உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 14 · 14 / 77

தந்தையோ வள்ளுவராம்!

“அண்ணா” எனத் தழுவிக் கொண்டார்.

“அன்புச் சோதரிகாள் உமது கரம் பிடிக்க

ஆறு கவி கொண்டிங்கு வருகின்றேன்

அவர்கள் கூறு கவி கேட்ட பின்னர்

மாலை சூடி மகிழ்ந்திருப்பீர்” என்று சொன்னேன்.

சரியென்றார்; வந்து விட்டார் கவிஞர்களும்!

அம்மவோ அதிலோர் கவி பெண் கவி!

“ஆறாவது பெண்ணுக்கு ஆண் கவி எங்கே?” என்றார்.

திடுக்கிட்டேன் விழித்திட்டேன்

கலைந்திட்ட கனவோடு கவியரங்கு வந்திட்டேன்

கனவு கலைத்த கவி கைலாசக் கவி சௌந்தரா

கைலாசக் கவி அவை நடுவே வந்துள்ளார்

அவர் இனி - அவை கூறல் நன்றெனவே - அவர்

“இனியவை கூறல்” நன்றெனவே - இனி

அவை கூறாது ஒதுங்குகின்றேன்.

இனியவை கூறல் எனுந் தலைப்பில்

அம்மை முழங்கிடுவார்:

(திருமதி சௌந்தரா கைலாசம் “இனியவை கூறல்”

பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து அடக்கம்;

அடக்கத்தின் விளைநிலமாய் அறிவே நிற்கும் அது

முடக்கத்தான் துவையலைப் போல் நோயும் தீர்க்கும்

ஆணவ நோயும் தீர்க்கும்

நடக்கத்தான் கால் என்போம்; உதைக்க அல்ல!

மடக்கத்தான் கத்தி என்றால் தேவையில்லை - பழம்

அறுக்கத்தான் கத்தி வேண்டும், உயிர் பறிக்க அல்ல.

அடக்கத்தில் எழும் வீரம் உண்மை வீரம்

வழக்கத்து வாய்வீரம் போலி வீரம்

ஆமைபோல் ஐம்பொறியும் அடக்க வேண்டும்

அதற்காக ஊமைபோல் குருடு போல் செவிடுபோல்

ஊர் நடுவே திரிதல் நன்றோ?

கண் அடக்கம் இமைக் கதவில்

நா அடக்கம் வாய்ச் சிறையில்

மூச்சு அடக்கம் காற்றினிலே

மெய் அடக்கம் கல்லறையில்

நல்ல மன அடக்கம் அறிவொளியில்

எனைத் தலைமை தாங்க ஆணையிட்ட அவையோர்க்கு

நன்றியெனல் அவையடக்கம்;

எனைத் தலைமை தாங்க மன்றாடிக் கேட்டுக் கொண்ட மன்றத்தார்க்கு

ஆசியெனல் மண்டை வீக்கம்.

யாகாவாராயினும் நாகாத்தல் அடக்கத்தின் முதற்படியாம்;

வாய்க்குள் ஒரு “வெறி நாய்” காத்தல் ஆணவத்தின் மேற்படியாம்!

அங்கிருந்து உருண்டு விட்டால் உருவின்றிச் சுருண்டு போகும் நெஞ்சழுத்தம்

இதையெல்லாம் அவை நடுவே காணிக்கை ஆக்குதற்கு

மாணிக்க வாசகர் வருகின்றார்.

பெற்றுக் கொள்வோம்.

(கவிஞர் மாணிக்கவாசகம் “அடக்கம்” பற்றிப்

பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து பொறை;

பிறையொன்று பொறுத்திருந்து நிலவாகும்

பொறை கொண்டார் பொறுத்திருந்து நிலமாள்வார்

இரையொன்று வருமட்டும் காத்திருக்கும் கொக்கு;

அதனைப் பொறை யென்று சொல்லாதீர்

தரைமீது அப்பறவை கற்ற சூழ்ச்சி

இகழ்வார்ப் பொறுத்தல் தலையாய்க் கொண்டோன்

அகழ்வார் தாங்கும் நிலமென நவின்றார்

இகழ்வார்க்கிருப்பது தலையும் அல்ல

ஏசிக் கிறுக்குதல் கலையும் அல்ல

புகழ்வார் பின்னே போதலும் தீது

இகழ்வார் எதிர்த்தல் அதனிலும் தீது

பொறையுடை மேலோன் திரை கடல் இதயம்

கறை படு விதமாய்த் தாக்கி மகிழ்வோர்

தரை படு மீனாய்த் தவிப்பது உண்மை.

