாதம் தளராது

அடித்தும் விடாமல் அங்கேயே உயிர்நீத்த

சாகாத குமரன்; அவன் கொடிகாத்த குமரன் -

மிதந்திடும் தியாக வானில் மின்னிடும் துருவ விண்மீன்

சிதம்பர ரகுநாதன் இங்கே

இதம்பெறக் காட்டக் கேட்போம்:

(திருப்பூர் குமரன் பற்றிக் கவிஞர்

தொ.மு.சிதம்பர ரகுநாதன் பாடி முடிக்கிறார்)

அடுத்து.

எழுவரின் பெயரை ஈங்கே எழுதி நாம் காட்டிவிட்டோம்

கழிபெரும் சுதந்திரத்தைக் கண்டவர் இவர்கள் தாமா?

கோபுரக் கலசம் போலே குன்றின்மேல் விளக்குப்போலே

மாபெரும் புகழ்பெற்றோர்கள் மற்றையோர் எத்தனைபேர்?

மண்ணுக்குள் மறைந்திருக்கும் ஆணிவேர் போலே

கண்ணுக்குப் புலனாகாத தியாகிகள் எத்தனை பேர்?

நாயுடு நாயக்கர் முதலியார் என்று

செந்தமிழ் நாட்டின் முந்தைய தலைமுறைக்கு

விடுதலை வேட்கை வித்தூன்றியவர்கள் ஆன

வரதராசலு, பெரியார் ஈ.வே.ரா. திரு.வி.க.,

ஜீவா எல்லாம்

பெயர் தெரியாதோர் பட்டியல்தானா?

அயர்விலாதின்னும் முயல்வோமானால்

ஏராளம் பேர் இருப்பரே தியாகிகள்?

தாராளமாக அவர் புகழ் பாடிட-

என் தனி நண்பர்

தமிழ் அன்பர்-

எங்கிருந்தாலும்

பொங்கும் செந்தமிழால்

ஆடிப்பெருக்கு போல் அழகு தமிழ்ப்பாக்கள்

பாடிப் பெருக்கும் பாவரசென்னும்

கண்ணதாசன் எண்ணம் உணர்ந்திடும்

வண்ணம் பொறுமையாய் வந்துள்ளோம் அனைவரும்.

சுதந்திரக் கிளியே! இதந்தருஞ் சொல்லில்

மிதந்திடுங் குயிலே! மெல்லிசை கேட்போம்

வருக வருக தருகநின் கவிதை:

(பெயர் தெரியாத் தியாகிகள் பற்றிக்

கவிஞர் கண்ணதாசன் பாடி முடிக்கிறார்.)

“சித்திரச் சோலைகளே உமைநன்கு

திருத்த இப்டாரினிலே - முன்னம்

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே?

தாமரை பூத்த தடாகங்களே - உமைத்

தந்தஅக் காலத்திலே - எங்கள்

தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்

சொல்லவோ ஞாலத்திலே.”

என்ற புரட்சிக் கவிஞரின் வரிகள்

நன்றென எண்ணி நாட்டு விடுதலை

வெள்ளி விழாவினை வெற்றியாய்க் கடந்து

உள்ளம் உவக்க ஒப்பிலாப் பொன்விழா

விரைவில் வருகென விழைகிறேன்

பெறுகஎன் வாழ்த்தும் வணக்கமும் நன்றியும்!

அண்ணன் இருக்கின்றார்

2.9.1972 அன்று சென்னை கலைவாணர்

அரங்கத்தில் நடைபெற்ற கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

தலைமைக் கவிதையுரையில் சில பகுதிகள்.

சந்தனமே!

தென் பொதிகை தவழ்ந்து வரும் இளங்காற்றே!

நந்தாச் சுடர் விளக்கே!

நறுமணத்துப் புதுமலரே!

கண்ணியத்தைக் கடமையினைக் கட்டுப்பாடெனும்

பண்பைக் கண்போலக் காத்திடற்குக்

கற்பித்த பெருந்தகையே!

சிங்கத் தமிழர்களின் சிந்தையெலாம் பறிகொண்டு

வங்கக் கடலோரம் வாய்மூடிக் கண்மூடி

மோனத் தவமிருக்கும் முத்தமிழே!

குடிசையெலாம் மேலுயர்ந்து

கோபுரமாய் விளங்கிடவும்

மடமையிருள், கொல்வறுமை

மடிந்தே மருகிடவும்

எல்லாரும் நலனெல்லாம்

எய்தி மகிழ்ந்திடவும்

நல்லதோராட்சியினைத்

தோற்றுவித்த நாயகமே!

எண்ணக் குறிப்பறிந்தே

ஈடேற்றும் தம்பியரின் அண்ணாவே!

எனையிங்கே ஆளாக்கிக்

காத்திட்ட ஆருயிரே!

நும்கனவு அத்தனையும் நனவாக்கும்

சீரியநற் பணியினையே செய்கின்றோம்

நாள்தோறும்!

செய்பணிகள் அனைத்திலுந்தான்

அண்ணனே! நீ இருக்கின்றாய்!

தாயே!

தாயின் குரலில்

“தம்பி!” எனவழைத்த தருவே!

தாய் அழைக்கும் போதெல்லாம்

நீயழைக்கக் காண்கின்றேன்!

தாயின் அழைப்பில்

அண்ணனே! நீ இருக்கின்றாய்!

ஏழைமாந்தர்

உன் தம்பி ஆட்சியிலே சிரிக்கின்றார்

அச்சிரிப்பில் ஆண்டவனைக் காண்பார் பலர்

ஆனால்....

நாங்களோ உன்னைக் காணுகின்றோம்!

ஏழையின் சிரிப்பில்

அண்ணனே! நீ இருக்கின்றாய்!

அன்றொரு நாள் ஆரூரில்

கண்பெற்ற மூதாட்டி

உன் தம்பியைக் ‘கடவுள்’ என்றாள்.

அந்தக் ‘கடவுளோ’

உன்னைக் கைதூக்கித்

தொழுதார் அங்கே!

ஆம்; அண்ணா!

கத்திமுனைபட்டு அந்த ஏழையரின்

கண்ணெல்லாம் திறக்கும்போது

அந்தக் கண்ணிலே-

கண்பார்வையிலே-

உன் சிரித்தமுகம் தோன்றுது ஐயா!

காலையிலே மாலையிலே

கடும்பணி ஆற்றுகையில்

எப்பொழுதும் எந்நேரமும்

எப்பொருளிலும் அண்ணனே! நீ இருக்கின்றாய்!

அம்மட்டோ....

எங்கள் பணி முடித்து

என்றோ ஒருநாள்

உன் மடியில் தூங்க

வரும்போதும்...

அண்ணனே! நீ