குறை படு சொல்லால் குத்துதல் எளிது;

அதை நிறை படு மனத்தால் தாங்குதல் அரிது;

இதனைப் பொறை யெனுந் தலைப்பில் பொழிந்திட வந்தார்

ஆற்றல் அரசெனும் ஆர்வக் கவிஞர்:

(கவிஞர் ஆற்றலரசு ‘பொறை’ பற்றிப்

பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து வெகுளாமை;

தன்னையே கொல்லும் சினம் என்று

தமிழ் மேதை வள்ளுவரும் குறள் தந்தார்

சினந்தவர்கள் ஆர்த்தெழுந்து, கண் சிவந்தவராய் ஆடுவதும்,

குடியில்

மிதந்தவர்கள் தடுமாறிக், கண்

சிவந்து தள்ளாடுவதும் ஒன்றேயாம்

ஆமையிலே பொறாமை நல்லதல்ல

இயலாமை ஏற்றதல்ல

அறியாமை நாடழிக்கும்

கொல்லாமை போல நல்லாமை

வெகுளாமை -

வேறாமை புகுந்துவிட்டால் வீடு நாசம்; நாடு நாசம்;

வெகுளலுக்கு முகம் நூறு

பல் நெறித்தல்

உதடழுத்தல்

கண் பிதுக்கல்

இப்படி நூறு விதம்

வெகுளலுக்கு முகம் நூறு

நூறு முகம் மதுவெறி போல் மாறிவிடும்

நூரு முகம்மது ஒளிப்பாட்டு அதனை ஆறவிடும்:

(கவிஞர் நூர் முகம்மது “வெகுளாமை” பற்றிப்

பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து இன்னா செய்யாமை;

இஃதுமோர் ஆமை ஆனால் நல்லாமை:

இதனைக் கல்லாமை; பெரிய தீமை!

கன்னமொன்றில் அடித்திட்டால் இன்னுமொன்றைக் காட்டென்றார் ஏசு

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல் நலமென்றார் குறளார்

இந்நா, சொல்வதெலாம் இன்னா....

என் நா அவ்வாறே பழகிற்றென்று

கன்னா பின்னா சொல் இறைப்போர் அறிவு அணியில்

முன்னா? பின்னா? எதிலும் இருக்க மாட்டார்-

மூலையில்தான் கிடப்பார்.

இதனையெல்லாம்

சுரதாவாம் சுவைக் கவிஞர்

சொல்லடுக்கி விளக்கிடுவார்:

(கவிஞர் சுரதா “இன்னா செய்யாமை” பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து அருளுடைமை;

பொருளுடையார்க் கிவ்வுலகம்

அருளுடையார்க் கவ்வுலகமென்று

இருளுடையார் நெஞ்சத்தில் விளக்கேற்றி வைத்தார்

அவ்வுலகம் எவ்வுலகம் என்பதிலே ஆராய்ச்சி பல உண்டு

பல் உயிரில் சில உயிர்கள் போகின்ற

நல் உலகம் அவ்வுலகம் என மொழிவாரை நாமறிவோம்.

கல் உரித்த நாரென்றால் நம்புவதா?

சொல் உரித்தார் சொர்க்கமென்று நரகமென்று

எள் உதிர்த்து ஏகலாம் அங்கே என்றார்

முள் உதித்த ரோஜா போல் முழு உண்மை மலரட்டும்.

அறிவெங்கே? விளைவெங்கே? அனைத்தும் பாழாம்!

ஏட்டில் எழுத்தில் இருக்கும் சொர்க்கம்

ஏழைக்குதவுதல் இங்கே சொர்க்கம்

எளிமை பழகுதல் இனிய சொர்க்கம்

இனியவை கூறல் இங்கே சொர்க்கம்

இறந்தும் வாழ்தல் இறவா சொர்க்கம்

இவ்வுலகம் அடைவதற்கே அருளுடைமை வேண்டுமென்றார்

இனிய கவி தூரனாரும் இதை விளக்க வந்துவிட்டார்:

(கவிஞர் தூரன் “அருளுடைமை” பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

மலர் குவிப்பார் - கவி

மலர் குவிப்பார் என்றிருந்தேன் ஏமாந்தேன்; இவர்

மலர் குவித்தால் மாலையாகத் தொடுத்திடத்தான்

காத்திருந்தேன்!

இவரோ

ஆளுக்கொரு மாலை அழகாகக் கட்டிவிட்டார்.

தமிழ்த்தாயின் தாளுக்கொரு மாலை:

வள்ளுவரின் தோளுக்கொரு மாலை:

அறம் பொருள் இன்பமெனும் ஒவ்வொரு